செவ்வாயில் உள்ள ஆபர்சுனிட்டி ரோவரை கடைசியாக தொடர்புகொள்ள முயன்ற நாசா! அப்புறம் என்ன ஆச்சு தெரியுமா?

ஸ்பிரிட் மற்றும் ஆபர்சுனிடி ரோவர்கள், செவ்வாய் கிரகம் ஒப்பீட்டளவில் பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு சூடான மற்றும் ஈரமான கிரகமாக இருந்தன என்பதற்கான ஆதாரங்களை கண்டறிந்தன.

|

நீண்ட காலமாக செயல்படாமல் இருக்கும் நாசாவின் மார்ஸ் ரோவர் அதன் வருத்தமான காலக்கெடுவை நெருங்கிக்கொண்டுள்ளது.

செவ்வாயில் உள்ள ஆபர்சுனிட்டி ரோவரை கடைசியாக தொடர்புகொள்ள முயன்ற நாசா

கடந்த ஜூன் மாதம் முதல் செயல்படாமல் உள்ள இந்த ரோவரை செயல்பட வைக்க எடுக்கப்பட்ட கடைசிகட்ட திட்டமிட்ட முயற்சிகள், கடந்த செவ்வாய்க்கிழமை அன்று (பிப்ரவரி12) செவ்வாயில் ஏற்பட்ட தூசுப் புயல் காரணமாக தோல்வியடைந்ததாக நாசா அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாசா

நாசா

நாசா நிர்வாகி ஜிம் பிரையன்ஸ்டின், ஏஜென்சி அறிவியல் மேலாளர் தாமஸ், ஆபர்சுனிடி திட்ட தலைவர் ஜோன் கால்லஸ், செயல்திட்ட முதன்மை புலனாய்வாளர் ஸ்டீவ் ஸ்க்யூஸ் மற்றும் பிற முக்கிய நிர்வாகிகள் இடம்பெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று(பிப்ரவரி 13) 2 மணிக்கு நடைபெறவுள்ளதாகவும், அதில் ஆபர்சுனிடி ரோவர் பற்றிய சமீபத்திய தகவல்கள் நாசாவால் அறிவிக்கப்டவுள்ளன.

கோல்ப் கார்ட்

கோல்ப் கார்ட்

கோல்ப் கார்ட் அளவுள்ள ஆபர்சுனிடி ரோவர் ஜனவரி 2004 இல் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது. அடுத்த சில வாரங்களிலேயே அதன் இரட்டையான ஸ்ப்ரிட், செவ்வாய் கிரகத்தின் வேறொரு பகுதியில் தரையிறங்கியது. சூரிய சக்தி மூலம் இயங்கும் இவ்விரு ரோவர்களும், 90-நாள் மேற்பரப்பு செயல்திட்டத்துடன் தண்ணீர் இருப்பதற்கான தடயங்களை தேடி பயணத்தை மேற்கொண்டது. இவ்விரு ரோவர்களும் நம்பமுடியாத அளவிற்கு வெற்றியடைந்தன.

ஸ்பிரிட் மற்றும் ஆபர்சுனிடி ரோவர்கள்

ஸ்பிரிட் மற்றும் ஆபர்சுனிடி ரோவர்கள்

ஸ்பிரிட் மற்றும் ஆபர்சுனிடி ரோவர்கள், செவ்வாய் கிரகம் ஒப்பீட்டளவில் பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு சூடான மற்றும் ஈரமான கிரகமாக இருந்தன என்பதற்கான ஆதாரங்களை கண்டறிந்தன. இதன் மூலம் கிரகத்தின் பரிணாம வளர்ச்சி மற்றும் உயிர் வாழ்வதற்காக சூழ்நிலை போன்றவற்றை விஞ்ஞானிகளால் புரிந்து கொள்ள முடிந்தது. மற்றும் இந்த இரட்டையர்கள் தொடர்ந்து பயணித்துக்கொண்டே இருந்தன.

ஜூன் 10 ம் தேதி

ஜூன் 10 ம் தேதி

2011 ஆம் ஆண்டு வரை ஸ்பிரிட் ரோவர் செயலிழந்ததை நாசா அறிவிக்கவில்லை, மேலும் கடந்த மே மாத இறுதியில் ஏற்பட்ட செவ்வாய் தூசுப்புயல் வரை ஆபர்சுனிடி ரோவர் வலுவாக இயங்கிக்கொண்டிருந்தது.சூரிய ஒளி ஆபர்சுனிடி ரோவரை அடைவதை தூசு மண்டலம் தடுத்ததால், ஜூன் 10 ம் தேதி அதுவும் செயலிழந்தது.

சமிக்ஞைகள்

சமிக்ஞைகள்

திட்ட உறுப்பினர்கள் ரோவரை செயல்படவைக்க அப்போதிருந்து செயல்பட வைக்க முயற்சி செய்துவரும் நிலையில் , ஆபர்சுனிடியில் இருந்து ஏதேனும் சாத்தியமான சமிக்ஞைகள் வருமா என எதிர்பார்த்துள்ளனர்.

ஆக்டிவ் லிசனிங்

ஆக்டிவ் லிசனிங்

இந்த "ஆக்டிவ் லிசனிங்" மூலம் பல மாதங்களாக ரோவர் செயல்படாமல் இருப்பதற்கு பிறகும் கூட முடிவுகளை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது. ஆபர்சுனிடி ரோவர் உள்ள பகுதியில் 14-மைல் பரந்த (22 கிலோமீட்டர்) நவம்பர் மாதம் வரை புயல் காற்று பருவம் துவங்கவில்லை. ஆனால் ஆபர்சுனிடி ரோவர் மீதுள்ள தூசுக்களை நீக்க பலமான காற்று தேவைப்படும் என திட்ட உறுப்பினர்கள் கண்டறிந்துள்ளனர்.

மைக்கேல் வாட்கின்ஸ்

மைக்கேல் வாட்கின்ஸ்

இன்றைய பத்திரிக்கையாளர் சந்திப்பின் மற்ற பங்கேற்பாளர்கள், நாசாவின் கிரக அறிவியல் விவகாரத்தின் இயக்குனர் லோரி, திட்டம் விஞ்ஞானி மாட் கோலோம்ப், துணை திட்ட விஞ்ஞானி அபிகெயில் ஃப்ரேமன், நாசாவின் ஜெட் ஆய்வக தலைவர் மைக்கேல் வாட்கின்ஸ் மற்றும் நாசாவின் அடுத்த சிவப்பு கிரகம் ரோவர் மிஷன் 'செவ்வாய் 2020'-ன் திட்ட பொறியாளர் ஜெனிபர் ட்ரொஸ்பர்.

Best Mobiles in India

English summary
NASA Has Made Its Last Attempt to Call Opportunity Rover on Mars: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X