சவுண்டை விட வேகமாக செல்லும் நாசாவின் அல்ட்ராசோனிக் பிளைட்! இதில் இன்னொரு ஸ்பெஷல் இருக்கு!
நாசாவின் புதிய சோதனை தான் 'சூப்பர்சோனிக் எக்ஸ்-பிளிக்ட்'. தற்பொழுது இந்த பிளைட் இறுதிக்கட்ட சோதனைகளுக்கு ரெடியாகி, பறக்கத் தயாராக உள்ளது. நாசா 2018 ஆம் ஆண்டிலிருந்து இந்த சூப்பர்சோனிக் பிளைட் உருவாக்கத்தில் ஈடுபட்டு வருகிறது. நாசா உருவாக்கி வரும் இந்த விமானம் ஒலியின் வேகத்தை விட வேகமாக செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாசாவின் சூப்பர்சோனிக் பிளைட் X-59 QueSST
நாசா 2018 இல், இந்த சூப்பர்சோனிக் பிளைட் திட்டத்தைக் கையில் எடுத்து, அப்பொழுதிலிருந்து இந்த திட்டத்திற்கு சூப்பர்சோனிக் பிளைட் X-59 QueSST என்று பெயரிட்டு உருவாக்கி வருகிறது. இப்பொழுது எக்ஸ்-59 எனக் குறிப்பிட்டாலே, அது இந்த சூப்பர்சோனிக் சூப்பர் ஃபாஸ்ட் விமானத்தை மட்டுமே குறிக்கும் என்கிறது நாசா ஆராய்ச்சி மையம். உலகத்தின் முதல் சூப்பர்சோனிக் விமானம் இதுவாக தான் இருக்கும்.

சவுண்டை விட வேகமாகப் பயணிக்கும் பிளைட்
இந்த விமானத்தின் மூலம், நிலத்தின் மேற்பரப்பின் மீது ஆடியோ சவுண்டை விட வேகமாகப் பயணிக்க முடியும் என்று நாசா உறுதிப்படத் தெரிவித்துள்ளது. இந்த விமானத்தை உருவாக்க நாசா நியமித்த லாக்ஹீட் மார்ட்டின், விமானத்தின் இறுதிக்கட்ட பணிகளை 2020ம் ஆண்டின் இறுதிக்குள் முழுமையாக முடிக்கத் திட்டமிடபட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இன்னோவேடிவ் சிஸ்டம்
கலிஃபோர்னியாவின் பாம்டேலில் உள்ள லாக்ஹீட் மார்ட்டின் ஸ்கங்க் ஒர்க்ஸில் விமானத்தின் இறக்கை தீவிரமாகத் தயார் செய்யப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார். மேலும் விமானத்தின் இன்னோவேடிவ் சிஸ்டம் புதுமையான அமைப்புகளுடன் தயாராகி சோதனை செய்யப்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சூப்பர்சோனிக் எக்ஸ்-59 எப்போது தயாராகும்?
'சில ஆதாரச் சோதனைகளைச் செய்வதற்கு நாங்கள் திட்டமிட்டுள்ளோம், அதேபோல் விமானத்தின் கணினிகளின் சில சோதனை ஓட்டங்களைச் செய்யவும் திட்டமிட்டுள்ளோம், சோதனைகள் வெற்றி அடைந்த பின்னர் சூப்பர்சோனிக் எக்ஸ்-59 விமானத்தின் முதல் சோதனை ஓட்டம் 2021-ன் துவக்கத்தில் நடைபெறும்' என்று லாக்ஹீட் மார்ட்டின் கூறியுள்ளார்.
சூப்பர்சோனிக் வேகத்தில் அதிக சத்தம் இருக்குமே?
சூப்பர்சோனிக் வேகத்தில் பயணிக்கும் ஒரு விமானம், அல்லது ஒலியின் வேகத்தை விட வேகமாக பிறகும் ஒரு பொருள் பெரிய சத்ததுடன் இடையூறு ஏற்படுவதைத் தவிர்க்கும் அளவுக்கு அமைதியாக இருக்குமா? என்ற பலரின் கேள்விக்குப் பதில் அளிக்கப்பட்டுள்ளது. விமானத்தை உருவாக்கும் பிரதிநிதியின் கூற்றுப்படி, இந்த விமானம் அல்ட்ராபாஸ்ட் வேகத்துடன், அல்ட்ரா அமைதியுடன் பறக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அல்ட்ராபாஸ்ட் வேகத்துடன், அல்ட்ரா அமைதி
என்னதான் சூப்பர்சோனிக் வேகத்தில் பயணம் செய்தாலும், பெரிய சத்தம் எதுவும் இல்லாமல் பயணிக்கும்படி தான் இந்த சூப்பர்சோனிக் எக்ஸ்-59 விமானம் உருவாக்கப்படுகிறதாம். இதன் தனிச் சிறப்பே இதுவாகத் தான் இருக்க முடியும் என்று நாசா கூறியுள்ளது. அதற்கான முயற்சியிலும் நாசா வெற்றி நோக்கிச் செயல்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றாம் கட்ட சோதனையில் என்ன நடக்கும்?
லாக்ஹீட் மார்ட்டின் விளக்கமளித்தபடி, விமானத்தை உருவாக்குவது மட்டும் தான் திட்டத்தின் முதல் கட்டமாக இருந்துள்ளது, இரண்டாம் கட்ட சோதனையில், அக்குஸ்டிக் சான்றிதழ்கள் மற்றும் ஒலி சரிபார்ப்பு சோதனை நடத்தப்படும். அதன்பின், மூன்றாம் கட்டத்தில், லோ-பூம் (low-boom) டெமோன்ஸ்ட்ரஷன் நடத்தப்படும். மக்கள் இதன் சத்தத்தைக் கேட்க முடிகிறதா என்று சோதனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications