விண்வெளியிலிருந்து ரேடியோ சிக்னல்கள்: பில்லியன் மைல்கள் தொலைவில் உள்ள சிக்னல் எப்படி பூமியில் கேட்கிறது?

|

விண்வெளி ஆய்வு என்பது மிகவும் சிக்கலான மற்றும் சவாலான முயற்சிகளில் ஒன்றாகும். நாம் அனுப்பிய செயற்கைகோள் பல மில்லியன் கணக்கான தூரம் சென்று அங்கிருந்து அனுப்பும் அனைத்து தகவல்களையும் நாம் பூமியில் உட்கார்ந்து கொண்டு எவ்வாறு அதைச் சேகரித்துப் புரிந்துகொள்கிறோம் என்று எப்போதாவது நீங்கள் யோசித்ததுண்டா? நம் ஸ்மார்ட்போனில் சரியாக நெட்வொர்க் எடுக்காத இந்த பூமியில் இது எப்படிச் சாத்தியமானது தெரியுமா?

பூமியை அடிப்படையாகக் கொண்ட தகவல் தொடர்பு நிலையம்

பூமியை அடிப்படையாகக் கொண்ட தகவல் தொடர்பு நிலையம்

விண்வெளியின் வெற்றிடத்தில், வயர்கள், நிலையான தகவல்தொடர்பு முனைகள் என்று எந்த வசதிகளும் இல்லை, இவை விண்வெளியின் ஒரு கட்டத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு (பூமி) தகவல்களை அனுப்ப வயர்லெஸ் நெட்வொர்க் தகவல்தொடர்புகளுக்கான பொதுவான நடைமுறையை மட்டுமே பின்பற்றுகின்றன. ஆழமான விண்வெளி ஆய்வுகளுடனான தகவல்தொடர்புகளைப் பராமரிப்பதற்கான திறவுகோல் பூமியை அடிப்படையாகக் கொண்ட தகவல் தொடர்பு நிலையங்களின் மூலம் சாத்தியமாகியுள்ளது.

நாசாவின் ஆழமான விண்வெளி வலையமைப்பு

நாசாவின் ஆழமான விண்வெளி வலையமைப்பு

இந்த தகவல்தொடர்பு அம்சத்தை நாசா ஆழமான விண்வெளி வலையமைப்பு என்று அழைக்கிறது. டி.எஸ்.என் (DSN - Deep Space Network) பூமியில் மூன்று தகவல்தொடர்பு தரை நிலையங்களைக் கொண்டுள்ளது, இது பூமியின் லாங்கிட்டியூட் என்று அழைக்கப்படும் தீர்க்கரேகையில் சரியாக 120 டிகிரி பரவியுள்ளது. இந்த நெட்வொர்க்கிற்கு செர்ரி தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று இடங்கள் கலிபோர்னியாவின் ஃபோர்ட் இர்வின் இராணுவத் தளம், ஸ்பெயினில் ரோப்லெடோ டி சாவேலா மற்றும் ஆஸ்திரேலியாவில் கான்பெர்ரா ஆகியவையாகும்.

ஏலியன்ஸ் பூமிக்கு வந்து ரொம்ப நாளாச்சு: இந்த பொருள்தான் அதுக்கு ஆதாரம்- வானியலாளரின் அதிர்ச்சி தகவல்!ஏலியன்ஸ் பூமிக்கு வந்து ரொம்ப நாளாச்சு: இந்த பொருள்தான் அதுக்கு ஆதாரம்- வானியலாளரின் அதிர்ச்சி தகவல்!

மாமத் அளவிலான ஆண்டெனா

மாமத் அளவிலான ஆண்டெனா

ஒவ்வொரு நிலையத்திலும் ஒரு மாமத் அளவிலான 70 மீட்டர் ஆண்டெனா உள்ளது, இது விண்வெளியில் தோன்றும் சிக்னல்களை வேட்டையாடுவதற்காக மூன்று ஆண்டெனாக்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு, முழு கிரகத்தின் முழுப்பகுதியையும் உள்ளடக்கியதாக இருப்பதை உறுதிசெய்து ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. ஒதுக்கப்பட்ட டி.எஸ்.எஸ் தொடர்ச்சியான சிறிய ஆண்டெனா வரிசைகளையும் உள்ளடக்கியுள்ளது. இவை அனைத்தும் ஒன்றிணைந்து விண்வெளியிலிருந்து அனுப்பப்படும் சிக்னல்களை 'கேட்க' உதவுகின்றன.

