நிலவில் மனிதர்களைத் தங்க வைக்கும் நாசா.! 2020 இல் நேரடி ஒளிபரப்பு.!

நிலவுக்கு மனிதர்களை அழைத்துச் சென்று தங்க வைக்கும் திட்டம் 2020 இல் நிச்சயம் நடக்கும் என்று உறுதியளித்துள்ளது.

|

நாசா தனது அடுத்த கட்ட நடவடிக்கைக்கான அறிவிப்பை அறிவித்துவிட்டது. நிலவுக்கு மனிதர்களை அழைத்துச் சென்று தங்க வைக்கும் திட்டம் 2020 இல் நிச்சயம் நடக்கும் என்று உறுதியளித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கும் மனிதர்களை அனுப்பித் தங்கவைத்து ஆய்வுகளை மேற்கொள்ளுமென்று உறுதிப்பட அறிவிப்பை அறிவித்திருக்கிறது.

 5 உத்தி அடங்கிய திட்டம்

5 உத்தி அடங்கிய திட்டம்

விண்வெளி ஆராய்ச்சி மையம், மனித விண்வெளி ஆய்வு காங்கிரஸ் அமைச்சகத்திடம் 2020 ஆம் ஆண்டு நிலவுக்குச் செல்லும் திட்டம் மற்றும் 2030 இல் செவ்வாய் செல்லும் திட்டத்தை பற்றிய முழு விபரங்களையும் சமர்ப்பித்துள்ளது. இத்திட்டத்தின் முக்கிய 5 உத்திகளுடன் அடங்கிய கோப்புகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஓரியன் விண்கலம்

ஓரியன் விண்கலம்

வணிக விண்வெளி நடவடிக்கைகளின் சமீபத்திய முன்னேற்றத்தினால் இந்த இலக்குகளை நாசா நிறைவேற்றும் என்று நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டில் அல்லது அடுத்த ஆண்டில் அறிமுகம் படுத்தவுள்ள ஓரியன் விண்கலம் மற்றும் விண்வெளி வெளியீடு சிஸ்டம் ராக்கெட் மூலம் இந்தத் திட்டம் நிறைவேற்றப் படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020 இல் நிலவு - 2030 இல் செவ்வாய்

2020 இல் நிலவு - 2030 இல் செவ்வாய்

வரும் 2020 ஆம் ஆண்டிற்குள் நிலவின் மேற்பரப்பில் நிச்சயம் மனிதர்களை நிறுவும் என்றும், அதனைத் தொடர்ந்து 2030-க்குள் செவ்வாய் இன்சுற்றுப்பாதையிலும் மனிதர்களை நிறுவுமென்று நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

நேரடி ஒளிபரப்பு

நேரடி ஒளிபரப்பு

இன்னும் சில ஆண்டில் மனிதர்கள் நிலவில் கால் பாதிக்கும் நிகழ்வை நேரடியாக ஒளிபரப்பத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதைப் பூமியில் இருந்து காண வாய்ப்பு கிடைக்கும் அனைவரும் பாக்கியம் செய்தவர்கள் என்று நாசாவின் தலைவர் கூறியுள்ளார்.

செவ்வாய் இல் இருந்து நேரடி ஒளிபரப்பு

செவ்வாய் இல் இருந்து நேரடி ஒளிபரப்பு

நிலவின் திட்டத்துடன் அமெரிக்கா நின்றுவிடாது,அதனைத் தொடர்ந்து செவ்வாய் பயணம் 2030 இல் நடைபெறும் எனவும் அதையும் நேரடி ஒளிபரப்பு செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் மேற்பரப்பு சுற்றுச்சூழல் மற்றும் நிலவின் சுற்றுப்பாதையில் செயற்கைக்கோள்கள் செயல்படுவதற்கும் விண்வெளி ஏஜென்சி திட்டமிட்டுள்ளது.

 ரோபோட் மற்றும் ரோவர்

ரோபோட் மற்றும் ரோவர்

இத்திட்டத்தில் ரோபோட்கள் மற்றும் ரோவர்கள் மூலம் நிலவை முழுமையாக ஆராய்ச்சி செய்யப்போவதாகவும், முதல் முறையாக அதிகப்படியான எண்ணிக்கைக் கொண்ட மனிதர் குழு நிலவரிக்கு அனுப்பப்பட்டு அங்கேயே 30 முதல் 60 நாள் வரை தங்குவதற்கான முயற்சிகளை மேற் கொண்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
NASA reveals how it plans to get astronauts back to the moon by the 'late 2020s' : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X