பூமியை நோக்கி வரும் "அபாயகரமான சிறுகோள்".. இதனால் நமக்கு ஆபத்தா நாசா என்ன சொல்கிறது?

|

காட் ஆஃப் டிஸ்ட்ரக்ஷன் அப்போபிஸ் (God of Destruction Apophis) என்ற 2021 ஆம் ஆண்டின் மிகப்பெரிய சிறுகோள் பூமியைக் கடந்து சென்ற பிறகு , இப்போது மற்றொரு சிறுகோள் முந்தைய சிறுகோளின் வேகத்தை விட மிக வேகமான வேகத்தில் பூமியை நோக்கி வந்துகொண்டுள்ளது என்று நாசா எச்சரித்துள்ளது. காட் ஆஃப் டிஸ்ட்ரக்ஷன் அப்போபிஸ் உடன் செல்லும் மற்றொரு சிறுகோளை நாசா கண்டறிந்துள்ளது. இந்த சிறுகோள் ஆபத்தானதா? இதனால் பூமிக்கும், பூமியில் வாழும் உயிர்களுக்கும் ஏதேனும் பாதிப்பு உள்ளதா என்று விரிவாகப் பார்க்கலாம்.

AF8 எனப்படும் புதிய சிறுகோள் ஆபத்தானதா?

AF8 எனப்படும் புதிய சிறுகோள் ஆபத்தானதா?

முதலில் நாம் அச்சப்படத் தேவையில்லை, காரணம், இந்த சிறுகோள் பூமியிலிருந்து சுமார் 3.4 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் இருந்து பாதுகாப்பாகக் கடந்து செல்லும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், இது எதிர்பார்த்ததை விட அதிக வேகத்துடன் பூமியை நோக்கி வந்து கொண்டுள்ளது. AF8 எனப்படும் இந்த புதிய சிறுகோள் ஒரு கால்பந்து மைதானத்தின் அளவு கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க விண்வெளி ஏஜென்சி என்ன சொல்கிறது?

அமெரிக்க விண்வெளி ஏஜென்சி என்ன சொல்கிறது?

இதனால் தான் நாசா விஞ்ஞானிகள் இந்த சிறுகோளை ஆபத்தானதாக இருக்கக்கூடும் என்று நம்புவதாக அமெரிக்க விண்வெளி ஏஜென்சி தெரிவித்துள்ளது. விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, இந்த சிறுகோள் மே 4 ஆம் தேதி பூமிக்கு மிக அருகில் கடந்து செல்லும் என்று கணிக்கப்பட்டுத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறுகோள் 260 முதல் 580 மீட்டர் வரை இருக்கும் என்று நாசா மதிப்பிட்டுக் கூறியுள்ளது. இந்த சிறுகோள் முதன்முதலில் விஞ்ஞானிகளால் மார்ச் மாதத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

அடுத்த சிக்கல்: எஸ்பிஐ, எச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களா நீங்கள்?- இனி இந்த பிரச்சனை!அடுத்த சிக்கல்: எஸ்பிஐ, எச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களா நீங்கள்?- இனி இந்த பிரச்சனை!

AF8 மிகவும் சிறியது தான், ஆனால் அபாயகரமானது

AF8 மிகவும் சிறியது தான், ஆனால் அபாயகரமானது

விண்வெளியில் பூமியால் கடந்து வந்த மற்ற பெரிய சிறுகோள்களை விட AF8 மிகவும் சிறியது தான், ஆனால் இது இன்னும் மிகவும் ஆபத்தானது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார். AF8 2021 சிறுகோள் பூமிக்கு அருகில் வினாடிக்கு 9 கி.மீ வேகத்தில் சென்று கொண்டிருக்கும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

"அபாயகரமான சிறுகோள்" AF8

நாசா ஜேபிஎல் 2021 AF8 ஐ "அபாயகரமான சிறுகோள்" என்று வகைப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சிறிய சிறுகோளாக இருந்தாலும் இதன் ஆற்றல் பேராபத்தை ஏற்படுத்தக் கூடும் என்று கருதப்படுகிறது. 2021 AF8 இன் சுற்றுப்பாதை 2020 டிசம்பர் 25 ஆம் தேதி வரையிலான அவதானிப்புகளால் தீர்மானிக்கப்படுகிறது. இது கடைசியாக அதிகாரப்பூர்வமாக மார்ச் 4, 2021 அன்று காணப்பட்டது.

கடலுக்குள் புதைக்கப்பட்ட பூமியின் 8 ஆம் கண்டம் பற்றிய திடுக்கிடும் தகவல்! வரைபடத்தை வெளியிட்ட குழு!கடலுக்குள் புதைக்கப்பட்ட பூமியின் 8 ஆம் கண்டம் பற்றிய திடுக்கிடும் தகவல்! வரைபடத்தை வெளியிட்ட குழு!

பாதுகாப்பாகக் கடந்து செல்லும்

பாதுகாப்பாகக் கடந்து செல்லும்

IAU மைனர் பிளானட் சென்டர் அதன் சுற்றுப்பாதையைத் தீர்மானிக்க 157 அவதானிப்புகளைப் பதிவு செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. எது எப்படியாக இருந்தாலும் இப்போதைக்கு இந்த சிறுகோளின் பாதையில் மாற்றங்கள் எதுவுமில்லை என்பதனால் இது பாதுகாப்பாகக் கடந்து செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்பாராமல் திடீர் இடையூறு எதுவும் ஏற்பட்டால் ஆபத்து நிகழ வாய்ப்புள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
NASA JPL has classified 2021 AF8 as a Potentially Hazardous Asteroid due to its predicted close pass : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X