NASA விண்வெளியில் வளர்த்த முள்ளங்கிகள் அறுவடைக்கு ரெடி.. அடுத்து செவ்வாயில் தான் அறுவடையா?

|

'The Martian' என்ற ஹாலிவுட் திரைப்படத்தில், அப்படத்தின் ரீல்-லைஃப் விண்வெளி வீரர் மார்க் வாட்னி கதாநாயகன் செவ்வாய் கிரகத்தில் உருளைக்கிழங்கை வளர்ப்பதன் மூலம் புதிய வரலாற்றை உருவாக்குவர். இந்த காட்சிக்காகவே இந்த திரைப்படம் வேகு விமர்சையாக பேசப்பட்டது. நிஜ வாழ்க்கையில் நமது நாசா விண்வெளி வீரர்களும் இதைச் சாத்தியமாகியுள்ளார்.

மைக்ரோ கிராவிட்டியில் முள்ளங்கி வளர்ப்பு

மைக்ரோ கிராவிட்டியில் முள்ளங்கி வளர்ப்பு

ஆம், நாசாவின் விண்வெளி வீரர்கள் இப்போது விண்வெளியின் மைக்ரோ கிராவிட்டியில் முள்ளங்கிகளை வளர்த்து சோதனை செய்து, அதை இப்பொழுது அறுவடை செய்யவும் தயாராக்கிவிட்டனர். இப்பொழுது விண்வெளியில் எந்த நாடு முதலில் சந்திரன் அல்லது செவ்வாய் கிரகத்தில் தனது காலனி அமைக்கப் போகிறது என்பதற்கான ஒரு அறிவியல் போர் நடைபெற்று வருகிறது. ஆனால், விண்வெளியில் ஒரு காலனியை அமைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமில்லை.

விண்வெளியில் காலனி அமைக்கும் பணி தீவிரம்

விண்வெளியில் காலனி அமைக்கும் பணி தீவிரம்

விண்வெளியில் ஒரு காலனி அமைக்கும் பொழுது விண்வெளி வீரர்களுக்கு முக்கிய ஊட்டச்சத்துடன் கூடிய கூடுதலான தேவைகளை நாம் வழங்கவேண்டும். இந்த தேவையை ஒவ்வொரு முறையும் பூமியிலிருந்து அனுப்புவது என்பது நிரந்தர தீர்வாக அமையாது. குறிப்பாக முன்மொழியப்பட்ட செவ்வாய் கிரக பணி இரண்டு ஆண்டுகள் நீடிக்கும் என்பதால் பூமியிலிருந்து தேவைகளை அனுப்புவது சரியான தீர்வாகாது.

அடடே வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்-ல் இப்படியொரு வசதி இருக்கா? இது தெரியாம போச்சே.!அடடே வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்-ல் இப்படியொரு வசதி இருக்கா? இது தெரியாம போச்சே.!

விண்வெளியில் வீரர்களே விவசாயம் செய்யவேண்டும்

விண்வெளியில் வீரர்களே விவசாயம் செய்யவேண்டும்

சந்திரன் அல்லது செவ்வாயில் அமைக்கும் காலனியின் முக்கிய உணவு தேவைகளை வீரர்களே விவசாயம் செய்து வளர்ந்து நாகரிகத்தின் சாராம்சத்துடன் வாழ வேண்டும். இது புதிய உணவு, தாதுக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களை வழங்குவதோடு மட்டுமல்லாமல், பூமியின் ஒற்றுமையையும் வேற்றுக்கிரகத்தில் உருவாக்க வேண்டும். இது வீரர்களுக்கு வீடு போன்ற மனநிலையை உருவாக்கி, அவர்களின் மனநிலையை ஆரோக்கியப்படுத்தும்.

புதிய உணவு ஆதாரம் தேவைப்படும்

புதிய உணவு ஆதாரம் தேவைப்படும்

ஐரோப்பாவின் கொலம்பஸ் தொகுதியில் அமைந்துள்ள நாசா சோதனை மையம் மைக்ரோ-கிராவிட்டியில் வளரும் தாவரங்களைப் பற்றிய ஆய்வு செய்து வருகிறது. சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்தைப் பார்வையிடும் திட்டங்களுடன், எதிர்கால விண்வெளி வீரர்களுக்கு வீட்டிலிருந்து வெகு தொலைவில் அமையப்போகும் இந்த பயணங்களை மேற்கொள்ளும்போது ஒரு வழக்கமான, புதிய உணவு ஆதாரம் தேவைப்படும்.

