விண்வெளிக்கு மனிதர்கள் அனுப்பும் திட்டம்: பெயரை அறிவித்த நாசா!

விண்வெளி மையத்தை விரிவான பயன்பாடுகளுக்கு அனுமதிக்கிறது வர்த்தக குழு திட்டம்.

|

2011ல் விண்வெளி விண்கல திட்டம் முடிவுக்கு வந்த பின்னர், அமெரிக்க மண்ணில் இருந்து செலுத்தப்படும் மனிதர்கள் செல்லும் முதல் விண்கலத்திற்கான 9 விண்வெளி வீரர்களின் பெயர்களை கடந்த வெள்ளியன்று அறிவித்துள்ளது நாசா.சர்வதேச விண்வெளி மையத்திற்கு சரக்குகளையும், விண்வெளி வீரர்களையும் அனுப்புவதை தனியார் துறைக்கு மாற்றிய பின்னர், தேசிய வானூர்தியியல் மற்றும் வானியல் நிர்வாக ஆணையத்தின் இந்த அறிவிப்பானது, அமெரிக்க விண்வெளி திட்டத்தின் முக்கிய மைல்கல்லாக தெரிகிறது.

விண்வெளிக்கு மனிதர்கள் அனுப்பும்  திட்டம்: பெயரை அறிவித்த நாசா!

விண்வெளி விண்கல திட்டத்தை நிறுத்திய பிறகு, அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா தனது விண்வெளி வீரர்களை விண்வெளி மையத்திற்கு அனுப்ப இரஷ்யாவை சார்ந்திருக்க வேண்டியிருந்தது. சுற்றுவட்டப்பாதை ஆராய்ச்சி ஆய்வகமாக செயல்படும் 100பில்லியன் டாலர் மதிப்புள்ள இந்த விண்வெளி மையமானது பூமியில் இருந்து 250 மைல்(402கிலோ மீட்டர்) உயரத்தில் பறக்கிறது.

லாப்ட் அப்ராட் ஸ்பேஸ்கிராப்ட்

லாப்ட் அப்ராட் ஸ்பேஸ்கிராப்ட்

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த விண்வெளி வீரர்கள், தொழில்முனைவோரான எலன் முஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் போயிங்-ஆல் உருவாக்கப்பட்ட 'லாப்ட் அப்ராட் ஸ்பேஸ்கிராப்ட்' எனும் பரிசோதனை விண்கலத்தில் பயணம் மேற்கொள்வர். அடுத்தடுத்த திட்டங்களில் போயிங்-ன் சி.எஸ்.டி 100 ஸ்டார்லைனர் மற்றும் ஸ்பேஸ் எக்ஸின் க்ரூ டிராகன் இரண்டும் பயன்படுத்தப்படவுள்ளன.

ஜிம் பிரிடென்ஸ்டைன்

ஜிம் பிரிடென்ஸ்டைன்

முதல் விண்கலம் அடுத்த ஆண்டில் எப்போது வேண்டுமானாலும் செலுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹூஸ்டனில் உள்ள ஜான்சன் விண்வெளி மையத்தில் நாசாவின் நிர்வாகி ஜிம் பிரிடென்ஸ்டைன் கூறுகையில், " அமெரிக்கர்களின் வாழ்க்கை முறையையே விண்வெளி மாற்றிவிட்டது. 2011க்கு பிறகு முதல் முறையாக, அமெரிக்க மண்ணிலிருந்து, அமெரிக்க வீரர்களை, அமெரிக்க ஏவுகலத்தில் விண்ணில் செலுத்தும் முயற்சியின் விளிம்பில் உள்ளோம்" என்றார்.

 தனியார் துறை

தனியார் துறை

இந்த அறிவிப்பையொட்டி அமெரிக்க அதிபர் டிரம்ப் பதிவிட்ட டிவிட்டில், "உலகிலேயே அதீத வசதிகளை நாம் வைத்துள்ளோம் மற்றும் அதை தற்போது தனியார் துறை பணம் செலுத்தி பயன்படுத்த அனுமதிக்கிறோம். ஆச்சர்யமளிக்கத்தக்க நிகழ்வுகள் நடக்கிறது" என கூறியுள்ளார்.

நிலவு/புதன்

நிலவு/புதன்

விண்வெளி மையத்தை விரிவான பயன்பாடுகளுக்கு அனுமதிக்கிறது வர்த்தக குழு திட்டம். நாசா அதிகாரிகள் கூறியதாவது, நீண்டநேர விண்கலம் மற்றும் நிலவு/புதன் உள்பட தீவிர விண்வெளி திட்டங்களில் நீடித்து இருப்பதற்கான தேவைகள் போன்றவற்றில் உள்ள சவால்களை புரிந்துகொள்வது என்பது மிகவும் கடினமானது என்றனர்.

4.2பில்லியன் டாலர்

4.2பில்லியன் டாலர்

2014ல் ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் போயிங் முறையே 2.6 மற்றும் 4.2பில்லியன் டாலர் ஒப்பந்தங்களை, விண்வெளி வீரர்களை பூமிலிருந்து விண்வெளி மையத்திற்கும், அங்கிருந்து பூமிக்கும் அனுப்ப 'ஸ்பேஸ் டாக்ஸி' என்பதை உருவாக்க பெற்றனர்.

Best Mobiles in India

English summary
NASA Names Astronauts for First Manned US Mission Since 2011: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X