விண்வெளியில் தோன்றிய பேய் போன்ற தோற்றம்! காரணம் இதுதான்!

|

நாசாவின் ஹப்பிள் டெலெஸ்கோப் இரண்டு விண்மீன்களின் மோதல் காட்சியைப் படம்பிடித்துள்ளது. இதில் சுவாரசியம் என்னவென்றால் இந்த இரண்டு விண்மீன்களின் மோதலினால் விண்வெளியில் 'பேய்' போன்ற முகம் ஒன்று தோன்றியுள்ளது என்பது தான். எதனால் இந்த பேய் முகம் தோன்றியது என்று தெரியுமா?

 704 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் தோன்றிய பேய் முகம்

704 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் தோன்றிய பேய் முகம்

பூமியிலிருந்து சுமார் 704 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் காணப்படும் இரண்டு விண்மீன்களின் முழுமையான அமைப்பு தோற்றம் தான் ஆர்ப்-மடோர் 2026-424 (AM 2026-424) ஆகும். இந்த இரண்டு விண்மீன்களும் ஒன்றோடு ஒன்று நேரடியாக மோதிக்கொள்ளத் துவங்கியுள்ளதை நாசா ஹப்பிள் டெலஸ்கோப் படம்பிடித்துள்ளது.

நாசாவின் ஹப்பிள் டெலஸ்கோப் கிளிக் செய்த புகைப்படம்

நாசாவின் ஹப்பிள் டெலஸ்கோப் கிளிக் செய்த புகைப்படம்

விண்வெளியில் விண்மீன்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்வது இயல்பான விஷயம் தான் என்றாலும். நாசாவின் ஹப்பிள் டெலஸ்கோப் கிளிக் செய்துள்ள இந்த புகைப்படத்தில் பயமுறுத்தும் தோற்றத்தில், பேய் போன்ற முகம் ஒன்று தோன்றியுள்ளது. இந்த புகைப்படத்தை நாசா தற்பொழுது வெளியிட்டுள்ளது.

சீனாவின் யூடூ 2 ரோவர் நிலவில் என்ன கண்டுபிடித்துள்ளது தெரியுமா?சீனாவின் யூடூ 2 ரோவர் நிலவில் என்ன கண்டுபிடித்துள்ளது தெரியுமா?

100 மில்லியன் ஆண்டுகள் நீடிக்கும் தோற்றம்

100 மில்லியன் ஆண்டுகள் நீடிக்கும் தோற்றம்

இந்த ராட்சச மோதல் காரணமாக ஒரு வளைய கட்டமைப்பு உருவாகியுள்ளது. இந்த கட்டமைப்பு சுமார் 100 மில்லியன் ஆண்டுகள் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் இரண்டு விண்மீன் திரள்கள் ஒன்றிணைய இரண்டு பில்லியன் ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரிய விண்மீன் உருவாக வாய்ப்பு

பெரிய விண்மீன் உருவாக வாய்ப்பு

விண்மீன் திரள்கள் ஒன்றுடன் ஒன்று நெருங்கி வரும்போதெல்லாம், ஒரு விண்மீன் மற்றொன்றால் அழிக்கப்படக்கூடும், இருப்பினும் இந்த அழிவில் ஒரு புதிய உருவாக்கமும் இருக்கும் என்பது தான் உண்மை. மோதிக்கொள்ளும் விண்மீன் திரள்கள் அமைதியாக ஒன்றிணைந்து ஒரு பெரிய விண்மீனை உருவாக்கும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

பிஎஸ்என்எல் ரூ.108 ப்ரீபெய்ட் திட்டத்தின் முழு நன்மைகள் என்னவென்று தெரியுமா?பிஎஸ்என்எல் ரூ.108 ப்ரீபெய்ட் திட்டத்தின் முழு நன்மைகள் என்னவென்று தெரியுமா?

பேய் முகத்திற்கான முக்கிய காரணம்

பேய் முகத்திற்கான முக்கிய காரணம்

இரண்டு விண்மீன் திரள்களின் மோதல் மோதிரம் போன்ற கட்டமைப்பை உருவாக்குவது தான் இயல்பு. ஆனால் இந்த இரண்டு விண்மீன்களின் மோதல் பேய் போன்ற உருவத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான முக்கிய காரணம் இந்த இரண்டு விண்மீன்களும் அரிய வளையக் கட்டமைப்பைக் கொண்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதனால் தான் மண்டை ஓட்டிற்குள் ஒளிரும் இரண்டு கண்களுடன் இருக்கும் பேய் தோற்றம் உருவாகியுள்ளதாகத் கூறியுள்ளனர்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
NASA Hubble Telescope Captures Ghost like Face In Space : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X