பல்பு வாங்கிய நாசா; இனி கற்பூரம் அடிச்சு சத்தியம் பண்ணாலும் ஒருத்தன் நம்ப மாட்டான்.!

இந்த அறிவிப்பானது, அமெரிக்காவின் நிலவு மீதான பயத்தை வெளிப்படுத்துவதோடு நில்லாது, அதன் பழைய வரலாறு ஒன்றையும் தோண்டி எடுத்துள்ளது.

|

அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின்போது, ​​டொனால்ட் டிரம்ப் ஒரு குறிப்பிட்ட விடயத்தை மீண்டும் மீண்டும் கூறினார். அது என்னவென்றால் - "மனிதர்கள் மீண்டும் நிலவில் காலடி எடுத்து வைப்பார்கள்" என்ற வாக்குறுதி தான். தேர்தலில் வென்றார்; அதிபர் ஆனார்; ஆட்சியில் அமர்ந்தார்; காலம் உருண்டு ஓடியது; நாசாவும் அதன் அடுத்தகட்ட நிலவு பயணத்திற்காக தயாராகி வந்தது. இந்நிலைப்பாட்டில், கடந்த வாரம் எதிர்பாராத விதமாக, நாசாவி சந்திர பயணம் சார்ந்த மிஷன் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இனி கற்பூரம் அடிச்சு சத்தியம் பண்ணாலும் ஒருத்தன் நாசாவை நம்ப மாட்டான்!

இந்த அறிவிப்பானது, அமெரிக்காவின் நிலவு மீதான பயத்தை வெளிப்படுத்துவதோடு நில்லாது, அதன் பழைய வரலாறு ஒன்றையும் தோண்டி எடுத்துள்ளது. அது வேறொன்றுமில்லை. 1969-ல் நிகழ்ந்ததாக கூறப்படும் அமெரிக்காவின் மூன் லேண்டிங் போலியானது தான் என்கிற கோட்போட்டுகள் மீண்டும் கிளம்பியுள்ளன.

மெல்ல மெல்ல கிளம்பின சந்தேகங்கள்.!

மெல்ல மெல்ல கிளம்பின சந்தேகங்கள்.!

1960-களில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய இரண்டு நாடுகளுக்கும், யார் முதலில் நிலவிற்கு செல்வது என்கிற ஒரு 'கடும் விண்வெளி யுத்தமே' நடந்தது. சரியாக, 1969-ஆம் ஆண்டு ஜூலை 20-ஆம் தேதி நிலவில் முதல் மனித காலடியை எடுத்து வைத்து அந்த விண்வெளி யுத்ததில் வெற்றி அடைந்தது அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா. அதன் பின் தான் மெல்ல மெல்ல கிளம்பின சந்தேகங்கள்.

பலமான 10 ஆதாரங்கள்.!

பலமான 10 ஆதாரங்கள்.!

அமெரிக்காவின் அப்பலோ விண்கலங்கள், அதன் வீர்ர்கள், அவர்கள் நிலாவிற்கு சென்றது என எல்லாமே பொய் என்றும், அவைகள் எல்லாம், மிகவும் துல்லியமான முறையிலும் திட்டமிட்டு படமாக்கப் பட்டவைகள் என்று புரளிகள் கிளம்பின. அப்படியாக அது பொய் தான், படம் பிடிக்கப்பட்டவைகள் தான், முற்றிலும் புரளிகள் தான் என்பதை நிரூபிக்கும் பல ஆதாரங்கள் வெளியாகின, அதில் குறிப்பிடத்தக்க 10 ஆதாரங்களுக்கு எதிர் பதிலோ அல்லது எதிர் விளக்கமோ இன்றுவரை கிடையாது. அவைங்கள் பின்வருமாறு.!

10. காற்றில் ஆடும் அமெரிக்க கொடி.!

10. காற்றில் ஆடும் அமெரிக்க கொடி.!

அமெரிக்காவின் விண்வெளி வீரர்கள், நிலவில் முதல் கால் தடம் பதிக்கும் நிகழ்ச்சியானது நேரடி ஒளிப்பதிவில் இருந்தது. அதில் நிலவில் நிலை நிறுத்தப்பட்ட அமெரிக்க கொடியானது காற்றில் ஆடுவதை தெளிவாக காண முடிந்தது. காற்று வீசுவதற்கு அதொன்றும் கடற்கரை அல்ல, விண்வெளி என்பதை சூட்டிங் செய்த கும்பல் மறந்து விட்டது போலும்.!

