ரூ.1.2 கோடி சம்பளம்; நாசாவில் வேலை; என்ன வேலையென்று சொன்னால் நம்புவீர்களா.?

By Muthuraj

  அந்நிய தொற்றுநோயிலிருந்து இந்த கிரகத்தை காப்பாற்றும் அதே சமயம் சற்று கூடுதலான சம்பளத்தையம் பெற நீங்கள் ஆர்வமாக இருந்தால், நாசா உங்களுக்காக அதன் கதவுகளை திறந்துள்ளது. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, ஒரு கிரக பாதுகாப்பு அதிகாரியை (Planetary Protection Officer) பணியமர்த்துவதற்கு முயல்கிறது.

  இந்த பணியில் அமர்பவர்கள் நமது கிரகத்தை மார்ட்டியன்ஸ்களிடமிருந்து பாதுகாக்கும் மறுகையில் மனிதர்கள் விண்வெளியில் ஊடுருவி மற்ற உலகங்களைக் கறைபடாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். சரி என்ன வேலை.? என்னென்ன தகுதிகள் மற்றும் திறன்கள் இருக்க வேண்டும்.?

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  ஆண்டுதோறும் 187,000 அமெரிக்க டாலர்கள்

  இந்த வேலையில் "அடிக்கடி சில பயணங்களை" நிகழ்த்த வேண்டியதாக இருக்கும். ஆனால், ஆண்டுதோறும் 187,000 அமெரிக்க டாலர்கள் சம்பளத்துடன் நாசாவின் இதர நன்மைகளும் கிடைக்கும் என்ற பட்சத்தில் அதெல்லாம் ஒரு விடயமே இல்லை.

  கிரானேட்டரி பாதுகாப்பு கவலை கொண்டுள்ளது

  "மனிதன் மற்றும் ரோபோ சார்ந்த விண்வெளி ஆராய்ச்சியில் கரிம-சமுதாயம் மற்றும் உயிரியல் ரீதியான மாசுபாடுகளை தவிர்ப்பது குறித்து கிரானேட்டரி பாதுகாப்பு கவலை கொண்டுள்ளது" என்று இந்த வேலை விவரம் கூறுகிறது.

  கிரக பாதுகாப்பு கொள்கை

  பூமி மற்றும் அதன் உயிர்க்கோள மாதிரிகளை அறிந்தோ அல்லது அறியாமலோ வேறு கிரகங்களுக்கு அல்லது பிற சூரிய மண்டலங்களுக்கு கொண்டு செல்வதிலும், அங்கிருந்து பூமிக்கு கொண்டு வருவதிலும் நாசா அதன் அனைத்து விண்வெளி விமான பணிகளிலும் பொருந்தும் கிரக பாதுகாப்பு கொள்கைகளை பராமரிக்கிறது.

  எக்ஸ்ட்ராடெர்ரஸ்டிரியல்ஸ்

  1967-ஆம் ஆண்டின் விண்வெளி சட்டத்தின் கீழ் 107 நாடுகளும் எக்ஸ்ட்ராடெர்ரஸ்டிரியல்ஸ் அதாவது வேற்றுகிரக வாசிகளிடமிருந்து நமது கிரகத்தை பாதுகாப்பது சார்ந்த முக்கியத்துவத்தை உணர்ந்துகொண்டது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

  சாத்தியக்கூறு

  ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட வேண்டிய விருப்பத்துடன் மூன்று ஆண்டுகளுக்காக திறந்திருக்கும் இந்த பணியானது, 2020-களில் ஜூப்பிட்டர் நிலவான யூரோபாவிற்கு நிகழும் பயணம் உட்பட நாசாவின் வரவிருக்கும் விண்வெளி சார்ந்த பணிகளிலும் ஈடுபடும் சாத்தியக்கூறு கொண்டுள்ளது.

  தகுதிகள்

  இந்த பணி விண்ணப்பிக்கும் ஆர்வம் இருந்தால், குறைந்தபட்சம் ஓராண்டு அனுபவமுள்ள சிவில் அரசாங்க ஊழியராகவும் மற்றும் உடல் அறிவியல், பொறியியல் அல்லது கணிதத்தில் ஒரு மேம்பட்ட பட்டம் பெற்றவராகவும் நீங்கள் இருக்க வேண்டும்.

  இராஜதந்திர திறன்

  அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா இந்த வேலை பாத்திரத்தில் "மிகக் கடினமான மற்றும் சிக்கலான பலதரப்பட்ட விவாதங்களில், வெற்றிகரமான தீர்வுகளை விளைவிக்கும் இராஜதந்திர திறன்கள தேவை" என்று கூறுயுள்ளது. இந்த பணியில் உங்களை இணைத்துக்கொள்ள நீங்கள் கிரக பாதுகாப்பின் "முன்னேறிய அறிவை" கொண்டிருக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை, வாழ்த்துக்கள்.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  English summary
  NASA has a job opening to protect Earth from aliens - and it comes with a six-figure salary. Read more about this in Tamil GizBot.
  X

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more