தீயா வேலை செய்யும் NASA: 4 மனிதர்களுக்குப் பூமியில் பயிற்சி.! எதற்காகத் தெரியுமா?
நாசா தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் பணியில் நாசா விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். குறிப்பாகச் செவ்வாய் கிரகத்திற்குச் சென்றால் அங்கு மனிதர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் உள்ளிட பல செயல்பாடுகள் குறித்து பயிற்சி அளிக்கும் பணியையும் கூட விஞ்ஞானிகள் தொடங்கி விட்டனர்.
இதற்கு வேண்டி பூமியில் செவ்வாய்க் கிரகம் போன்ற சூழலை உருவாக்கி அங்கு மனிதர்கள் எப்படி நடமாட வேண்டும், பாதுகாப்பாக இருப்பது எப்படி? அவர்கள் சமைப்பது எப்படி உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் தற்போது 4 மனிதர்களுக்கு இந்த முக்கிய பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக நாசா அமைப்பு தனது அறிக்கையில் தெரிவித்து உள்ளது. பின்பு இந்த 4 மனிதர்கள் விரைவில் செவ்வாய்க் கிரகத்திற்குச் செல்ல இருப்பதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல் சூரிய குடும்பத்தில் 4-வது இடத்தில் இருக்கும் கோளான செவ்வாய்க் கிரகத்தில் விஞ்ஞானிகள் தீவிர ஆய்வு மேற்கொண்டு இருக்கின்றனர்.
குறிப்பாக இந்த செவ்வாய்க் கிரகத்தை ஆய்வு செய்ய இந்தியாவில் இஸ்ரோ கூட விண்கலங்களை அனுப்பியது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் நாசா உள்பட விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபடும் பல்வேறு நாடுகளும் செவ்வாய்க் கிரகத்தைக் கூடுதலாகக் கவனம் செலுத்தி ஆய்வு செய்து வருகின்றன.

சூரிய குடும்பத்தில் இருக்கும் பிற கோள்களை விடச் செவ்வாய்க் கிரகம் தான் மனிதன் வாழ்வதற்கு உகந்த இடமாக இருக்கலாம் என்றும் அதனால் மனித குடியேற்றம் அடுத்து செவ்வாய்க் கிரகத்தில் தான் அமையும் என்பது விஞ்ஞானிகள் வாதமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் செவ்வாய்க் கிரகத்தில் தண்ணீர் இருப்பதாகவும் விஞ்ஞானிகள் கூறி வருகின்றனர்.
மேலும் செவ்வாய்க் கிரகத்தைப் பொறுத்தவரை அதன் மொத்த அளவு பூமியில் பாதி என்பது கவனிக்கத்தக்கது. பின்பு இந்த செவ்வாய்க் கிரகம் சூரியனை சுற்றி வர அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக பூமியிக் கணக்குப் படி செவ்வாய் கிரகத்தில் ஒருவருடம் என்பது 687 நாட்களாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இதுதவிர செவ்வாய்க் கிரகத்தில் நீர் இருந்ததற்கான தடங்கள் இருப்பதால் அங்கு நுண்ணுயிரிகள் இருக்கிறதா? உயிரினங்கள் இருந்தனவா எனப் பல்வேறு ஆய்வுகள் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே விரைவில் மனிதர்கள் செவ்வாய்க் கிரகத்திற்குச் செல்ல இருப்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

ஏற்கனவே கூறியபடி பூமியைத் தவிர உயிரினங்கள் வாழ்வதற்கு ஏதுவான அம்சங்கள் உள்ள கிரகங்களை விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாகத் தேடிக்கொண்டு இருக்கின்றனர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. செவ்வாய்க் கிரகம் இந்த ஆராய்ச்சியின் முக்கிய கிரகமாக இருந்து வருகிறது.
அதேபோல் நாசா அமைப்பு விரைவில் பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்த உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