09. நிலவில் பள்ளங்கள் காணப்படவில்லை.!

09. நிலவில் பள்ளங்கள் காணப்படவில்லை.!

நிலவு சற்று கடினமான ஒரு கிரகம் தான், அதற்காக முழுக்க முழுக்க பாறைகளால் நிரம்பிய ஒரு கிரகம் என்று கூறிவிட முடியாது. அப்படியே இருந்தாலும் கூட, பாறை மீது அப்பலோ விண்கலத்தை ட்ரை இறக்கி இருக்க முடியாது. இந்த இடத்தில் தான் எழுகிறது ஒரு சந்தேகம். அப்பல்லோ விண்கலம் நிலவில் தரை இறங்கியதற்க்கான எந்த விதமான பள்ளமும், பதிவான வீடியோ மற்றும் புகைப்படங்கள் என எதிலுமே இல்லை. அதாவது, விண்கலத்தை இவரு இடத்தில் மிகவும் லேசான முறையில் இறக்கி வைக்கப்பட்டது போல் தான் காட்சியளித்தது.

08. பல கோணங்களில் ஒளி ஆதாரம் வருவது ஏன்.?

08. பல கோணங்களில் ஒளி ஆதாரம் வருவது ஏன்.?

ஸ்டூடியோ சென்று புகைப்படம் எடுக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு, பல கோணங்களில் இருந்து லைட் செட் செய்து போட்டோ எடுக்கும் நுட்பம் தெரிந்திருக்கும். நிலவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில், ஒளி ஆதாரமானது பல வகையான கோணங்களில் இருந்து கிடைக்கிறது. அதாவது ஒரு ஸ்டூடியோ செட்டப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் போல காட்சியளிக்கின்றது. நிலவு, பூமியை போன்றே சூரிய குடும்பத்தில் உள்ள ஒரு கிரகம் தான் என்கிற பட்சத்தில், பூமியில் கிடைப்பது போன்றே, ஒற்றை கோணத்திலான வெளிச்சம் தானே கிடைக்க வேண்டும்.?! வெவ்வேறு கோணங்களில் வெளிச்சம் கிடைப்பது ஏன் என்பதற்கு விளக்கம் இல்லை.

07. வான் அலென் ரேடியேஷன் பெல்ட்டை தாண்டியது எப்படி.?

07. வான் அலென் ரேடியேஷன் பெல்ட்டை தாண்டியது எப்படி.?

நாசா அதன் முதல் முயற்சியிலேயே 'வான் அலென் ரேடியேஷன் பெல்ட்' என்ற கடினமான பூமியின் காந்த சக்தி கதிர்வீச்சை தாண்டி, எப்படி நிலாவிற்கு சென்றது என்பது இன்றும் [புரியாத புதிர் தான்.!

06. புகைப்படத்தில் பதிவான விளக்கமில்லாத அந்த பொருள் என்னது.?

06. புகைப்படத்தில் பதிவான விளக்கமில்லாத அந்த பொருள் என்னது.?

நிலவில் இறங்கிய அமெரிக்க விண்வெளி வீரர்கள் நூற்றுக்கணக்கான புகைப்படங்களை எடுத்து தள்ளின. அதில் ஒரு புகைப்படத்தில், விண்வெளி வீரரின் ஹெல்மாட்டில் ஒரு மர்மமான பொருள் காட்சிப்படுகிறது. அது தரை இறங்கிய அப்போலோ கலமும் அல்ல என்கிற பட்சத்தில், அது என்னது என்பது சார்ந்த எந்த விளக்கமும் இல்லை.!

05. பின்னணியில் மறைக்கப்பட்ட கேபிள்கள்.!

05. பின்னணியில் மறைக்கப்பட்ட கேபிள்கள்.!

