நாசா விசாரணை: விண்வெளியில் இருந்து குற்றம் செய்த பெண்.!
அமெரிக்காவில் நாசா என்று அழைக்கப்படும் தேசிய வானூர்தி மற்றும் விண்வெளி நிர்வாகம் தொடர்ந்து பல்வேறு புதிய சாதனைகளை படைத்த வண்ணம் உள்ளது என்று தான் கூறவேண்டும். மேலும் நாசா செய்த சாதனை உலகளில் அமெரிக்காவுக்கும் சிறந்த பெயர் பெற்றுக்கொடுத்துள்ளது.

குறிப்பாக விண்வெளியில் அமெரிக்கா, கனடா, ஜப்பான், ரஷ்யா, ஐரோப்பிய நாடுகள் இணைந்து சர்வதேச மையத்தை அமைத்துள்ளன. இங்கு பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் தங்கியிருந்து விண்வெளி ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் முன்னாள் வாழ்க்கை பார்ட்னரின் வங்கிக்கணக்கை சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து அனுமதியின்றி இயக்கியதாக, விண்வெளி வீராங்கனை மீது புகார் எழுந்துள்ளது.

அதன்படி அமெரிக்காவை சேர்ந்த வீராங்கனை, அன்னே மெக்லைன் என்பவர் 6மாதம் விண்வெளியில் தங்கியிருந்து ஆய்வில் ஈடுபட்டார். கடந்த ஜீன் மாதம் அங்கிருந்து அவர் திரும்பியுள்ளார்.

இந்நிலையில் இவர் விண்வெளயில் இருந்தபோது அங்கிருந்தே குற்றச் செயலில் ஈடுபட்டதாக புகார் கூறப்பட்டுள்ளது, இவர் தனது முன்னாள், தன் பாலின பார்ட்னர் சம்மர்வுடனுக்கு சொந்தமான வங்கி கணக்கை, அவர் அனுமதியில்லாமல் அங்கிருந்தே கையாண்டாராம். இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டு, தொடர்ந்து நாசா அவரிடம் விசாரணை நடத்த இருக்கிறது.


Click it and Unblock the Notifications