விண்வெளியில் இருந்து சூரிய கிரகணம் பார்க்க ஆசையா.! நாசா செய்த ஏற்பாடு.! வைரல் வீடியோ.!
கடந்த ஞாயிற்றுகிழமை 2020-ம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் முடிவடைந்தது, சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் ஒரே நேரத்தில் வருவதே சூரிய கிரகணம் உண்டாக காரணம். அப்போது பூமி, சூரியன் ஆகிய இரண்டுக்கும் நடுவில் வரும் சந்திரன் சூரியனை பூமியில் இருந்து பார்க்க முடியாதபடி மறைக்கும்.

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் சந்திரன் சூரியனை முழுமையாக மறைக்காமல், அதன் நடுப்பகுதியை மட்டுமே மறைக்கும். அதனால் சூரியனை சுற்றி சிவப்பு நிற வட்ட வளையம் தோன்றும். இந்த சூரிய கிரகணத்தை சாதாரண கண்களில் சூரியனை காண்பது கடினம். எனவே, இந்த வளையத்தை நேரடியாக பார்க்கக் கூடாது. இது தவிர சன் ஃபில்ட்டருடன் கூடிய கண்ணாடிகளை பயன்படுத்தியே இந்த
கிரகணத்தைக் காண முடியும் எனத் தெரிவித்தனர்.

சரி இந்த கிரகணத்தை பூமியிலிருந்து பார்த்துவிட்டோம்,ஆனால், அதையே விண்வெளியில் பார்த்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று சற்று கற்பனை செய்து பாருங்கள். இந்த புதிய தொழில்நுட்பம் இருக்கும்போது இருக்கும்போது நீங்க ஏன் கற்பனை எல்லாம் செய்து பார்க்கணும். அதுக்கு அவசியமே இல்லை.

ஏனென்றால் நம்மிடம் விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட உண்மையான படங்கள் வீடியோக்களுமே உள்ளன, அதாவது விண்வெளி வீரர்கள் மற்றும் செயற்கைகோள்கள் பூமியின் மேற்பரப்பில் சந்திரனின் வட்ட நிழலைக் கண்டனர். பின்பு இந்த காணகிடைக்கா அரிய காட்சியை நம்முடனும் பகிர்ந்துகொண்டுள்ளனர்.
நாசா விண்வெளி வீரர் கிறிஸ் காசிடி
குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் விண்வெளியில் வசித்து வரும் மற்றும் பணிபுரியும் நாசா விண்வெளி வீரர் கிறிஸ் காசிடி (Chris Cassidy) சூரிய கிரகணத்தின் போது பூமியின் படங்களை பகிர்ந்துள்ளார். அதன்படி படங்களில் பூமியின் மேற்பரப்பில் நிழல் கடந்து செல்வதைக் காண முடிகிறது, மேலும் இது கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.
மேலும் NOAA செயற்கைக்கோள்களின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில் பூமியின் GIF ஐ ட்வீட் செய்தது, அதில் சந்திரனின் நிழல் பூமி முழுவதும் பயணிப்பதைக் காட்டுகிறது. அது EUFETSAT ஆல் இயக்கப்படும் மீட்டோசாட் 8 மூலம் எடுக்கப்பட்ட GIF என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிநாடுகளில் சூரிய கிரகணம் ஞாயிற்றுக்கிழமை காலை 9.15மணிக்கு தெரியத் தொடங்கியது, ஆனால் இந்தியாவில் காலை 9.58மணிக்கு கிரகணம் தொடங்கியது. நண்பகல் 12.10மணிக்கு கிரகணம் உச்சத்தைத் தொட்டது. அப்போது சூரியனின் வட்டில் 34சதவிகிதம் சந்திரனால் மூடப்பட்டு இருந்தது. இதன் காரணமாக இதை கங்கண சூரியகிரகணம் என்று வானிலை ஆய்வாளர்கள் அழைத்தனர்.

இந்த கிரகணம் ஆசியா, ஆப்பிரிக்கா, பசிபிக், இந்தியப் பெருங்கடல், ஐரோப்பாவின் சில பகுதிகள்,ஆஸ்திரேலியா உள்ளிட்ட பகுதிகளில் மட்டுமே தெரிந்தது. தற்போது தெரிந்தது மிக நீண்ட கிரகணமாகும்.


Click it and Unblock the Notifications