விசித்திரமாக உலா வரும் நெப்டியூனின் இரு நிலவுகள்! நாசா கண்டுபிடிப்பு.!

|

வானியற்பியலாளர்களுக்கு வாழ்க்கை எப்போதும் எளிதானது அல்ல. அதிலும் குறிப்பாக நமது சூரிய மண்டலத்தில் பல்வேறு இயக்கங்களின் மற்றொரு அம்சத்தை அவர்கள் கண்டுபிடித்தவுடன், நெப்டியூன் கிரகத்தின் இரண்டு நிலவுகளும் எல்லாவற்றையும் குழப்புகின்ற சூழ்நிலை போல.

 நயாத் மற்றும் தலசா

கேள்விக்குள்ளாகியிருக்கும் நயாத் மற்றும் தலசா என்ற அந்த இரண்டு நிலவுகளும் 100 கிலோமீட்டர் (62 மைல்) அகலமுள்ளவை ஆகும். அவை நாசா ஆராய்ச்சியாளர்கள் "தவிர்க்கும் நடனம்" என்று அழைக்கும் வகையில் அவற்றின் கிரகத்தை சுற்றி வருகின்றன.

தலசாவுடன்

தலசாவுடன் ஒப்பிடும்போது ​​நயாத்தின் சுற்றுப்பாதை சுமார் ஐந்து டிகிரிகள் சாய்ந்துள்ளது. எனவே அது அதன் நேரத்தின் பாதியை தலசாவுக்கு மேலேயும், பாதியை கீழேயும் வேறெந்த பதிவுகளிலும் இல்லாதது போல ஒரு இணைக்கப்பட்ட சுற்றுப்பாதையில் செலவிடுகிறது.

"ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது" - கார்ட்டோசாட்-3 செயற்கைகோள் விண்ணில் பாயும் தேதி அறிவித்த இஸ்ரோ

நாசா ஜெட் ப்ராபல்ஷன்

நாசா ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தைச் சேர்ந்த இயற்பியலாளர் மெரினா ப்ரோசோவிக் கூறுகையில், "இந்த தொடர்ச்சியான முறையை ஒரு அதிர்வு( resonance) என நாங்கள் குறிப்பிடுகிறோம். கிரகங்கள், சந்திரன்கள் மற்றும் சிறுகோள்கள் பின்பற்றக்கூடிய பல்வேறு வகையான நடனங்கள் உள்ளன. ஆனால் இதுபோன்ற ஒன்றை இதற்கு முன்னர் பார்த்ததில்லை." என்கிறார்.

சிறிய நிலவுகளின் சுற்றுப்பாதைகள்

இந்த இரண்டு சிறிய நிலவுகளின் சுற்றுப்பாதைகள் சுமார் 1,850 கிலோமீட்டர் (1,150 மைல்கள்) இடைவெளியில் மட்டுமே உள்ளன. ஆனால் அவை ஒன்றுக்கொன்று தவிர்த்துக்கொள்வதற்கு ஏற்ப சரியான நேரம் மற்றும் சுழற்சியில் பயணிக்கின்றன. நயாத் நெப்டியூன்-ஐ சுற்றி வர ஏழு மணிநேரம் எடுக்கும் நிலையில், தலசா வெளிப்புற பாதையில் ஏழரை நேரம் எடுத்துக்கொள்ளும்.

தலசாவில் இருந்தால்

நீங்கள் தலசாவில் இருந்தால், நயாத் ஒவ்வொரு நான்கு சுழற்சிகளுக்கு ஒருமுறை தன்னைத்தானே திரும்ப திரும்ப மேலேயும் கீழேயும் கடந்து செல்வதை நீங்கள் தொடர்ந்து காண்பீர்கள். ஏனெனில் நயாத் தனது அண்டை கிரகமான இதை மீண்டும் மீண்டும் கடந்துசெல்கிறது. இந்த சூழ்ச்சிகள் தான் சுற்றுப்பாதைகளை சீராக வைத்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

32'இன்ச் ஸ்மார்ட் டிவி வெறும் ரூ.8,999 மட்டுமே! 55'இன்ச் ஸ்மார்ட் டிவி கூட நம்பமுடியாத விலையில்!32'இன்ச் ஸ்மார்ட் டிவி வெறும் ரூ.8,999 மட்டுமே! 55'இன்ச் ஸ்மார்ட் டிவி கூட நம்பமுடியாத விலையில்!

1981 மற்றும் 2016

1981 மற்றும் 2016 க்கு இடைப்பட்ட காலத்தில் பூமியில் உள்ள தொலைநோக்கிகளான வாயகர் 2 மற்றும் ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளை இந்த குழு பயன்படுத்தி, நாயத் மற்றும் தலசா இரண்டு நெப்ட்யூன் எனும் பனி ராட்சதனை சுற்றி வருகின்றன என்பதை தீர்மானிக்க முடிவெடுத்தனர்.

 14 துணைக்கோள்

நெப்டியூனின் உறுதிப்படுத்தப்பட்ட 14 துணைக்கோள்களில் இந்த இரு நிலவுகளும் அடங்கும் மற்றும் உள் சந்திரன்கள் என்று அழைக்கப்படும் ஏழு கோள்களில் இவை இரண்டு. எனவே இவை மிகவும் இறுக்கமாக நிரம்பிய அமைப்புடன் மங்கலான சுற்றுவட்டப்பாதையில் பின்னிப்பிணைந்துள்ளன.

ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, பெரிய நெப்டியூன் சந்திரனான ட்ரைட்டனை ஆராய்வதன் மூலம், நயாத் மற்றும் தலசா எங்கிருந்து தோன்றியது என்பதையும், அவை எப்படி தங்கள் கிரகத்தைச் சுற்றி இவ்வளவு அசாதாரணமான முறையில் சுழன்று வருகின்றன என்பதையும் விளக்கமுடியும்.


உட்புற நிலவுகள் ட்ரைட்டனின் எஞ்சியவையாக இருக்கலாம் என இக்குழு அறிவுறுத்துகிறது. நயாத் இந்த அருகிலுள்ள அண்டை கிரகங்களுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக இறுதியில் அதன் சாய்ந்த சுற்றுப்பாதையில் பயணித்திருக்கலாம்.

பூட்டப்பட்டிருக்கலாம்

நயாத் மற்றும் தலசாவின் சுற்றுப்பாதைகளை கண்டறிவதை தவிர்த்து, இந்த புதிய ஆய்வு நெப்டியூனின் உள் நிலவுகளின் கலவையை தீர்மானிப்பதற்கான முதல் படியையும் எடுக்க முடிந்தது. இதன்மூலம் அவை நீர் பனிக்கு ஒத்த பொருளால் உருவானதாக தெரிகிறது.


"சந்திரன்களுக்கு இடையிலான இந்த இணை சார்புகளைக் கண்டறிவதில் நாங்கள் எப்போதும் மகிழ்ச்சியடைகிறோம். நயாத் மற்றும் தலசா ஆகியவை இந்த கட்டமைப்பில் மிக நீண்ட காலமாக ஒன்றாக பூட்டப்பட்டிருக்கலாம். ஏனெனில் இது அவர்களின் சுற்றுப்பாதைகளை மேலும் நிலையானதாக ஆக்குகிறது. அவை ஒருபோதும் நெருங்காததன் மூலம் அமைதியைப் பேணுகின்றன" என்கிறார் எஸ்ஈடிஐ நிறுவனத்தைச் சேர்ந்த கிரக வானியலாளர் மார்க் ஷோல்டர்.

Best Mobiles in India

English summary
NASA Has Detected Weird Orbital Movement From Two of Neptune's Moons : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X