செவ்வாய் கிரகம்: நாசாவின் கனவுத் திட்டம் இதுதான்.! அடேங்கப்பா.!

|

நாசா அமைப்பு இதுவரை பல்வேறு புதிய புதிய சாதனைகளை செய்துள்ளது, குறிப்பாக இந்த நாசா அமைப்பு செய்யும் சாதனைக்கு பல்வேறு மக்களும் ஆதரவுகளும், பாரட்டுகளும் தெரிவித்த வண்ணம் உள்ளனர் என்றுதான்கூறவேண்டும்.

செவ்வாய்

செவ்வாய்

நாசா அமைப்பு மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பி வைக்கும் தனது கனவுத் திட்டத்தை நோக்கி
பயணித்து வருகிறது. மேலும் 2020-ல் நாசா கைவசாமிருக்கும் திட்டங்கள் என்னென்ன என்பது குறித்து விரிவாகப்பார்ப்போம்.

அமெரிக்காவின் நாசா

அமெரிக்காவின் நாசா

அதாவது பூமியின் இயற்கையான நீட்சியாகக் கருதப்படும் இன்னொரு கோள் செவ்வாய், என்றாவது ஒருநாள்அங்கு மனித வாழ்க்கை சாத்தியம் என்ற நம்பிக்கையுடன் சில நாடுகள் இந்த கோளை ஆய்வு செய்து வருகின்றன. இவற்றுள் முந்தி நிற்பது அமெரிக்காவின் நாசா விண்வெளி அமைப்பு தான்.

மகாபிரபு இங்கயும் வந்துட்டீங்களா., அமேசான், பிளிப்கார்டு போட்டியாக ஜியோமார்ட் அறிமுகம்.!மகாபிரபு இங்கயும் வந்துட்டீங்களா., அமேசான், பிளிப்கார்டு போட்டியாக ஜியோமார்ட் அறிமுகம்.!

 நாசா

அதன்படி நாசா பல செயற்கைக் கோள்களையும், pathfinder, spirit, opportunity, curiosity,போன்ற உலவு வாகனங்களையும் செவ்வாய்க்கு அனுப்பி ஆராய்ச்சியை துரிதப்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மார்ஸ் 2020ரோவர்

மார்ஸ் 2020ரோவர்

வரும் 2020ஜூலை மாதம் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப உள்ள ஆய்வுக்கலத்தை நாசா அறிமுகப்படுத்தியுள்ளது, மார்ஸ் 2020ரோவர் என்ற ஆய்வுகலத்தை நாசா செவ்வாயில் களமிறக்கும் என்றும், செவ்வாயில் மனிதர்கள் வாழ்வதற்கான சூழல் உள்ளதா? எற்கனவே அங்கு உயிரனங்கள் வாழ்ந்தனவா? அதற்கான அறிகுறிகள் உள்ளதா என்றும் இந்த 2020ரோவர் ஆய்வு செய்யும் எனக் கூறப்பட்டுள்ளது

23கேமராக்கள்

23கேமராக்கள்

கியூரியாசிட்டி ரோவரை போன்ற 6சக்கரங்கள் கொண்ட இந்த மார்ஸ் ரோவரில் படம்படிக்கக்கூடிய 23கேமராக்கள்,காற்றின் வேகத்தை உணர 2கருவிகள், லேசர்கள், உள்ளிட்ட சாதனங்கள் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த ரோவர் பாறை போன்ற கரடு முரடான பாதைகளிலும் நாள் ஒன்றுக்கு 180மீட்டர் தூரத்திற்கு பயணிக்கும்.

பிப்பரவரி மாதம்

பிப்பரவரி மாதம்

அமெரிக்கா அனுப்பும் ஐந்தாவது ரோவர் ரோபாவான இது, வரும் ஜூலை மாதம் செவ்வாய்க்கு பயணிக்க உள்ளது,இந்த ரோவர் 2021-ம் ஆண்டு பிப்பரவரி மாதம் களமிறங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஹெலிகாப்படர்

ஹெலிகாப்படர்

அதிகம் எதிர்பார்க்கும் மார்ஸ் 2020-ஐ விண்ணில் ஏவும் பணி லாஸ் ஏஞ்சல்சின் அருகே பசடேனாவில் உள்ள ஜெட்புரோபல்சன் ஆய்வகத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மார்ஸ் 2020 ரோவர் மிஷனுடன் சிறிய ரக ஆளில்லாபுதிய ஹெலிகாட்டரை இணைத்து விண்ணில் செலுத்த நாசா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதுவும்1.8கிலோகிராம் எடைக்கொண்ட இந்த மார்ஸ் 2020 ரோவரின் உடற்பகுதியில் இந்த ஹெலிகாப்படர் இணைக்கப்பட்டுசெவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்படவுள்ளது. இந்த ரோவருடன்ரோபோவும், மைக்ரோ சிப்பும் செவ்வாய்க்குசெல்லவுள்ளது. மார்ஸ் 2020 ரோவரின் ஆயுட்காலம் 2ஆண்டுகள் ஆகும். ஏற்கனவே இந்தியா அனுப்பிய மங்கள்யான் விண்கலம் 5ஆண்டுகளாக ஆய்வில் ஈடுபட்டுவரும் நிலையில், அமெரிக்காவும் போட்டியாக வரும்.

Best Mobiles in India

English summary
NASA Just Unveiled Its 2020 Mars Rover, And We're Beyond Excited: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X