வரலாற்று நிகழ்வு.. பூமியை காக்கும் "டார்ட்", விண்கல்லை மோதி தெறிக்கவிட்ட NASA

|

நாசா தனது 344 மில்லியன் டாலர் மதிப்புள்ள விண்கலத்தை திட்டமிட்டு சிறுகோள் மீது மோதியது. எதிர்காலத்தில் பூமியை காப்பதற்கான நாசாவின் இந்த மிஷினின் ஆரம்பக்கட்டம் வெற்றி அடைந்தது.

எதில் இருந்து பூமியை காப்பதற்கு இந்த மிஷின், விணகலத்தை வேண்டும் என்றே சிறுகோள் மீது மோத காரணம் என்ன என்று பார்க்கலாம்.

விண்கல் பூமி மீது மோதினால்..

விண்கல் பூமி மீது மோதினால்..

டைனோசர் என்ற உயிரினம் விண்கல் விழுந்து அளிந்தது எனவும் அந்த விண்கல் விழுந்த போது ஏற்பட்ட பாதிப்புகள் மதிப்பிட முடியாதது எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

மீண்டும் அதுபோன்ற ஒரு விண்கல் பூமி மீது மோதினால் என்ன நடக்கும் என்று எப்போதாவது சிந்தித்தது உண்டா?. இதை யோசித்த நாசா இதற்கான தீர்வை கொண்டு வர வேண்டும் என்றே தான் இந்த டார்ட் மிஷினைத் தொடங்கி இருக்கிறது என்று கூறலாம்.

பூமியை காக்க டார்ட் மிஷின்..

பூமியை காக்க டார்ட் மிஷின்..

விண்கல் விழந்து டைனோசர் என்ற ஒரு உயிரினமே அழிந்ததே, அதேபோல் விண்கல் விழுந்து மனிதர்கள் என்ற உயிரினமே அழிந்தது என்று எதிர்காலம் இருந்துவிடக் கூடாது என்று நாசா டார்ட் மிஷனைத் தொடங்கி சோதித்திருக்கிறது.

அது என்ன டார்ட் மிஷன் என்று கேள்வி வருகிறதா? தமிழில் ஜெயம் ரவி நடித்து வெளியான டிக்டிக்டிக் படம் பார்த்திருந்தால் இதற்கான விடை தெரிந்திருக்கும்.

திரைப்படத்தில் காட்டப்படும் நிகழ்வு..

திரைப்படத்தில் காட்டப்படும் நிகழ்வு..

டிக்டிக்டிக் படத்தில் விண்கல் ஒன்று பூமியை நோக்கி வேகமாக பயணித்து வரும். இதை கண்டறியும் குழு ஒரு ராக்கெட்டை விண்கல்லுக்குள் செலுத்தி அதை வெடிக்க வைத்து பூமியின் சுற்றுவட்டப் பாதையில் இருந்து திசை திரும்ப வைக்கும். இதன் மூலம் பூமி பாதுகாக்கப்படும். இதுதான் படத்தின் கதை.

நாசாவின் டார்ட் மிஷினும் ஏறத்தாழ இதுதான்.

டார்ட் மிஷின் சோதனை..

டார்ட் மிஷின் சோதனை..

பூமியின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழையும் ஆபத்தான விண்கல், சிறுகோளை கண்டறிந்து அதை தகர்த்து பூமியை பாதுகாப்பதே டார்ட் நோக்கமாகும். இந்த மிஷினை நாசா தொடங்கி வெற்றி அடைந்துவிட்டது என்றே கூறலாம்.

இதை எப்படி சோதனை செய்வது, விண்கல் எப்போது பூமியை நோக்கி வரும், பூமிக்கு எப்போது ஆபத்து வரும் என்று காத்திருக்க முடியாது. எனவே ஒரு சிறிய விண்கல் மீது சோதிக்க வேண்டும் அல்லவா. அதை தான் தற்போது டார்ட் மிஷின் செய்திருக்கிறது.

பூமிக்கு அருகே உள்ள சிறுகோள்கள்

பூமிக்கு அருகே உள்ள சிறுகோள்கள்

விண்வெளியில் Dimorphos மற்றும் Didymos என்ற இரண்டு விண்கல்கள் அருகருகே இருக்கிறது.

இதில் டிடிமோஸ் நிலவு போல் டீமோர்போஸ் சுற்று வருகிறது. இந்த இரண்டும் பூமிக்கு ஆபத்து என்று கூறிவிட முடியாது. ஆனால் பூமிக்க அருகே இருப்பது இந்த இரண்டும் தான்.

இந்த விண்கற்கள் பூமியில் இருந்து 9.6 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. இதில் டீமோர்போஸை தான் நாசாவின் டார்ட் மிஷின் தாக்கி இருக்கிறது.

விண்கல்லை மோதிய ஸ்பேஸ் கிராஃப்ட்

விண்கல்லை மோதிய ஸ்பேஸ் கிராஃப்ட்

Double Asteroid Redirection Test (Dart) மிஷின் ஆனது பூமியை நோக்கி வரும் விண்கல்லை ஸ்பேஸ் கிராப்ட் மூலம் தாக்கி அதை தகர்த்துவது அல்லது அதன் பாதையை மாற்றுவது தான் நோக்கம்.

அதன்படி கடந்த வருடம் ஸ்பேஸ் கிராஃப்ட் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் இன் பால்கான் 9 ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. இந்த ஸ்பேஸ் கிராஃப்ட் தான் விண்கல்லில் வெற்றிகரமாக மோதியது.

சரியாக மையத்தில் மோதிய ஸ்பேஸ் கிராஃப்ட்..

சரியாக மையத்தில் மோதிய ஸ்பேஸ் கிராஃப்ட்..

முன்னதாக குறிப்பிட்டது போல் பூமியில் இருந்து 9.6 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் டீமோர்போஸ் விண்கல்லை நோக்கி ஸ்பேஸ் கிராஃப்ட் அனுப்பப்பட்டது.

இந்த ஸ்பேஸ் கிராஃப்ட் சரியாக விண்கல்லின் மையப் பகுதியில் இன்று காலை தாக்கியது. இந்த மிஷினின் முயற்சி வெற்றிகரமாக நிறைவடைந்தாலும் விண்கல்லின் பாதை மாறுகிறதா என்பது அறிந்த பிறகே இந்த மிஷின் முழு வெற்றி குறித்து தெரிவிக்கப்படும்.

இருப்பினும் ஸ்பேஸ் கிராஃப்ட் சரியாக விண்கல்லின் மையப் பகுதியில் 24,000 கிலோமீட்டர் வேகத்தில் தாக்கியது.

வீடியோ வெளியிட்ட நாசா..

இந்த நிகழ்வுகள் நாசா வீடியோவாக வெளியிட்டுள்ளது. இதில் டார்ஸ் ஸ்பேஸ் கிராஃப்ட் சரியாக விண்கல்லின் மையத்தில் துல்லியமாக தாக்கியது தெரிகிறது.

இதன்மூலம் விண்கல் பாதை திசை மாறும் பட்சத்தில் இந்த மிஷின் முழு வெற்றி அடையும், ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் மற்றும் ஹப்பிள் டெலஸ்கோப் உள்ளிட்ட கேமராக்கள் விண்கல்லின் பாதையை கண்காணிக்கும் என கூறப்படுகிறது.

விண்கல்லின் பாதை திசை மாறும்பட்சத்தில் இந்த டார்ட் மிஷின் மிகவும் பயனுள்ள திட்டமாக இருக்கும்.

Best Mobiles in India

English summary
NASA DART Spacecraft Crash Successful into Asteroid: What Next?

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X