ஆஹா ஆஹா! ஒளி வந்துவிட்டது, வழி வந்துவிட்டது.. "குஷியின் உச்சத்தில் NASA"

|

சூரிய குடும்பத்தில் இடம்பெற்ற ஒரு முக்கிய பொருளின் இயக்கத்தை மாற்றுவதில் NASA வெற்றி அடைந்திருக்கிறது. நாம் இப்போது பேசுவது நாசாவின் டார்ட் மிஷின் குறித்து தான். நாசா இலக்கு வைத்து தாக்கிய டிடிமோஸ் என்ற சிறுகோள் அதன் சுற்றுவட்ட பாதையில் இருந்து திசை மாறி சென்றிருக்கிறது.

திசை மாறிய சிறுகோள்

திசை மாறிய சிறுகோள்

டிமோர்போஸ் என்ற பெரிய சிறுகோளை டிடிமோஸ் என்ற சிறுகோள் நிலவு போல் சுற்றி வந்தது. நாசா இதில் உள்ள டிடிமோஸ் என்ற சிறுகோளை தான் தாக்கியது.

இந்த தாக்கத்திற்கு முன்னதாக டிடிமோஸ் சிறுகோள் ஆனது டிமோர்போஸ் சிறுகோளை சுற்றி வர சுமார் 11 மணிநேரம் 55 நிமிடங்கள் எடுத்தது.

நாசா டிடிமோஸ் சிறுகோளை தாக்கிய பிறகு இது டிமோர்போஸ் சிறுகோளை சுற்றி வர 11 மணிநேரம் 23 நிமிடங்கள் எடுக்கிறது.

மனித குலத்தின் முதல் முயற்சி..

மனித குலத்தின் முதல் முயற்சி..

டிடிமோஸ் சிறுகோளின் சுற்றுப்பாதை அளவிடுவதன் முதல் படியே இது. ஆனால் இந்த படியிலேயே நாசா எதிர்பார்த்ததைவிட பல மடங்கு அதிக வெற்றியை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.

மனிதகுலம் ஒரு வானப் பொருளின் இயக்கத்தை திசை மாற்றுவது என்பது இதுவே முதன்முறை ஆகும்.

முற்றிலும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்

முற்றிலும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்

இந்த சோதனை முடிவு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருப்பதாக வடக்கு அரிசோனா பல்கலைக்கழகத்தின் கிரக விஞ்ஞானி கிறிஸ்டினா தாமஸ் தெரிவித்துள்ளார். இவர் DART பணிக்கான கண்காணிப்பு குழுவை வழிநடத்தியவர் ஆவார்.

மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில், "நாங்கள் முற்றிலும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். கிரக பாதுகாப்புக்கு இந்த சோதனை ஆனது ஒரு சாத்தியமான வழியை காண்பித்து இருக்கிறது" என குறிப்பிட்டார்.

தயாராக இருக்கும் நாசா

தயாராக இருக்கும் நாசா

நாசா நிர்வாகி பில் நெல்சனை மேற்கோள் காட்டி science.org வெளியிட்ட அறிக்கையில், "நமது சொந்த கிரகத்தை பாதுகாக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கிறது. பிரபஞ்சத்தில் இருந்து நம்மை நோக்கி ஒரு பொருள் வந்தாலும் அதற்கு நாசா தயாராக இருக்கிறது என்பதை இந்த பணி காட்டுகிறது" என பில் குறிப்பிட்டுள்ளார்.

விண்கல்லில் இருந்து பூமியை பாதுகாக்கும் டார்ட் மிஷின்

விண்கல்லில் இருந்து பூமியை பாதுகாக்கும் டார்ட் மிஷின்

டார்ட் ஸ்பேஸ் கிராஃப்ட் மோதியதில் Dimorphos விண்கல்லில் எவ்வளவு தாக்கம் ஏற்பட்டது என்பதை வெப் மற்றும் ஹப்பிள் தொலைநோக்கி கண்காணித்து வருவதாக கூறப்படுகிறது.

