Home
Scitech

செவ்வாய் கிரகத்தில் சத்தம் இப்படிதான் இருக்கும்: நாசா வெளியிட்ட புதிய ஆடியோ ஃபைல்.!

நாசா அமைப்பு தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் செவ்வாய் கிரக்ததில் கேட்கும் சத்தங்களை பதிவு செய்து அனுப்பியுள்ளது பெர்சவரன்ஸ் ரோவர். அதாவது நாசா அமைப்பு தினசரி பெர்சவரன்ஸ் ரோவர் மூலம் எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் அதன்மூலம் வரும் தகவல்களை அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்து வருகிறது.

பெர்சவரன்ஸ் ரோவர்

பெர்சவரன்ஸ் ரோவர்

அதன்படி தற்சமயம் பெர்சவரன்ஸ் ரோவர் பதிவு செய்த செவ்வாயின் சத்தத்தையும் SoundCloud தளத்தில் பதிவேற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. வெளிவந்த தகவலின்படி, பெர்சவரன்ஸ் ரோவரில் பொருத்தப்பட்ட சூப்பர்கேமில் இருக்கும் மைக்ரோபோன்மூலம் இந்த சத்தம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாசா அமைப்பு வெளியிட்ட தகவலின்படி பெர்சவரன்ஸ் ரோவரில் இருகக்கும் லேசர் கதிர் செவ்வாயில் ஒரு கல்லை தாக்கும் சத்தம் ரோவரின் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளிவந்த சத்தம் மூலம் அந்த கல் எவ்வளவு கடினத்தன்மையுடையதாக இருக்கும் என்பதைத் தீர்மானிக்க முடியும்.

ஸ்பெக்ட்ரோமீட்டர் மற்றும் கேமராக்கள்

குறிப்பாக பெர்சவரன்ஸ் ரோவரின் ஸ்பெக்ட்ரோமீட்டர் மற்றும் கேமராக்கள், அந்த கல் எதனால் ஆனது என்பதை ஆராய்ச்சி செய்ய உதவும் என்று கூறப்படுகிறது. அதேபோல் பெர்சவரன்ஸ் ரோவர் தனது பயணத்தின் முதல்கட்ட சோதனை ஓட்டத்தை நிறைவு செய்துள்ளதாக நாசா அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.

செவ்வாய் கிரகத்தின்

பூமியைத் தவிர உயிரினங்கள் வாழ்வதற்கு ஏதுவான அம்சங்கள் உள்ள கிரகங்களை விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாகத் தேடிக்கொண்டு இருக்கின்றனர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. செவ்வாய் கிரகம் இந்த ஆராய்ச்சியின் முக்கிய கிரகமாக இருந்து வருகிறது. இதற்காக கடந்த ஆண்டு அனுப்பப்பட்ட பெர்சவரன்ஸ் ரோவர் கடந்த மாதம் வெற்றிகரமாக செவ்வாயில் தரையிறங்கியது.

மேலும் செவ்வாய் கிரகத்தின் தரைப்பகுதியில் ஆய்வு செய்து வரும் அந்த ரோவர், அங்கு காணப்படும் மலைகள், குன்றுகள், பாறைகள் என அனைத்தையும் மிகவும் தெளிவாக படம்பிடித்து காட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த வெள்ளிக்கிழமை

நாசா அமைப்பு அண்மையில் வெளியிட்ட தகவலின்படி, கடந்த வெள்ளிக்கிழமை மற்றம் சனிக்கிழமைகளில் பெர்சவரன்ஸ் ரோவரை அதிகமாக இயக்கி முயற்சி மேற்கொண்டதாகவும். இதனால் ரோவர் 33 நிமிடங்கள் முன்னும் பின்னுமாக இயக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நாசா அமைப்பு ஏற்கனவே அனுப்பிய கியூரியாசிட்டி ரோவரை விட 5 மடங்கு வேகத்தில் பெர்சவரன்ஸ் ரோவர் இயங்குவதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பின்பு செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் மேலும் ஆய்வு செய்வதற்கான பாதைகள் குறித்து பரிசீலித்து வருவதாக விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

 பெர்சவரன்ஸ் ரோவர் உ

குறிப்பாக பெர்சவரன்ஸ் ரோவர் உடன் அனுப்பி வைக்கப்பட்ட சிறிய ரக ஹெலிகாப்டரை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், பின்பு 30 இடங்களில் பாறைகள் மற்றும் மாதிரிகளை சேகரிக்க முயற்சி செய்து வருவதாகவும் நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். மேலும் இந்த மாதிரிகளை மற்றொரு ரோவர் மூலம் வரும் 2031-ம் ஆண்டு பூமிக்கு கொண்டு வர நாசா திட்டமிட்டுள்ளது. குறிப்பாக ஓராண்டுக்கு ரோவர் செவ்வாய்கிரகத்தில் ஆய்வு மேற்கொள்கிறது. குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் செவ்வாய் கிரகத்தில் ஓர் ஆண்டு என்பது பூமியை பொறுத்தவரை 687 நாட்கள்.

Best Mobiles in India

English summary
NASA releases first audio from Mars with the help of Perseverance rover: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X