செவ்வாய் கிரகத்தில் "சிக்கிய" விசித்திர பொருள்.. காற்றில் பறந்து வந்து மாட்டி கொண்டது!

|

கடந்த செப்டம்பர் 24 ஆம் தேதியன்று, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா (NASA), அதன் மார்ஸ் ஹெலிகாப்டர் (Mars Helicopter) ஆன இஞ்சினியுட்டியை (Ingenuity) பயன்படுத்தி, செவ்வாய் கிரகத்தில் அதன் வழக்கமான ஆய்வு ஒன்றை நடத்தி உள்ளது.

அப்போது, செவ்வாய் கிரகத்திற்கு "சம்பந்தமே இல்லாத" ஒரு விசித்திரமான பொருள் சிக்கி உள்ளது. அதென்ன பொருள்? அது சிக்கியது எப்படி? இதுகுறித்து நாசா என்ன சொல்கிறது? செவ்வாய் கிரகத்தில் நாசாவின் மார்ஸ் ஹெலிகாப்ப்டரின் வேலை என்ன? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

செவ்வாய் கிரகத்தில்.. ஹெலிகாப்டர்-ஆ?!

செவ்வாய் கிரகத்தில்.. ஹெலிகாப்டர்-ஆ?!

செவ்வாய் கிரகத்தில் பல நாடுகளை சேர்ந்த மார்ஸ் ரோவர்கள் ஆய்வு பணிகளுக்காக "உலவுகின்றன" என்பதை நீங்கள் அறிந்து இருக்கலாம். ஆனால் மார்ஸ் ஹெலிகாப்டர், சிலருக்கு மட்டுமே பரிட்சயமாக உள்ளது.

மார்ஸ் ஹெலிகாப்டர் என்று நாம் இங்கே குறிப்பிடுவது, நாசாவிற்கு சொந்தமான இஞ்சினியுட்டியை (Ingenuity) தான்!

செவ்வாய் கிரகத்தில் கேட்ட சத்தம்.. அதுவும் 4 முறை கேட்டது! என்னது அது?செவ்வாய் கிரகத்தில் கேட்ட சத்தம்.. அதுவும் 4 முறை கேட்டது! என்னது அது?

இதெப்படி, எப்போது.. செவ்வாய் கிரகத்திற்கு சென்றது?

இதெப்படி, எப்போது.. செவ்வாய் கிரகத்திற்கு சென்றது?

இது விண்வெளிக்குள் தனியாக செலுத்தப்படவில்லை. இது கடந்த பிப்ரவரி 18, 2021 அன்று, செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய பெர்செவரன்ஸ் ரோவர் உடன் இணைந்து அனுப்பப்பட்ட ஒரு மார்ஸ் ஹெலிகாப்டர் ஆகும்.

இன்னும் புரியும்படி சொல்லவேண்டும் என்றால்.. இது செவ்வாய் கிரகத்தில் இயங்கும் ஒரு சிறிய ரோபோடிக் கோஆக்சியல் ரோட்டர் ஹெலிகாப்டர் (Robotic coaxial rotor helicopter) ஆகும்.

வழக்கம் போல நடந்த ஆய்வு... வழக்கத்திற்கு மாறாக சிக்கிய பொருள்!

வழக்கம் போல நடந்த ஆய்வு... வழக்கத்திற்கு மாறாக சிக்கிய பொருள்!

செவ்வாய் கிரகத்தில், பல இடங்களை ஆய்வு செய்துள்ள நாசாவின் மார்ஸ் ஹெலிகாப்டர் ஆனது, கடந்த செப்.24 ஆம் தேதியன்று ஒரு குறுகிய இடமாற்றத்திற்காக, ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல மேல் நோக்கி பறக்க தொடங்கி உள்ளது.

அப்போது வழக்கத்திற்கு மாறான ஒரு பொருள் மார்ஸ் ஹெலிகாப்டரின் "காலில்" சிக்கி உள்ளது! இது தொடர்பாக நாசா வெளியிட்டுள்ள வீடியோவில், அந்த பொருள் பார்ப்பதற்கு டாய்லெட் பேப்பர் போல இருக்கிறது!

செவ்வாய் கிரகத்தில் ஓட்டை போட்ட NASA.. உள்ளே காத்திருந்த அதிர்ச்சி!செவ்வாய் கிரகத்தில் ஓட்டை போட்ட NASA.. உள்ளே காத்திருந்த அதிர்ச்சி!

