பூமியை தாக்கவுள்ள மிகப்பெரிய விண்கல்! நாசா தலைவர் தகவல்..!

"இது ஹாலிவுட் பற்றியது இல்லை மற்றும் திரைப்படங்களைப் பற்றி அல்ல என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

|

அமெரிக்காவில் நாசா என்று அழைக்கப்படும் தேசிய வானூர்தி மற்றும் விண்வெளி நிர்வாக (NASA) அமைப்பின் தலைவர், ஒரு மிகபெரிய விண்கல் நமது வாழ்நாளில் பூமியை தாக்கும் என்று தெரிவித்துள்ளார்.

பூமியை தாக்கவுள்ள மிகப்பெரிய விண்கல்! நாசா தலைவர் தகவல்..!

மேரிலேண்ட் காலேஜ் பார்க்-ல் நடைபெற்ற இன்டர்நேசனல் அகாடமி ஆப் ஏரோனாடிக்ஸ்-ன் 2019 கிரக பாதுகாப்பு மாநாட்டில் தனது முக்கிய உரையில் நாசா அமைப்பின் நிர்வாகி ஜிம் பிரையன்ஸ்டின், விண்கல் தொடர்பான அச்சுறுத்தல் உண்மையானது என்று கூறினார்.

ஹாலிவுட் பற்றியது இல்லை

ஹாலிவுட் பற்றியது இல்லை

"இது ஹாலிவுட் பற்றியது இல்லை மற்றும் திரைப்படங்களைப் பற்றி அல்ல என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதன் முக்கிய நோக்கம் வாழ்வதற்கு ஏற்ற ஒரே கிரகமான பூமியை பாதுகாப்பது மட்டும் தான்" என "பிரையன்ஸ்டின் ஏப்ரல் 29 அன்று பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இரஷ்யா

இரஷ்யா

பிரையன்ஸ்டின் 2013 ஆம் ஆண்டு இரஷ்யாவை தாக்கிய 65அடி விண்கல்லை சுட்டிக்காட்டி பேசும்போது, "இந்த நிகழ்வுகள் அரிதானது இல்லை. இவை எப்போதும் நடக்கின்றன" என்று கூறினார்.

 2020ல் தொடங்கவுள்ளது

2020ல் தொடங்கவுள்ளது

விண்வெளி ஆய்வு மற்றும் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவது போன்று, நமது பூமியை பாதுகாப்பதும் முக்கியமானது தான் என கூறும் அவர், இரட்டை விண்கல் திசைதிருப்பு சோதனையான கிரக பாதுகாப்பு மிஷன் 2020ல் தொடங்கவுள்ளது என்று பிரையன்ஸ்டன் கூறினார்.

விண்கலத்தை செலுத்துவதன் மூலம் பூமியில் தாக்குவதற்கு வரும் விண்கற்களின் போக்கை திசைதிருப்பது இந்த மிஷனின் நோக்கமாகும். மற்ற திட்டங்கள் அனைத்தும் முக்கியம் என்றாலும் பூமியை பாதுகாப்பாக வைத்திருப்பது அதைவிட முக்கியம் என்று தெரிவிக்கிறார்.

தாக்குதலில் இருந்து பாதுகாப்பது

தாக்குதலில் இருந்து பாதுகாப்பது

எனவே இதற்காக தான் நாம் இந்த பணிகளை செய்கிறோம். ஆம், விஞ்ஞானம் பற்றியது, கண்டுபிடிப்பு பற்றியது, மற்றும் ஆராய்ச்சி பற்றியது. ஆனால் அந்த பணிகளை நாம் செய்ய வேண்டிய காரணங்களில் ஒன்று, நாம் வாழக்கூடிய இந்த கிரகத்தை மற்ற தாக்குதலில் இருந்து பாதுகாப்பது" என்கிறார்.

பேரழிவு

பேரழிவு

இந்த மாநாட்டின் போது, நாசாவின் கிரக பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அலுவலகம் மற்றும் பிற அமெரிக்க நிறுவனங்கள் மற்றும் விண்வெளி அறிவியல் நிறுவனங்கள் இணைந்து, பூமியை ஒரு விண்கல் தாக்கும் யதார்த்தமான ஆனால் கற்பனை சூழ்நிலையை நடத்தினர்.


"இந்த பயிற்சிகள் மூலம் உண்மையில் பேரழிவு சமயத்தில் எப்படி கையாள வேண்டும் அறிந்துகொண்டோம். இதன் மூலம் எப்படி அரசின் பல்வேறு துறைகளை தொடர்பு கொண்டு ஒருங்கிணைந்து மீட்பு பணிகளை செய்வது என்பதை தெரிந்துகொள்ள இது உதவியாக இருந்துது" என நாசாவின் கிரக பாதுகாப்பு அலுவலர் லிண்ட்லீ ஜான்சன் கூறினார்.

மார்ச் 26

மார்ச் 26

மார்ச் 26 அன்று, வானியலாளர்கள் பூமிக்குரிய அபாயகரமானதாக கருதப்பட்ட ஒரு பூமிக்கு அருகாமை பொருளை கண்டுபிடித்தனர். சில மாதங்கள் கண்காணிப்புக்குப் பின்னர், 2027 இல் அந்த விண்கல் பூமியை பாதிக்க 100ல் ஒரு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

நாசா

நாசா

"இந்த பயிற்சியில் பங்கேற்பாளர்கள் சாத்தியமான தாக்கத்தின் விளைவுகளைத் தடுக்கவும், அந்த விண்கல்லை தகர்த்தல் மற்றும் பாதையை மாற்றுதல் மற்றும் அதற்காக திட்டமிடல் பணிகளுக்கு சாத்தியமான தயாரிப்புகளை விவாதித்தனர் "என்று நாசா அறிக்கையில் தெரிவித்துள்ளது

Best Mobiles in India

English summary
NASA Head Says a Major Asteroid Could Crash Into Earth in the Future: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X