சந்திரயான் 2 : இன்று அனைவரும் எதிர்பார்த்த விக்ரம் லேண்டர் குறித்த தகவலை தரும் நாசா ஆர்பிட்டர்.!

|

உலகம் முழுவதும் அனைவரும் எதிர்பார்க்கும் சந்திரயான் 2 விக்ரம் லேண்டர் விழுந்து கிடக்கும் இடத்துக்கு மேலே நாசாவின் ஆர்பிட்டர் இன்று கடக்க உள்ளது. இந்த நடவடிக்கை மூலம் கிடைக்கும் முக்கிய புகைப்படங்கள் மற்றும் தகவல்களை இஸ்ரோவுடன் பகிரந்து கொள்வோம் என நாசா அமைப்பு கூறியுள்ளது.

 சந்திரயான்-2

சந்திரயான்-2

நிலவை பற்றி ஆய்வு செய்வதற்காக ஆர்பிட்டர், விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் ஆகிய 3 பகுதிகளை உள்ளடக்கிய சந்திரயான்-2 விண்கலத்தை இஸ்ரோ கடந்த ஜூன் 22-ந்தேதி ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பியது. ஆர்பிட்டரில் இருந்து பிரிந்து, சந்திரனில் இருந்து 35 கி.மீ. உயரத்தில் சுற்றி வந்த லேண்டர் கடந்த சனிக்கிழமை அதிகாலை நிலவில் தரை இறங்க முயன்றது.

தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது

தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது

பின்பு விக்ரம் லேண்டர் நிலவில் இருந்து சரியாக 2.1கிலோ மீட்டர் உயரத்தில் இருந்த போது, அதற்கும் பெங்களூருவில் உள்ள இஸ்ரோ தரை கட்டுபட்பாட்டு நிலையத்துக்கும் இடையேயான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

மிரட்டலான மோட்டோரோலா ஸ்மார்ட்டிவி வெறும் ரூ.13,999! எங்க வாங்கலாம்?

அனைவரும் மகிழ்ச்சி

நிலவின் மேற்பரப்பில் விக்ரம் லேண்டர் எங்குத் தரையிறங்கியுள்ளது என்று இஸ்ரோ தனது ஆர்பிட்டரை பயன்படுத்தி கண்டுபிடித்தது. இந்த செய்தியைக் கேட்டு சோகத்திலிருந்த இந்தியர்கள் அனைவரும் மகிழ்ச்சி கொண்டனர்.

ஹார்டாக லேண்ட்

ஹார்டாக லேண்ட்

நிலவின் மேற்பரப்பில் லேண்டர், ஹார்டாக லேண்ட் ஆனதுதான் இந்தப் பிரச்னைகளுக்குக் காரணம். அப்படி லேண்ட் ஆன காரணத்தினால் லேண்டர் பாதிக்கப்பட்டிருக்கலாம்" என்று இன்னொரு இஸ்ரோ விஞ்ஞானி கூறுகிறார்.

ஜியோ பைபருக்கு போட்டி: 6 மாதத்திற்கு 500ஜிபி வழங்கி தெறிக்கவிட்ட பிஎஸ்என்எல்.!

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா

மேலும் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா சார்பில் ஏற்கெனவே கடந்த 2009-ம் ஆண்டு அனுப்பப்பட்டுள்ள நிலவு புலனாய்வு ஆர்பிட்டர் நிலவைச் சுற்றி ஆய்வு செய்து வருகிறது, நாசாவின் ஆர்பிட்டர் நிலவின் தென் துருவப் பகுதியில் லேண்டர் விழுந்து கிடக்கும் பகுதிக்கு மேலே இன்று கடக்க உள்ளது.

சமிக்ஞை தொடர்பை ஏற்படுத்த முயற்சிக்கும்

சமிக்ஞை தொடர்பை ஏற்படுத்த முயற்சிக்கும்

எனவே விக்ரம் லேண்டர் விழுந்து கிடக்கும் பகுதிக்கு மேலே செல்லும் ஆர்பிட்டர் இன்று விக்ரம் லேண்டரை படம் பிடித்து அனுப்பும் என்றும்,அதனுடன் சமிக்ஞை தொடர்பை ஏற்படுத்த முயற்சிக்கும் என்றும் நாசா தெரிவித்துள்ளது.

மேலும் இதற்குமுன்பு விக்ரம் லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்த 'ஹலோ' என்று ரேடியோ தகவலை நாசா அனுப்பி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்து கொள்வோம்

பகிர்ந்து கொள்வோம்

பின்பு சந்திரயான் 2 விக்ரம் லேண்டர் படங்கள் தகவல்கள் என எது கிடைத்தாலும் இஸ்ரோவுடன் பகிர்ந்து கொள்வோம் என நாசாவின் எல்ஆர்;ஓ திட்ட விஞ்ஞானி நோவா பெட்ரோ கூறியதாக 'ஸ்பேஸ்பிளைட்நவ்.காம்' வலைதளம் மூலம்தகவல் கிடைத்துள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Nasa Is Sending It's Orbiter To Click Picture Of Chandrayaan 2 Vikram Lander: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X