மீண்டும் 2000 ரூபாய் நோட்டுக்கு இப்படியொரு சிக்கலா? இனி ATMல் 2000 ரூபாய் நோட்டு வராதா?மீண்டும் 2000 ரூபாய் நோட்டுக்கு இப்படியொரு சிக்கலா? இனி ATMல் 2000 ரூபாய் நோட்டு வராதா?

மைக்ரோ கிராவிட்டி நிலைதாவரங்கள்

மைக்ரோ கிராவிட்டி நிலைதாவரங்கள்

மிகவும் தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை வழங்குவதோடு மட்டுமல்லாமல், விண்வெளியில் வளரும் தாவரங்கள் நிலைத்தன்மைக்கும் பங்களிக்கின்றது. சர்வதேச விண்வெளி நிலையத்தின் மைக்ரோ கிராவிட்டி நிலைமைகளில் வளரும் தாவரங்கள் ஆராய்ச்சியாளர்களை அணுகுமுறையை நன்றாக மாற்றியமைக்க அனுமதித்துள்ளது என்று நாசா தெரிவித்துள்ளது.

சிவப்பு மற்றும் நீல ஒளியில் தாவரம் வளர்ப்பு

சிவப்பு மற்றும் நீல ஒளியில் தாவரம் வளர்ப்பு

ஐரோப்பிய ஆராய்ச்சி மையங்களில் வளர்க்கப்படும் மைக்ரோ கிராவிட்டி தாவரங்கள், சிவப்பு மற்றும் நீல ஒளிக்கு சிறந்த முறையில் பதிலளிப்பதைக் காட்டியுள்ளது. விண்வெளியில் தாவரங்களுக்கு மண்ணில் வேர்விடும் ஈர்ப்பு இல்லை என்பதால், விதைகள் "தலையணைகளில்" வளர்க்கப்படுகின்றன, அவை உரங்களையும் நீரையும் வேர்களுக்குச் சமமாக விநியோகிக்க உதவுகின்றது என்று நாசா தெரிவித்துள்ளது.

LPG சிலிண்டருக்கான மானியம் எவ்வளவு வருகிறது என்று தெரியவில்லையா? அப்போ இதை செய்யுங்கள்..LPG சிலிண்டருக்கான மானியம் எவ்வளவு வருகிறது என்று தெரியவில்லையா? அப்போ இதை செய்யுங்கள்..

ஏன் முள்ளங்கிகள் தேர்ந்தெடுக்கப்பட்டது?

ஏன் முள்ளங்கிகள் தேர்ந்தெடுக்கப்பட்டது?

விண்வெளியில் தாவரங்கள் வளர்ப்பதற்கு முடிவு செய்தபோது ஏன் முள்ளங்கிகள் தேர்ந்தெடுக்கப்பட்டது என்ற காரணத்தையும் நாசா விளக்கியுள்ளது. முள்ளங்கிகள் குறுகிய சாகுபடி காலத்தைக் கொண்டிருக்கின்றன மற்றும் மரபணு ரீதியாக விண்வெளியில் அடிக்கடி ஆய்வு செய்யப்படும் தாவரமான அரபிடோப்சிஸுடன் (Arabidopsis) இவை ஒத்தவை. முள்ளங்கிகளும் உண்ணக்கூடியவை மற்றும் பல ஊட்டச்சத்துக்களைக் கொண்ட சத்தான உணவாகும்.

அறுவடைக்குத் தயார்

அறுவடைக்குத் தயார்

விண்வெளியில் பயிரிடப்பட்ட இந்த தொகுதி முள்ளங்கிகள் இப்போது அறுவடைக்குத் தயாராக உள்ளது என்றும், அறுவடை செய்யப்படும் முள்ளங்கி மாதிரிகள் ஆய்வுக்காகப் பூமிக்குத் திருப்பி அனுப்பப்படும் என்று நாசா தெரிவித்துள்ளது.

தீவிரமான கண்காணிப்பில் இப்படி தான் வளர்க்கப்பட்டதாம்

தீவிரமான கண்காணிப்பில் இப்படி தான் வளர்க்கப்பட்டதாம்

தாவரங்கள் எல்ஈடி விளக்குகள், நுண்ணிய களிமண், 180 க்கும் மேற்பட்ட சென்சார்கள் மற்றும் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு, நீர் மற்றும் உரங்களைச் சிறப்பாக விநியோகிக்கப்பட்டு, ஈரப்பதம் மற்றும் வெப்பநிலை அளவைக் கட்டுப்படுத்தி வளர்க்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
NASA Grows Radishes In Space Under Microgravity Is Now Ready For Harvest : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X