50 வருடத்தில் பூமி இவ்வளவு மோசமா மாறிடுச்சா? NASA வெளியிட்ட வீடியோ சாதாரணமில்ல.!

|

பூமி சூரியனில் (Sun) இருந்து மூன்றாவது கிரகமாகவும், உயிர்களை பாதுகாக்கும் ஒரே வானியல் பொருளாகவும் திகழ்கிறது. சூரிய குடும்பம் முழுவதும் பெரிய அளவிலான நீர் காணப்பட்டாலும், பூமி (Earth) மட்டுமே திரவ மேற்பரப்பு நீரைத் தக்க வைத்துள்ளது. இதனால் தான் நம்முடைய பூமியை நாம் 'தி ப்ளூ மார்பிள் (The Blue Marble)' என்று அழைக்கிறோம்.

பூமியின் மேற்பரப்பில் சுமார் 71% கடலால் ஆனது. பூமியில் துருவ பனி, ஏரிகள் மற்றும் ஆறுகள் என்று இன்னும் ஏராளமான சிறப்பம்சங்கள் உள்ளது. பூமியின் மேற்பரப்பில் மீதமுள்ள 29% நிலம், கண்டங்கள் மற்றும் தீவுகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சிறப்பான பூமி கிரகமானது 50 ஆண்டுகளில் எப்படி மாறியுள்ளது என்பதை நாசா (NASA) ஒரு புதிய டைம் லேப்ஸ் வீடியோ மூலம் காண்பித்துள்ளது.

50 வருடத்தில் பூமி இவ்வளவு மோசமா மாறிடுச்சா? NASA வெளியிட்ட வீடியோ.!

உண்மையை சொல்ல போனால், இந்த வீடியோவை பார்த்தால் கொஞ்சம் கவலையாகத் தான் இருக்கிறது. நாம் இன்னும் அழகான கிரகம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் பூமியானது 50 வருடத்திற்கு முன்பு தான் பேரழகுடன் காணப்பட்டிருக்கிறது என்பதை இந்த வீடியோ தெளிவாகக் காண்பிக்கிறது. இப்போது (2022) வரை பூமி எவ்வளவு மோசமான மாற்றங்களை சந்தித்து வருகிறது என்பதையும் இந்த வீடியோ காண்பிக்கிறது.

"தி ப்ளூ மார்பிள்" என்ற புனைபெயருக்கு வழிவகுத்த புகழ்பெற்ற புகைப்படத்துடன் அப்பல்லோ 17 (Apollo 17) விண்வெளி வீரர்கள் திரும்பியதில் இருந்து பூமி எவ்வாறு 'மாறியுள்ளது' என்பதை இந்த புதிய டைம் லேப்ஸ் வீடியோ சித்தரிக்கிறது. டிசம்பர் 7, 1972 அன்று, பூமி எப்படி இருந்தது என்பதைக் காட்டத் துவங்கி இந்த வீடியோ பிளே ஆகிறது. இதுவரை கண்டிராத அளவில் பூமியை இந்த வீடியோ விவரமாகக் காட்சிப்படுத்துகிறது.

நாசா, மற்றும் பிளானெட்டரி விஷன் ஆகியவற்றுடன் இணைந்து லிவிங் எர்த் ஆர்கெஸ்ட்ரா (LEO) சமீபத்தில் தயாரித்த டைம் லேப்ஸ் வீடியோ (Time lapse video) மூலம் பூமி குறிப்பிடத்தக்க வகையில் எப்படி மாறியுள்ளது என்பதை காண்பிக்கிறது. மிகப்பெரிய நீல நீரையும், சுழலும் மேகங்களையும் பூமி கொண்டிருந்ததாக வீடியோ காட்டுகிறது. 50 வருடங்களில் பூமி எவ்வளவு இயற்கை வளங்களை இழந்துள்ளது என்பது இதில் தெரிகிறது.

கடந்த 2015 ஆம் ஆண்டு முதல், நாசா EPIC கேமரா பொருத்தப்பட்ட டீப் ஸ்பேஸ் விண்வெளி ஆய்வகத்தை இயக்கி வருகிறது. இது ஒரு மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருந்தாலும், அது செயல்படத் தொடங்கியதிலிருந்து ஒவ்வொரு மணி நேரமும் பூமியை புகைப்படம் எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த புகைப்படங்களை வைத்தே இந்த வீடியோ (video) உருவாக்கப்பட்டுள்ளது.

பூமியின் சுற்றுச்சூழல்கள் 'அப்போது' எவ்வளவு அற்புதமானதாக இருந்தது என்பதையும், 'இப்போது' பூமி எப்படிச் சேதமடைந்துள்ளது என்பதையும் வீடியோ காட்டுகிறது. பூமியில் உள்ள ஒவ்வொரு இடமாக இந்த வீடியோவில் ஜூம் செய்து காண்பிக்கப்படுகிறது. நீர்கள் அதிகம் தேங்கிக் கிடக்கும் இடம் எப்படி 50 வருடத்தில் வறண்ட நிலமாக மாறியது என்று காண்பிக்கப்படுகிறது.

இன்னும் என்னென்ன மாற்றங்களைப் பூமி இந்த 50 வருடத்தில் சந்தித்துள்ளது என்றும் வீடியோ காண்பிக்கிறது. அதேபோல், 1972 முதல் பூமி எவ்வளவு மாறிவிட்டது என்பதை நிரூபிப்பதோடு, எதிர்காலத்தில் பூமி எவ்வளவு மாறக்கூடும் என்பதையும் இந்த வீடியோ நிரூபிக்கின்றது. பூமிக்கு என்ன நடக்கிறது என்பதை நீங்கள் உணர்ந்தால், அது ஒரு சக்திவாய்ந்த விழிப்புணர்வு அழைப்பாகச் செயல்படும் என்று யுசிஎல் மருத்துவர் ஜான்-பீட்டர் முல்லர் தெரிவித்திருக்கிறார்.

நமது குடும்பத்தின் மீதும், நமது குடும்பத்தினரின் ஆரோக்கித்தின் மீதும் நமக்கு இருக்கும் அக்கரையில், சிறிய அளவாவது நாம் வாழ உறுதுணையாக இருக்க உதவும் இந்த பூமி கிரகத்தின் மீதும் இருக்க வேண்டும் என்ற புரிதலை நாம் அடியோடு மறந்துவிட்டோம் என்பதை இந்த வீடியோ உணர வைக்கிறது. 50 வருடங்களில் இவ்வளவு மோசமான மாற்றங்களைப் பூமி சந்தித்துள்ளது என்றால், அடுத்த 50 வருடங்களில் என்னவெல்லாம் நடக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.!

பூமியைப் பாதுகாக்க உதவும் சிறிய மாற்றங்களை மனிதர்கள் உடனே செய்யத் துவங்க வேண்டும் என்பதை இனியாவது நாம் உணர வேண்டும். சிறிய-சிறிய மாற்றங்கள் கூட, பெரியளவு நல்ல மாற்றங்களை மேற்கொள்ள உதவும் என்பதைப் புரிந்து பூமியைப் பாதுகாக்க மனிதக்குலம் முன்வர வேண்டும் என்பதை இனியாவது நாம் உணர வேண்டும்.

Best Mobiles in India

English summary
NASA Planetary Vision Shared a Time Lapse Video Shows How Much Earth Has Changed In 50 Years

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X