புத்தி குழம்பி போச்சா என்ன? செவ்வாய் கிரகத்திற்கு ஹெலிகாப்ட்டர் அனுப்பும் நாசா!

மேலும் கூறுகையில், "எங்களது விமான மாடல் (அதாவது செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் உண்மையான வாகனம்) ஆனது சமீபத்தில் தான் பல முக்கியமான சோதனைகளை வெற்றிகரமாக கடந்து உள்ளது" என்றும் கூறி உள்ளார்.

|

ஆம், நீங்கள் நம்பினால் சரி, நகைத்தாலும் சரி, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா மார்ஸ் எனப்படும் செவ்வாய் கிரகத்திற்கு ஹெலிகாப்டர் ஒன்றை அனுப்ப போகிறது. அதுவும் வருகிற 2020 ஆன் ஆண்டிலேயே!

இது உண்மைதானா? உண்மைதான் என்றால் அது எப்படி சாத்தியம்? என்பதை நாஸாவே விளக்குகிறது. நாசாவின் ஜெட் புரோபல்சன் லேபராட்டரியின் கீழ் மார்ஸ் ஹெலிகாப்டர் திட்டத்தின் மேலாளர் ஆன மிமி ஆங், "இதுவரை யாருமே மார்ஸ் ஹெலிகாப்டரை கட்டமைக்கும் பணியில் ஈடுபடவே இல்லை. ஆகையால் நாங்கள் தொடர்ச்சியான முறையில் புதுமையான விடயங்களை சந்தித்து வருகிறோம்" என்று கூறி உள்ளார்.

விமான மாதிரி ஆனது இயக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது

விமான மாதிரி ஆனது இயக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது

மேலும் கூறுகையில், "எங்களது விமான மாடல் (அதாவது செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் உண்மையான வாகனம்) ஆனது சமீபத்தில் தான் பல முக்கியமான சோதனைகளை வெற்றிகரமாக கடந்து உள்ளது" என்றும் கூறி உள்ளார்.


கடந்த ஜனவரி மாதத்தில், செவ்வாய் கிரகத்தை போன்றே சூழல் கொண்ட ஆய்வகத்தில் இந்த விமான மாதிரி ஆனது இயக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. அதற்கு பின்னர் அந்த ஹெலிகாப்டர் ஆனது செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் செலுத்தப்படுவதற்கு முன்னர் மார்ஸ் ஹெலிகாப்டர் டெலிவரி சிஸ்டத்துடன் இணையும் சோதனைக்காக டென்வரில் உள்ள லாக்ஹீட் மார்டின் ஸ்பேஸ்ஸிற்கு அனுப்பப்பட்டது.

"ரெட் பிளானட்"

ஒரு தொழில்நுட்ப பரிசோதனையாக களமிறங்கும் இந்த மார்ஸ் ஹெலிகாப்டர் ஆனது எந்த விதமான விஞ்ஞான கருவிகளையும் கொண்டிருக்கவில்லை என்று நாசா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதன் நோக்கம் வலுவான செவ்வாய் கிரக வளிமண்டலத்தில் (பூமியின் அடர்த்தியில் ஒரு சதவிகிதத்தை கொண்டது) இயங்கும் ஒரு விமானத்தை உறுதிப்படுத்துவதே ஆகும். மேலும் அது பூமியில் இருந்து ஒரு குறிப்பிட்ட பெரிய இடைப்பட்ட தொலைவுகளால் கட்டுப்படுத்த முடியுமா என்பதையும் உறுதி செய்ய வேண்டும்.


அறிவியல் சோதனைகளை நிகழ்த்தும் விலை உயர்ந்த சாதனங்களை கொண்டு சொல்லாவிட்டாலும் கூட, இந்த மார்ஸ் ஹெலிகாப்டர் ஆனது "ரெட் பிளானட்" என்று அழைக்கப்படும் செவ்வாய் கிரகத்தை ஆவணப்படுத்தும் நோக்கத்தின் கீழ், இந்த வாகனத்தால் செவ்வாய் கிரகத்தை ஆராய முடியும் என்பதை நிரூபிக்கும் எண்ணத்தின் கீழ், உயர்-வண்ண படங்களை வழங்கக்கூடிய ஒரு கேமராவைக் கொண்டுள்ளது. இது எதிர்கால செவ்வாய் பயணங்களில் ஈடுபடுத்தப்படும் இரண்டாம் தலைமுறை மார்ஸ் ஹெலிகாப்டர்களுக்கு உதவியாக இருக்கும் என்பதிலும் சந்தேகம் இல்லை.

குன்றுகள், குகைகள்

இவ்வகை ஹெலிகாப்டர் ஆனது குன்றுகள், குகைகள் மற்றும் ஆழ்கடலிகள் போன்ற - இதுவரையிலாக நிகழ்த்தப்பட்ட செவ்வாய் கிரக ஆய்வின் மூலம் - அறியப்படாத அல்லது செல்ல கடினமான இடங்களுக்கு சென்று ஆய்வு செய்ய உதவும். அதுமட்டுமின்றி எதிர்கால மனிதக் குழுக்களுக்கு பேலோட் சுமக்கும் ஒரு கருவியாக அல்லது குறிப்பிட்ட பொருளை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்ல உதவும் வாகனமாக இவைகள் செயல்படுத்தலாம்.