1950-களில் அறிமுகம் செய்யப்பட்ட DSN அமைப்பு

1950-களில் அறிமுகம் செய்யப்பட்ட DSN அமைப்பு

இந்த DSN அமைப்பு 1950-களின் பிற்பகுதியில், முதல் விண்வெளி பயணத்திற்கு மனிதக்குலம் தயாராகிய நேரத்தில் நிறுவப்பட்டது. கோல்ட்ஸ்டோன், கலிபோர்னியா முதன்முதலில் அமைக்கப்பட்ட நிலையில், ஸ்பெயின் மற்றும் ஆஸ்திரேலியாவில் டி.எஸ்.எஸ் வளாகங்கள் 1960-களில் விரைந்து நிறுவப்பட்டது. 1960 முதல் இன்று வரை ஓய்வின்றி தொடர்ச்சியாகச் செயல்பட்டு வருகிறது. இதன் ஆன்டெனாக்கள் 99% துல்லியமாக விண்வெளியிலிருந்து அனுப்பப்படும் சிக்னலை கண்டறிந்து சேகரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விண்வெளியில் 16 நாட்களுக்கு ஒரு முறை தோன்றும் விசித்திரமான சிக்னல்! தொடரும் சர்ச்சை!விண்வெளியில் 16 நாட்களுக்கு ஒரு முறை தோன்றும் விசித்திரமான சிக்னல்! தொடரும் சர்ச்சை!

இதை பற்றி விளக்குவதற்கான சிறந்த வழி இதுதான்

இதை பற்றி விளக்குவதற்கான சிறந்த வழி இதுதான்

டி.எஸ்.எஸ்ஸின் முக்கியத்துவத்தை விளக்குவதற்கான சிறந்த வழி இதுதான் - இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஆஸ்திரேலியாவின் கான்பெர்ராவை தளமாகக் கொண்ட டி.எஸ்.எஸ்-43, புகழ்பெற்ற வோயேஜர் II விண்வெளி ஆய்வுக்குக் கட்டளைகளை அனுப்பத் திட்டமிடப்பட்டிருந்தது. 50 ஆண்டுக்கால தொடர்ச்சியான சேவைக்குப் பின்னர், அதன் நிலையத்திலிருந்து சில முக்கியமான மேம்பாடுகள் மற்றும் சேவைகள் வோயேஜர் II-வுக்கு தேவைப்பட்டது.

தனியாகப் பறக்கத் துவங்கிய வோயேஜர் II

தனியாகப் பறக்கத் துவங்கிய வோயேஜர் II

ஆனால், அதன் நிலையத்திலிருந்து வோயேஜர் II செயற்கைக்கோளைத் தொடர்புகொள்வதற்கான திறனை நிலையம் இழந்தது. வோயேஜர் II பெயரிடப்படாத ஆழமான விண்வெளிப் பகுதிகளுக்குள் தனியாகப் பறக்கத் துவங்கியது. இருப்பினும், டி.எஸ்.என் ஆண்டெனாக்கள் இன்னும் வோயேஜர் II ஆய்வில் இருந்து சிக்னல்களைப் பெற்று வருகிறது. ஆனால், பூமியில் இருந்து நம்மால் அதற்கு எதுவும் அனுப்ப முடியாது. இந்த முக்கியமான நோக்கம் நாசாவின் ஒவ்வொரு நிலையங்களாலும் வழங்கப்படுகிறது.

ஆன்லைனில் உணவு ஆர்டர் பண்ண இளம்பெண்: மொபைலுக்கு வந்த ஒரே மெசேஜ்- ஒரு நிமிடம் ஆடிப்போயிட்டாங்க!ஆன்லைனில் உணவு ஆர்டர் பண்ண இளம்பெண்: மொபைலுக்கு வந்த ஒரே மெசேஜ்- ஒரு நிமிடம் ஆடிப்போயிட்டாங்க!

சூரிய புயல்கள் பற்றிய முக்கியமான தகவல்

சூரிய புயல்கள் பற்றிய முக்கியமான தகவல்

DSN உதவியுடன் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை அளக்கும் கியூரியாசிட்டி ரோவரில் இருந்து பிரம்மாண்டமான பனோரமாக்களைப் பெற உதவுகிறது, பூமியின் விண்வெளி தொலைநோக்கிகள் அனுப்பிய நம்பமுடியாத விண்வெளி புகைப்படங்களை நாம் காணச் சாத்தியமாகியது. எதிர்காலத்தில், சூரிய புயல்கள் பற்றிய முக்கியமான தகவல்களை நாம் அறிய இந்த DSN சிஸ்டம் பெரிதும் உதவும் என்று கூறப்படுகிறது.

பூமி உங்களின் தகவல்களைக் கேட்கும்

பூமி உங்களின் தகவல்களைக் கேட்கும்

இறுதியில், டி.எஸ்.என் என்பது தொடர்புகளைப் பராமரிப்பதிலும், முக்கியமான விஞ்ஞான தரவுகளைச் சந்திரனுக்கும் செவ்வாய் கிரகத்திற்கும் அனுப்புவதிலும், மனிதர்களுடன் தொடர்பில் இருக்கும் முக்கியமான தகவல்தொடர்பு பணியைக் கச்சிதமாகச் செய்து முடிக்க இந்த DSN அமைப்பு முற்றிலும் முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆன்டெனாக்கள் இருக்கும் வரை விண்வெளியில் யாரும் தொலைந்துவிட முடியாது. விண்வெளியில் எங்கிருந்து நீங்கள் தொடர்பு கொண்டாலும் பூமி உங்களின் தகவல்களைக் கேட்கும்.

Best Mobiles in India

English summary
NASA Deep Space Network has the tricky job of deciphering faint radio signals from space : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X