இது முழுக்க முழுக்க, பூமியில் அரங்கேறிய நாடகம் என்கிறது ஒரு கோட்பாடு. அந்த கோட்பாட்டின் படி, நிலவின் புவி ஈர்ப்பு விசைக்கு ஏற்றபடி விண்வெளி வீரர்கள் கேபிள்களில் இணைக்கப்பட்டு குதித்து குதித்து செல்லப்பட்டனர் என்றும், சில புகைப்படங்களில் கேபிள்களை தெளிவாக பார்க்க முடிகின்றது என்றும் கூறப்படுகிறது.

04. ஆமாம், நட்சத்திரங்கள் எங்கே.?

04. ஆமாம், நட்சத்திரங்கள் எங்கே.?

இந்த புகைப்படத்தை பார்த்தால், ஸ்கூல் பசங்களுக்கு கூட டவுட் வரும். பொதுவாக வானத்தை நட்சத்திரங்கள் இன்றி பார்க்கவே முடியாது. எங்காவது ஓரிரு நட்சத்திரங்கள் இருக்கும். அனால், நாசா வெளியிட்டுள்ள புகைபடத்தொகுப்பில் உள்ள இந்த படத்திலும் சரி, வீடியோ பதிவிலும் எந்தவொரு ஒரு நட்சத்திரமும் பதிவாகவில்லை.

03. 'சி' என்று எழுத்துகுறிக்கப்பட்ட பாறை.!

03. 'சி' என்று எழுத்துகுறிக்கப்பட்ட பாறை.!

மூன் லேண்டிங் என்பது பொய் என்கிற தகவல் பரவிய பின்னர், ஒவ்வொரு அப்போலோ புகைப்படமும் மிகதிவீரமாகி ஆராயப்பட்டது. அம்மாதிரியான ஆய்வில் தான் சிக்கியது, இயற்கைக்கு மாறான முறையில் தெளிவாக 'சி' (C) என்ற எழுத்தை பிரதிபலிக்கும் ஒரு பாறை.!

02. பொய்யான கிராஸ்-ஹேர்ஸ் :

02. பொய்யான கிராஸ்-ஹேர்ஸ் :

வெளியான சில மூன் லேண்டிங் புகைப்படங்களில் கிராஸ்-ஹேர்ஸ்கள் (Cross-hairs) 'எடிட்' (Edit) செய்யப்பட்டுள்ளன. அதாவது பதிவான புகைப்படத்தின் முன்பக்கத்தில் இருக்க வேண்டிய க்ராஸ் ஹெர்ஸ் சில புகைப்படங்களில் பதிவான பொருட்களுக்கு பின்பக்கத்தில் உள்ளது. ஆக, இவைகள் திட்டமிட்டு எடுக்கப்பட்டு, நம்பும்படியாக எடிட் செய்யப்பட்டுள்ளதை காட்டுகிறது.

Nuclear Weapons : எந்தெந்த நாடுகளிடம் எத்தனை அணுவாயுதங்கள் உள்ளன.? இந்தியாவின் நிலை என்ன.?
01. டூப்ளிக்கேட் பின்னணிகள்:

01. டூப்ளிக்கேட் பின்னணிகள்:

வெளியான பெரும்பாலான புகைப்படங்களில், வெகு சில மாற்றங்களை கொண்ட, ஒரே மாதிரியான பின்புலங்களை (Backdrop) காண முடிகிறது. ஆக ஒட்டுமொத்த மூன் லேண்டிங் நாடகமும் ஒரு ஒரே இடத்தில் புத்திசாலித்தனமாக நடத்தப்பட்டுள்ளது என்கிறது ஒரு கோட்பாடு. இதெல்லாம், அமெரிக்காவின் வெற்றியை ஜீரணித்துக்கொள்ள முடியாத ரஷ்யாக்காரன் கிளப்பி விட்ட புரளிகள் என்று எளிமையாக கூறிவிட முடியாது. ஏனெனில் அமெரிக்கா நிலாவிற்கு சென்றதை, 20% அமெரிக்கர்களே நம்பவில்லை என்கிறது ஒரு ஆய்வு. சமீபத்தில் ரத்து செய்யப்பட்டுள்ள நிலவு பயணத்தின் விளைவாக இந்த எண்ணிக்கை அதிகரித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.!

Best Mobiles in India

English summary
NASA's cancellation of next lunar mission heats up fake moon landing theory. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X