ராக்கெட்டின் வழியாக ஏவப்படும்

ராக்கெட்டின் வழியாக ஏவப்படும்

மேற்கூறப்பட்டுள்ள செவ்வாய் ஹெலிகாப்டரின் விநியோக முறையானது நாசாவினால் சோதிக்கப்பட்டு விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதாவது ராக்கெட்டின் வழியாக ஏவப்படும் போது ஏற்படும் கடினமான அதிர்வுகளை தங்குகிறதா, விண்வெளிக்குள் புகுந்த பின்னர் சந்திக்கும் தீவிர வெப்பநிலையை (-129 டிகிரி செல்சியஸ்க்கும் கீழே) தாங்குகிறதா போன்ற சோதனைகள் நிகழ்த்தப்பட்டு உள்ளன. இந்த சோதனைகள் மிகவும் முக்கியமானவவைகள் ஆகும் ஏனெனில் விண்வெளியிலும், செவ்வாயிலும் இதன் கூறுகள் செயலிழப்பு அல்லது தோல்வியை சந்திக்க நேரிடலாம்.

ரெட்பஸ் ஆப் பயன்படுத்துபவர்களா நீங்கள்: அசத்தலான சேவை அறிமுகம்: இன்றே பயன்படுத்துங்கள்.!ரெட்பஸ் ஆப் பயன்படுத்துபவர்களா நீங்கள்: அசத்தலான சேவை அறிமுகம்: இன்றே பயன்படுத்துங்கள்.!

புதிய சோலார் பேனல்

புதிய சோலார் பேனல்

பலதரப்பட்ட ஆய்வுகளுக்கு பின்னர் ஜேபிஎல் ஆய்வகத்திற்கு திரும்பியது. பின்னர் ஹெலிகாப்டருக்கு சக்தி கொடுக்க உதவும் ஒரு புதிய சோலார் பேனல் அதனுடன் இணைக்கப்பட்டு உள்ளது. மற்றும் ஹெலிகாப்டரின் ரோட்டார் பிளேட் ஆனது கார்பன் ஃபைபர், விமான-தர அலுமினியம், சிலிக்கான், தாமிரம், படலம், மற்றும் ஏரோஜெல்லால் உருவாக்கம் பெற்று இருப்பதும் உறுதி செய்யப்பட்டு உள்ளது.

குறைந்த விலையில் அதீத பலன் கொண்ட பிஎஸ்என்எல் குறைந்த விலையில் அதீத பலன் கொண்ட பிஎஸ்என்எல் "அபிநந்தன் 151" திட்டம்! என்ன ஸ்பெஷல் தெரியுமா?

ஆபத்துக்களையும் மதிப்பீடு செய்ய உள்ளது

ஆபத்துக்களையும் மதிப்பீடு செய்ய உள்ளது

இந்த மார்ஸ் ஹெலிகாப்டர் ஆனது வருகிற 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் விண்வெளிக்குள் செலுத்தப்பட உள்ள இந்த 2020 ரோவருடன் சேர்த்து விண்வெளிக்குள் செலுத்தப்பட்டு உள்ளது என்பதும், 2020 ரோவர் ஆனது செவ்வாய் கிரகத்தில் அது இறங்கும் தளத்தில் புவியியல் மதிப்பீடுகளை நடத்தி, சுற்றுச்சூழலின் வசதியையும், பண்டைய செவ்வாய் கிரகத்தின் வாழ்வின் அறிகுறிகளைத் தேடுவதையும், எதிர்கால மனித ஆராய்ச்சியாளர்களுக்கான இயற்கை வளங்களையும், ஆபத்துக்களையும் மதிப்பீடு செய்ய உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அது செவ்வாய் கிரக பாறைகள் மற்றும் மண்ணின் மாதிரிகள் சேகரித்து, அவற்றை சீல் செய்யக்கூடிய குழாய்களில் அடைத்து - எதிர்காலத்தில் பூமிக்கு திரும்பும் மார்ஸ் மிஷனை மனதிற் கொண்டு - அதை செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பிலேயே விட்டுவிட்டு வரும் பணியையும் செய்ய உள்ளது.


இந்த ரோவர் ஆனது புளோரிடாவில் உள்ள கேப் கனெரல் விமானப்படை நிலையத்தின், காம்ப்ளக்ஸ் 41 இல் இருந்து கிளம்பும் யுனைட்டட் ஏஞ்ச்ஸ் அலையன்ஸ் அட்லஸ் வி ராக்கெட் முதுகின் மீது ஏறி விண்வெளிக்குள் செல்ல உள்ளது. பின்னர் இது, 2021 ஆம் ஆண்டின் பிப்ரவரி 18 ஆம் தேதி அன்று செவ்வாய் கிரகத்தின் ஜெஸீரோ க்ரேட்டர் (Jezero Crater) பகுதில் தரை இறங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரெட்பஸ் ஆப் பயன்படுத்துபவர்களா நீங்கள்: அசத்தலான சேவை அறிமுகம்: இன்றே பயன்படுத்துங்கள்.ரெட்பஸ் ஆப் பயன்படுத்துபவர்களா நீங்கள்: அசத்தலான சேவை அறிமுகம்: இன்றே பயன்படுத்துங்கள்.

Best Mobiles in India

English summary
nasa-mars-helicopter-cleared-to-take-first-ever-flight-on-the-red-planet-in-2020 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X