ஜூனோ-வின் ஜூபிட்டர் திட்டத்தை ஜூலை 2021 வரை நீட்டித்த நாசா.!

இந்த விண்கலத்தின் செயல்பாட்டை நீட்டிப்பு செய்ததால், இத்திட்டத்தின் முதன்மை அறிவியல் நோக்கத்தை அடைய முடியும் என அறிவியலாளர்கள் நம்புகின்றனர்.

|

நாசாவின் ஜூனோ விண்கலம் அதன் திட்டத்திற்கு தேவையான தரவுகளை திரட்ட அதிக நேரம் தேவைப்படுவதால், விண்கலத்தின் அறிவியல் செயல்பாடுகளை ஜூலை 2021 வரை நீட்டிப்பு செய்ய முடிவுசெய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வியாழனின் சுற்றுவட்டப்பாதையில் மேலும் மூன்று ஆண்டு பணியாற்றவுள்ளது ஜூனோ.

ஜூனோ-வின் ஜூபிட்டர் திட்டத்தை ஜூலை 2021 வரை நீட்டித்த நாசா.!

விண்கலத்தின் எரிபொருள் அமைப்பில் உள்ள வால்வில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, முதலில் திட்டமிடப்பட்ட 14நாள் சுற்றுவட்டப் பாதைக்கு பதிலாக, 53நாள் சுற்றுவட்டப்பாதையில் உள்ளது ஜூனோ. இது மிகவும் நீண்ட சுற்றுவட்டப்பாதை என்பதால், அறிவியல் தரவுகளை சேகரிக்க அதிக நேரம் எடுத்துக்கொள்ளும்.

அறிவியல்

அறிவியல்

இந்த விண்கலத்தின் செயல்பாட்டை நீட்டிப்பு செய்ததால், இத்திட்டத்தின் முதன்மை அறிவியல் நோக்கத்தை அடைய முடியும் என அறிவியலாளர்கள் நம்புகின்றனர். முதன்மை செயல்பாடுகள் ஜூலை 2021ல் முடியும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தரவுகளை ஆராய்தல் மற்றும் திட்டத்தை முடிக்கும் செயல்பாடுகள் 2022லும் தொடரும் என நாசா தெரிவித்துள்ளது.

ஜூனோ

ஜூனோ

இந்த திட்டத்தை நீட்டிப்பதற்கான ஒப்புதல் ஏற்கனவே எதிர்பார்த்த ஒன்று தான். ஏனெனில் வல்லுநர்களை கொண்ட சுதந்திரமான அமைப்பு, ஜூனோ தனது அறிவியல் செயல்பாடுகளை திறம்பட செய்துவருவதாகவும், ஏற்கனவே அபரிமிதமான முடிவுகளை தருவதாகவும் ஏப்ரல் மாதமே உறுதிபடுத்தியது குறிப்பிடத்தக்கது.

 நாசா

நாசா

ஜூனோ விண்கலத்தின் அனைத்து பாகங்களும் ஆரோக்கியமாக இருப்பதாகவும், நன்கு செயல்படுவதாகவும் கூறியுள்ள நாசா, இதற்கான நிதியுதவியை 2022நிதியாண்டு வரை தொடரவுள்ளதாகவும் முடிவு செய்துள்ளது. "இந்த நிதியின் மூலம், இந்த திட்டத்திற்கு தூண்டுகோலாக இருந்த வியாழனைப் பற்றிய விடைதெரியா பல கேள்விகளுக்கு ஜூனோ குழு பதிலளிப்பது மட்டுமில்லாமல், அவர்களின் இந்த கண்டுபிடிப்புகளின் மூலம் புதிய அறிவியல் புதிர்களை ஆராயமுடியும் என கூறுகிறார் வாஷிங்க்டன் டிசி-ன் நாசா அறிவியல் திட்ட இயக்ககத்தின் இணை நிர்வாகி தாமஸ்.

அறிவியலாளர்கள்

அறிவியலாளர்கள்

ஒவ்வொரு கூடுதலான சுற்றுவட்டப்பாதைக்கும் அறிவியலாளர்கள் மற்றும் சாதாரண அறிவியலாளர்கள் இணைந்து, இந்த புதிய உலகின் ஆச்சர்யங்களை வெளிக்கொணர உதவுவார்கள் என மேலும் கூறுகிறார். வியாழனின் துவக்கம் மற்றும் வளர்ச்சியை கண்டறிவதன் மூலம், சூர்யகுடும்பத்தைப் பற்றிய நமது புரிதலை மேம்படுத்திக்கொள்ளும் நோக்கத்துடன் ஆகஸ்ட்2011ல் செலுத்தப்பட்ட இந்த ஜூனோ விண்கலம், ஜூலை 2016ல் சூர்ய குடும்பத்தின் மிகப்பெரிய கோளான வியாழனை சென்றடைந்தது.

பிப்ரவரி

பிப்ரவரி

பிப்ரவரி மாதத்துடன் 32வது 14நாள் சுற்றுவட்டப்பாதையை முடிக்க திட்டமிட்டுள்ள அறிவியலாளர்கள், அத்துடன் திட்டமிட்டபடி ஜூனோவின் முதன்மை நோக்கத்தை முடிக்கவுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

Best Mobiles in India

English summary
NASA Extends Juno's Jupiter Mission Until July 2021 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X