நாசா சொல்லும் சூப்பர் தகவல்: பூமிக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்ட TOI-1231 b சிறுகோளில் நீர் ஆதாரமா?

|

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா தற்பொழுது பூமிக்கு மிக அருகில் ஒரு புதிய சிறுகோளைக் கண்டுபிடித்துள்ளது. நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள இந்த புதிய சிறுகோள் பூமியை விட மூன்றரை மடங்கு பெரியது என்று அடையாளம் கண்டுள்ளனர். இந்த சிறுகோளில் நீர் ஆத்திரம் இருக்க வாய்ப்புள்ளது என்றும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த புதிய சிறுகோள் பற்றிய கூடுதல் சுவாரசியமான தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.

நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள TOI-1231 b

நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள TOI-1231 b

தற்பொழுது நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள சிறுகோள், பூமிக் கோளில் இருந்து சுமார் 90 ஒளியாண்டுகள் தொலைவில் மட்டுமே உள்ளது என்று நாசா அறிவித்துள்ளது. இந்த புதிய சிறுகோளுக்கு நாசா விஞ்ஞானிகள் TOI-1231 b என்று பெயரிட்டுள்ளனர். அதுமட்டுமின்றி, விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள இந்த புதிய TOI-1231 b சிறுகோளானது பார்ப்பதற்கு அச்சு அசல் நெப்டியூன் கிரகம் போல் காட்சியளிப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பூமியை விட 3 ½ மடங்கு பெரியது

பூமியை விட 3 ½ மடங்கு பெரியது

இந்த சிறுகோள் வளமான வளிமண்டலத்தைக் கொண்ட ஒரு வாயு உலகம் ஆய்வுக்குக் குழு தெரிவித்துள்ளது. இந்த கிரகம் பூமியை விட 3 ½ மடங்கு பெரியது மற்றும் 134 டிகிரி பாரன்ஹீட் (57 செல்சியஸ்) வெப்பநிலையில் பூமியின் தரத்தால் சூடாக இருக்கிறது. ஆனால் வானியலாளர்கள் இது ஒரு "குளிரான," கிரகம் என்றும், ஒப்பீட்டளவில் சிறிய கிரகங்களில் மிகவும் குளிரான கிரகங்களில் இதுவும் ஒன்றாகும் என்று கூறியுள்ளனர், மேலும் அதன் வளிமண்டலத்தின் கூறுகளை விண்வெளி தொலைநோக்கிகள் மூலம் விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

வாடகை வீட்டாளர்களுக்கு ஒரு நற்செய்தி- ஆதார் அட்டை திருத்தத்தில் இனி அந்த தொல்லை இல்லை!வாடகை வீட்டாளர்களுக்கு ஒரு நற்செய்தி- ஆதார் அட்டை திருத்தத்தில் இனி அந்த தொல்லை இல்லை!

சிவப்பு-குள்ள நட்சத்திரத்தைச் சுற்றி வரும் TOI-1231 b

சிவப்பு-குள்ள நட்சத்திரத்தைச் சுற்றி வரும் TOI-1231 b

TOI-1231 b ஒரு சிவப்பு-குள்ள நட்சத்திரத்தைச் சுற்றி வருகிறது என்றும், இது நமது சொந்த கிரகத்தின் சூரியனை விட அளவில் சிறியது என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்த சின்ன நட்சத்திரம் சூரியனை விட நீண்ட காலம் வாழ்ந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறுகோளின் ஒரு வருட காலம் என்பது வெறும் 24 நாட்கள் நீளமானது மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், கிரகம் அதன் நெருங்கிய சுற்றுப்பாதை இருந்தபோதிலும் ஒப்பீட்டளவில் குளிராக இருக்கும், ஏனெனில் அதன் நட்சத்திரமும் குளிரான பக்கத்தில் உள்ளது என்று நாசா கூறியுள்ளது.

"பார்-கோட்" வகை ரீடர்

இந்த மிதமான, நெப்டியூன் அளவிலான எக்ஸோபிளேனட்டின் வளிமண்டலத்தைப் பற்றிய விபரங்களை "பார்-கோட்" வகை ரீடர் மூலம் விஞ்ஞானிகள் ஆராய்ந்துள்ளனர். இதன் பார் கோடு தகவலை வைத்து, விண்மீனின் பிற இடங்களில் இதேபோன்ற உலகங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க இந்த ஆராய்ச்சி அனுமதிக்கும் என்று நாசா கூறியுள்ளது. மேலும் நம்முடையது உட்பட எக்ஸோபிளேனட்டுகள் மற்றும் கிரக அமைப்புகளின் அமைப்பு மற்றும் உருவாக்கம் பற்றிய ஆழமான நுண்ணறிவுகளைக் கொண்டுவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழைய 5 ரூபாய் நோட்டுக்கு இப்போ ரூ.30,000 கிடைக்கிறதா? உங்ககிட்ட இந்த நோட்டு இருக்கானு பாருங்க..பழைய 5 ரூபாய் நோட்டுக்கு இப்போ ரூ.30,000 கிடைக்கிறதா? உங்ககிட்ட இந்த நோட்டு இருக்கானு பாருங்க..

நீர் இருக்க வாய்ப்பு

நீர் இருக்க வாய்ப்பு

அதோடு, இந்த சிறுகோளில் நீர் இருக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் விஞ்ஞானிகள் சந்தேகிக்கின்றனர். அதேபோல், இது அதிக குளிர்ச்சியான தன்மை கொண்டதாக இருக்கவும் வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இன்னும் இந்த சிறுகோள் பற்றிய கூடுதல் தகவல்களை ஆராய விஞ்ஞானிகள் இன்னும் பல ஆய்வுகளை மேற்கொள்ளவிருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
NASAs Exoplanet Exploration Program Discovered New Exoplanet Just 90 Light-Years Away From Earth : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X