மணல்கடிகார வடிவிலான நட்சத்திர மண்டலம்! நாசா ஹப்பிள் விண்கலத்தின் அசத்தல் புகைப்படம்..

வடக்கு பகுதியில் உள்ள கிராப் நெபுலா உடன் இதன் அமைப்பு ஒத்துப்போவதால் இதற்கு தெற்கு கிராப் நெபுலா என பெயரிடப்பட்டது.

|

நாசாவின் ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கியானது கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக எல்லையில்லா விண்வெளியில் உலவிவருகிறது. 1990 ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்டதில் இருந்து, ஹப்பிளின் கருவிகள் அடிக்கடி மேம்படுத்தப்படுவதால், இது தொடர்ந்து பிரபஞ்சத்தின் அதிசய ஆச்சர்ய புகைப்படங்களை வழங்கிவருகிறது மற்றும் அதன்மூலம் பிரபஞ்சத்தின் மீதான நமது பார்வையையும் மாற்றியுள்ளது. ஹப்பிள் விண்கலத்தின் 29வது ஆண்டுவிழாவை பெருமைபடுத்தும் விதமாக நாசா தற்போது புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

மணல்கடிகார வடிவிலான நட்சத்திர மண்டலம்! நாசா .!

வடக்கு பகுதியில் உள்ள கிராப் நெபுலா உடன் இதன் அமைப்பு ஒத்துப்போவதால் இதற்கு தெற்கு கிராப் நெபுலா என பெயரிடப்பட்டது. வித்தியாசமான மணல்கடிகார அமைப்பை இந்த நட்சத்திர கூட்டம் கொண்டிருப்பதன் காரணமாக இது மிகவும் தனித்துவமானது.

பெரிய சிவப்பு நட்சத்திரம்

பெரிய சிவப்பு நட்சத்திரம்

ஒரு பெரிய சிவப்பு நட்சத்திரம் மற்றும் ஒரு வெள்ளை குள்ள நட்சத்திரம் நெபுலாவின் மையத்தில் அமைந்திருப்பதால்,து பைனரி நட்சத்திர அமைப்பை உருவாக்குகிறது. இந்த புகைப்பட ஆவணம் பெரிய சிவப்பு நிற நட்சத்திரம் எப்படி வெள்ளை நிற குள்ள நட்சத்திரம் உறிஞ்சக்கூடிய பொருட்களை வெளியேற்றுகிறது என்பதை விளக்குகிறது.

கிரேவிடேசனல் வால்ட்ஸ்

கிரேவிடேசனல் வால்ட்ஸ்

"கிரேவிடேசனல் வால்ட்ஸ்" என்பதன் விளைவாகவே இந்த தனித்துவமான மணல் வடிவத்தை நட்சத்திர கூட்டம் பெறுகிறது என நாசா விவரித்துள்ளது.


நட்சத்திரங்கள் தங்களது வான நடனம் மற்றும் சுழற்சிகளை தொடரும்போது, பெரிய அளவிலான காற்று வெப்பக்காற்று பலூனை போல வெளியேறுகிறது என்கிறது நாசா.

ஐரோப்பிய விண்வெளி நிறுவனம்

ஐரோப்பிய விண்வெளி நிறுவனம்

ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (ESA) இது குறித்து விளக்கும்போது: "இதுபோன்ற பொருட்கள் வெள்ளை குள்ள நட்சத்திரத்தால் உள் இழுக்கப்படும்போது, அது வெடிப்பின் போது சில பொருள்களை வெளிப்புறமாக தள்ளுவதால், நாம் நெபுலாவில் காணும் இந்த கட்டமைப்புகள் உருவாக்கப்படுகின்றன" என்கிறது.


அதேநேரம் பெரிய சிவப்பு நட்சத்திரம் அதன் வெளிப்புற அடுக்குகளை தூக்கி எறிவதை நிறுத்தும்போது, அதன் வெள்ளை குள்ள நட்சத்திர துணைக்கு தேவையான பொருட்களை நிறுத்தும்.இதற்கு முன்னரும் இன்னும் அதிகமான வெடிப்புகள், இன்னும் அதிக சிக்கலான கட்டமைப்புகளை உருவாக்கியிருக்கலாம். நெபுலாவின் விளிம்புகளில் காணப்படும் பிரகாசமான இடங்கள், வாயு மற்றும் தூசி சேகரிக்கப்படும் குமிழ்கள் ஆகும்.

நண்டு கால்கள்

நண்டு கால்கள்

ஒளிரும் புள்ளிகளுடன் "நண்டு கால்கள்" போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் இந்த நெபுலா, ஹைட்ரஜன், சல்பர், நைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனை இது கொண்டிருக்கும் என்ற எண்ணத்தை உருவாக்குவதாக நாசா தெரிவித்துள்ளது.

பூமியில் இருந்து சுமார் 7,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள தெற்கு கிராப் நெபுலா விண்மீன் திரள்களில்( constellation Centaurus) அமைந்துள்ளது.நாசா விஞ்ஞானிகள் இவை எப்படி விசித்திரமான நண்டு கால் போன்ற வடிவத்தை பெறுகின்றன என விளக்கலாம். ஆனால் இது எப்போதும் அப்படியே இருப்பதில்லை. 1967 இல் முதன்முதலாக நெபுலா ஆவணப்படுத்தப்பட்டபோது, இது ஒரு சாதாரண நட்சத்திரம் என்றே விஞ்ஞானிகள் கருதினர். இந்தகருத்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு மாறியது. 1998 ஆம் ஆண்டில், நெபுலா முதன்முதலில் ஹப்பிள் பார்வையில் வந்தபோது, விஞ்ஞானிகள் தெற்கு நண்டு போன்ற சிக்கலான கட்டமைப்பின் முதல் முழு பார்வையைக் கண்டனர்.

இரண்டு முறை ஏற்பட்டது

ஐரோப்பிய விண்வெளி அமைப்பு இதுகுறித்து கூறுகையில் "இந்த படம் உள்கூட்டு கட்டமைப்புகள் வெளிப்படுத்துகிறது மற்றும் சமீபத்தில் இந்த வெளிப்புற குமிழ்கள் உருவாகும் நிகழ்வு இரண்டு முறை ஏற்பட்டது என்ற கருத்தையும் பரிந்துரைக்கிறது" என தெரிவித்துள்ளது.

 புதிய படங்களை எடுத்துள்ளது

புதிய படங்களை எடுத்துள்ளது

இப்போது ஒரு தசாப்தத்திற்கும் பிறகு முதன்முதலாக ஹப்பிள் நெபுலாவைப் பார்த்த பின்னர், எவ்வாறு தெற்கு கிராப் நெபுலா உருவாகிவருகிறது என்பதை காட்டும் புதிய படங்களை எடுத்துள்ளது. இருப்பினும் 1989 இல் இது குறித்து அதிக விரிவாக ஆராய்ந்தபோது, அது மிகவும் சிக்கலான மற்றும் தனித்துவமான மணல்கடிகார வடிவமைப்பை உருவாக்கிறது என்பதை உணர்ந்துகொண்டனர்.

Best Mobiles in India

English summary
NASA releases STUNNING Hubble image of 'hourglass-shaped' star system : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X