சிக்கிய வேகத்தில்.. காணாமலும் போனது!

சிக்கிய வேகத்தில்.. காணாமலும் போனது!

மார்ஸ் ஹெலிகாப்டரின் "காலில்" சிக்கிய அந்த மர்ம பொருள் ஆனது, சிலரின் கண்களுக்கு பிளாஸ்டிக் கவரை போல தெரிகிறது; ஒரு சிலருக்கு துணி போன்ற ஒரு பொருளாகவும் தெரிகிறது.

அது என்னவாக இருக்கும் என்று, சரியாக அடையாளம் காணவும்முடியவில்லை. ஏனென்றால், அந்த மர்ம பொருள், மார்ஸ் ஹெலிகாப்டரின் காலில் சிக்கிய வேகத்தில் காணாமலும் போனது.

அது எங்கே போனது?

அது எங்கே போனது?

அது கீழே விழுந்து இருக்கலாம் அல்லது மார்ஸ் ஹெலிகாப்டரில் உள்ள கேமராவின் கண்களுக்கு அப்பால் சென்று இருக்கலாம்!

ஏனென்றால், மார்ஸ் ஹெலிகாப்டர் பறக்க தொடங்கிய சிறிது நேரம் கழித்து எடுக்கப்பட்ட படங்ககளில், அதன் காலில் அசாதாரணமான எதுவும் சிக்கி இருப்பதை காண முடியவில்லை!

செவ்வாய் கிரகத்தில் டாய்லெட் பேப்பர் இருப்பது சாத்தியமா?

செவ்வாய் கிரகத்தில் டாய்லெட் பேப்பர் இருப்பது சாத்தியமா?

100% வாய்ப்பே இல்லை! ஏனென்றால், இதுவரையிலாக செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்கள் அனுப்பப்பட்டதே இல்லை. அப்படி இருக்கும் போது, அங்கே டாய்லெட் பேப்பர் இருக்கவும் வாய்ப்பு இல்லை!

எனவே இதை "மர்ம பொருள்" என்று அழைப்பதை விட FOD என்று அழைப்பது தான் இப்போதைக்கு நல்லது. அதாவது FOD என்றால் ஃபாரின் டெப்ரிஸ் ஆப்ஜெக்ட்ஸ் (Foreign debris objects) என்று அர்த்தம்!

விண்வெளியில் வீசப்பட்ட விசித்திரமான அறுகோண வைரங்கள்! பூமியில் வந்து விழுமா?விண்வெளியில் வீசப்பட்ட விசித்திரமான அறுகோண வைரங்கள்! பூமியில் வந்து விழுமா?

இதுபற்றி நாசா என்ன கூறுகிறது?

இதுபற்றி நாசா என்ன கூறுகிறது?

நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகமானது (Jet Propulsion Laboratory - JPL), கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்ட ஒரு அறிக்கையில், மார்ஸ் ஹெலிகாப்டரின் காலில் சிக்கிய அந்த பொருளின் மூலத்தை ஆராய்ந்து வருவதாக கூறி உள்ளது.

அதே அறிக்கையில், குறிப்பிட்ட FOD விளைவாக, மார்ஸ் ஹெலிகாப்டரில் எந்த விதமான சேதமும் ஏற்படவில்லை என்பதையும் ஜேபிஎல் உறுதி செய்துள்ளது!

33-வது முறையாக பறந்த மார்ஸ் ஹெலிகாப்டர்!

33-வது முறையாக பறந்த மார்ஸ் ஹெலிகாப்டர்!

Ingenuity என்று அழைக்கப்படும் நாசாவின் மார்ஸ் ஹெலிகாப்டர் ஆனது "அதன் துணையான" பெர்ஸெவரன்ஸ் ரோவருடன் சேர்ந்து, செவ்வாய் கிரகத்தில் உள்ள ஜெஸெரோ க்ரேட்டர் (Jezero Crater) என்கிற பகுதியை ஆய்வு செய்து வருகிறது

மார்ஸ் ஹெலிகாப்டர் ஆனது இதோடு மொத்தம் 33 முறை பறந்து சென்று ஆய்வு பணிகளை மேற்கொண்டுள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது!

Photo courtesy: NASA, Wikipedia

Best Mobiles in India

English summary
NASA Mars Helicopter Ingenuity Spots Strange Object Like Toilet Paper

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X