தங்கத்தால் ஆன கிரகத்திற்குச் செல்லும் நாசா! நாசாவின் அடுத்த புதிய திட்டம் இதுதான்!

|

சூரியக் குடும்பத்தில் உள்ள தங்கத்தால் ஆன சிறுகோள் பற்றிய தகவல்களை ஆராய, புதிய செயற்கைக்கோள் ஒன்றை நாசா விண்ணுக்கு அனுப்பவுள்ளதாக அண்மையில் அறிவித்துள்ளது. இதற்கான புதிய திட்டம் 2022 ஆம் ஆண்டு துவங்குமென்றும் நாசா அதிகாரப்பூர்வமாக தற்பொழுது அறிவித்துள்ளது.

உலோக கலவை கொண்ட கிரகம்

உலோக கலவை கொண்ட கிரகம்

சூரியனைச் சுற்றி வரும் செவ்வாய் மற்றும் வியாழன் கிரகங்களுக்கு இடையே சுற்றி வளம் வரும் உலோக கலவை கொண்டது இந்த சிறுகோள். இந்த சிறுகோள் முதல் முதலில் 1852 ஆம் ஆண்டு, இத்தாலிய வானியலாளர் அன்னிபலே டி காஸ்பரிஸ் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.

தங்கத்தினால் ஆன சிறுகோள்

தங்கத்தினால் ஆன சிறுகோள்

இந்த சிறுகோளின் மையமானது பூமியைப் போன்றது என்றும், இந்த சிறுகோளில் அதிக அளவு நிக்கல் மற்றும் இரும்பு உலோக கலவை உள்ளதென்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதிலும் இந்த சிறுகோள் தங்கத்தினால் ஆனது என்பது ஆராய்ச்சியாளர்களால் குறிப்பிடபட்டுள்ளது.

கிரகத்தின் பெயர் அர்த்தம்

கிரகத்தின் பெயர் அர்த்தம்

1852 ஆம் ஆண்டு, கண்டுபிடிக்கப்பட்ட இந்த சிறுகோளிற்கு ஸைக் 16 (Psyche 16) என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த சிறுகோளின் பெயர் கிரேக்க ஆத்ம தெய்வமான 'சைக்' என்ற தெய்வத்தின் பெயரைத் தொடர்ந்து வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

6.5-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் ஹானர் 9எக்ஸ் ஸ்மார்ட்போன்.!6.5-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் ஹானர் 9எக்ஸ் ஸ்மார்ட்போன்.!

நாசா 2022 திட்டம்

நாசா 2022 திட்டம்

நாசா அறிவித்துள்ள அறிவிப்பின் படி, இந்த சிறுகோள் திட்டம் 2022 ஆம் ஆண்டு, தயார் செய்யப்பட்டுத் துவங்கப்படும் என்றும், பூமியிலிருந்து புறப்படும் செயற்கைக்கோள் ஜனவரி 31 ஆம் தேதி, 2026 ஆம் ஆண்டில் ஸைக் 16 சிறுகோளைச் சென்றடையும் என்று நாசா தெரிவித்துள்ளது.

நாசா மற்றும் அரிசோனா பல்கலைக்கழகம்

நாசா மற்றும் அரிசோனா பல்கலைக்கழகம்

அரிசோனா மாநில பல்கலைக்கழகம் மற்றும் நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகம் இரண்டும் சேர்ந்து இத்திட்டத்தை வழிநடத்தும் என்று நாசா தெரிவித்துள்ளது.

வாட்ஸ்ஆப் பீட்டா வெர்ஷன்: வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸை ஷேர் செய்யும் வசதி வருகிறது.!வாட்ஸ்ஆப் பீட்டா வெர்ஷன்: வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸை ஷேர் செய்யும் வசதி வருகிறது.!

பூமியுடன் ஒத்து போகும் ஸைக் 16

பூமியுடன் ஒத்து போகும் ஸைக் 16

இந்த திட்டத்தின் கீழ் அனுப்பப்படும் செயற்கைக்கோள், ஸைக் 16 கிரகத்தின் உருவாக்கத்தைப் பற்றிய புரிதல், ஸைக் 16 சிறுகோள் எவ்வளவு பழையது, நமது பூமியின் மையப்பகுதியோடு இந்த கிரகம் எவ்வளவு ஒத்துப்போகிறது போன்ற தகவல்களை நாசா ஆராயும் என்று தெரிவித்துள்ளது.

ஸைக் 16 கிரகம் செல்லும் நாசா செயற்கைகோள்

ஸைக் 16 கிரகம் செல்லும் நாசா செயற்கைகோள்

நாசா அனுப்பும் இந்த செயற்கைக்கோளில் சிறுகோளின் காந்தப்புலத்தைக் கண்டறிய மேக்னெட்டோ மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. ஸைக் 16 சிறுகோளில் உள்ள உலோக மற்றும் சிலிகேட் கூறுகளை வேறுபடுத்து படம் பிடிக்க மல்டி-ஸ்பெக்ட்ரல் இமேஜர் பொருத்தப்பட்டுள்ளது.

கூகுள், அமேசான் பே: 24மணி நேரம் கெடு விதித்து அதிரவிட்ட ஆர்பிஐ.!கூகுள், அமேசான் பே: 24மணி நேரம் கெடு விதித்து அதிரவிட்ட ஆர்பிஐ.!

புதிய லேசர் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் சோதனை

புதிய லேசர் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் சோதனை

காமா கதிர் மற்றும் நியூட்ரான் ஸ்பெக்ட்ரோமீட்டர், டீப் ஸ்பேஸ் ஆப்டிகல் கம்யூனிகேஷன்ஸ் எனப்படும் அதிநவீன புதிய லேசர் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தைச் சோதனை செய்வதற்கான சோதனை முயற்சிகளும் இந்த திட்டத்தின் பொது நிகழ்த்தப்படும் என்று நாசா அறிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
NASAs New 2022 Mission To The Golden Asteriod Near Mars : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X