நிலவில் சீன ரோவரை கண்காணிக்கும் நாசாவின் மூன் ஆர்பிட்டர்!

எடுக்கவிருக்கும் அந்த படங்கள் முக்கியமாக பிரகாசத்தில் (ஆல்பீடோ) உள்ள வேறுபாடுகளை கண்டறிய பயனுள்ளதாக இருக்கும் என ராபின்சன் குறிப்பிட்டார்.

|

நிலவின் தூரப் பகுதியில் உள்ள சீனாவின் யூடு 2 ரோவர் எங்கு இருக்கிறது, என்ன செய்கிறது என்பதை தொடர்ந்து கண்காணித்துவருகிறது நாசாவின் நிலவு புலனாய்வு விண்கலமான எல்ஆர்ஓ (LRO-Lunar Reconnaissance Orbiter ).

நிலவில் சீன ரோவரை கண்காணிக்கும் நாசாவின் மூன் ஆர்பிட்டர்!

அடுத்த சில மாதங்களில், யூரோ 2-ன் ரோவர் இறங்கும்தளம் இருக்கிற பகுதியில் சூரியன் மேலெழுந்து வரத்துவங்கும். அப்போது மேலே இருக்கும் எல்ஆர்ஓ விண்கலம், எந்தவொரு நிழலும் இல்லாமல் ​​நிழற்படங்களைப் எடுக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்கிறார் மார்க் ராபின்சன். இவர் எல்ஆர்ஓ விண்கலத்தில் உள்ள நிலவு புலனாய்வு விண்கல கேமராவின் முதன்மை ஆராய்ச்சியாளர் ஆவார். இதில் உள்ள மூன்று கேமரா அமைப்பு சந்திர மேற்பரப்பின் உயர்-தெளிவுத்திறன் புகைப்படங்களை எடுக்கும் திறன்கொண்டது.

ஆல்பீடோ

ஆல்பீடோ

எடுக்கவிருக்கும் அந்த படங்கள் முக்கியமாக பிரகாசத்தில் (ஆல்பீடோ) உள்ள வேறுபாடுகளை கண்டறிய பயனுள்ளதாக இருக்கும் என ராபின்சன் குறிப்பிட்டார். எனவே ஆய்வாளர்கள் விரைவில் "ப்ளாஸ்ட் ஜோன்" என அழைக்கப்படும் இப்பகுதியில் முதலாவது நல்ல தரமான புகைப்படத்தை காணமுடியும்.

ராபின்சன்

ராபின்சன்

வரும் மாதங்களில் ரோவரின் தடங்கள் கண்ணுக்கு புலப்படும் என்பதால், வான் கார்மன் பள்ளத்தின் தரையில் யூடு2 ரோவரின் சரியான பாதையை ஆராய்ச்சியாளர்கள் பின்தொடர முடியும் ராபின்சன் விளக்கினார்.

சீனாவின் சேன்ஜ் 4

சீனாவின் சேன்ஜ் 4

சீனாவின் சேன்ஜ் 4 செயல்திட்டத்தின் ஒரு அங்கமான யூடு 2 மற்றும் லேண்டர் ஆகியவை ஜனவரி 2, 2019 இரவில் 115 மைல் அகலமுள்ள (186 கிலோமீட்டர்) வோன் கார்மான் பள்ளத்தில் தரையிறங்கின. இதற்கு முன்னதாக எந்தவொரு விண்கலம்,ரோபோட் அல்லது விண்வெளி வீரர் குழு சந்திரனின் தூர பகுதியில் மென் தரையிறக்கம்(சாஃப்ட் லேண்டிங்) செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

யூடு 2 ரோவர்

யூடு 2 ரோவர்

எல்ஆர்ஓ விண்கலமானது நிலவில் தனக்கு வழங்கப்பட்டுள்ள இடத்தை ஒரு மாதத்தில் ஒருமுறையேனும் பகல் நேரத்தில் கடக்கும் என்பதால், இந்த யூடு 2 ரோவர் மேற்கு நோக்கி முன்னேறுவதையும் இது கண்காணிக்கும் .

 நிழல்கள் டோபோகிராபி

நிழல்கள் டோபோகிராபி

பிப்ரவரி மாத இறுதியில், யுடு 2 ரோவர் சேன்ஜ் 4 லேண்டர் தரையிறங்கிய பகுதியில் இருந்து சுமார் 226 அடி (69 மீட்டர்) தொலைவில் இருந்தது. எனவே யூடு 2 ரோவர் பிப்ரவரி மாதத்தில் மட்டும் மேற்கு நோக்கி 150 அடி (46 மீ) முன்னேறியுள்ளதாக எல்ஆர்ஓ கேமராவின் புகைப்படங்கள் காண்பிக்கின்றன.

" ஸ்டேடியோ டைன்ஹி" என அழைக்கப்படும் சேன்ஜ் 4 வேண்டரின் தரையிறங்கு தளத்தை ஒவ்வொரு மாதமும் எல்ஆர்ஓ புகைப்படம் எடுக்கும்போது, அங்கு ஏற்பட்டுள்ள ஒளி மாற்றங்கள் காரணமாக, நிலவு மேற்பரப்பை வித்தியாசமான காணமுடியும் .

விடியல் மற்றும் அந்தி மாலைப்பொழுதுக்கு மத்தியில், நீண்ட நிழல்கள் டோபோகிராபி எனப்படும் மேலிருந்து எடுக்கும் புகைப்படங்களை மெருகூட்டும் என்கிறார் ராபின்சன்.மதியம் நெருங்க நெருங்க, மேற்பரப்பின் பிரகாச வேறுபாடுகள் இன்னும் வெளிப்படையான உள்ளன. சமீபத்திய எல்ஆர்ஓசி புகைப்படத்தில், பிப்ரவரி 28அன்று சூரியன் அடிவானத்தின் அருகில் உள்ளது மற்றும் லேண்டர் & ரோவர் இரண்டுன் மீதும் நீண்ட நிழல்கள் இருக்கின்றன என்கிறார் ராபின்சன்.

Best Mobiles in India

English summary
NASA Moon Orbiter Tracks Chinese Rover on Lunar Farside (Photos) : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X