விண்கல்லில் இருந்து பூமியை பாதுகாக்கும் முயற்சி தான் நாசாவின் டார்ட் மிஷன் ஆகும். இது மிகவும் பயனுள்ள திட்டம் ஆகும். டைனோசர் என்ற உயிரினம் விண்கல் விழுந்து அளிந்தது எனவும் அந்த விண்கல் விழுந்த போது ஏற்பட்ட பாதிப்புகள் மதிப்பிட முடியாதது எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

மீண்டும் அதுபோன்ற ஒரு விண்கல் பூமி மீது மோதினால் என்ன நடக்கும் என்று எப்போதாவது சிந்தித்தது உண்டா?. இதை யோசித்த நாசா இதற்கான தீர்வாக தான் இந்த டார்ட் மிஷினைத் தொடங்கியது.

டார்ட் மிஷின் சோதனை வெற்றி

டார்ட் மிஷின் சோதனை வெற்றி

பூமியின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழையும் ஆபத்தான விண்கல்லை கண்டறிந்து அதை தகர்த்து பூமியை பாதுகாப்பதே டார்ட் மிஷினின் நோக்கமாகும்.

மிஷினை வெற்றிகரமாக தொடங்கி முடித்த நாசா, அதை சோதனை செய்ய திட்டமிட்டது. இதற்காக எப்போது விண்கல் பூமியை நோக்கி வரும் என்று காத்திருக்க முடியாது. அந்த நேரத்தில் சோதனை முயற்சி எதுவும் இல்லாமல் நேரடியாக செயல்படுத்தவும் முடியாது.

இதையடுத்து நாசா பூமிக்கு அருகில் உள்ள விண்கல்லில் டார்ட் மிஷின் சோதனை செய்யப்பட்டது.

பூமிக்கு அருகில் இருக்கும் இரண்டு சிறுகோள்கள்

பூமிக்கு அருகில் இருக்கும் இரண்டு சிறுகோள்கள்

விண்வெளியில் Dimorphos மற்றும் Didymos என்ற இரண்டு விண்கல்கள் அருகருகே இருக்கிறது. இதில் டிடிமோஸ் சிறுகோளின் நிலவு போல் டீமோர்போஸ் இருக்கிறது. இந்த இரண்டு கோள்களாலும் பூமிக்கு ஆபத்து என்று கூறிவிட முடியாது.

ஆனால் பூமிக்கு அருகில் இருக்கும் இரண்டு சிறுகோள்கள் இது. இந்த சிறுகோள்கள் பூமியில் இருந்து 6.3 மில்லியன் மைல் தொலைவில் இருக்கிறது. இதில் டீமோர்போஸ் சிறுகோளை தான் நாசாவின் டார்ட் மிஷின் தாக்கியது.

வெற்றியை கொண்டாடும் நாசா

வெற்றியை கொண்டாடும் நாசா

Double Asteroid Redirection Test (Dart) மிஷின் ஆனது பூமியை நோக்கி வரும் விண்கல்லை ஸ்பேஸ் கிராப்ட் மூலம் தாக்கி அதை தகர்த்துவது அல்லது அதன் பாதையை மாற்றுவது தான் நோக்கம்.

திட்டமிட்டபடி ஸ்பேஸ் கிராஃப்ட் சரியாக 24,000 கிலோமீட்டர் வேகத்தில் டீமோர்போஸ் விண்கல்லின் மையப்பகுதியில் தாக்கியது. மையத்தில் தாக்கியது வெற்றியாக கருதப்பட்டாலும் அதன் பாதை மாறுமா என நாசா கண்காணித்து வந்தது.

அதன்படி தற்போது இதன் திசை மாறி இருக்கிறது. நாசா இந்த வெற்றியை கோலாகலமாகக் கொண்டாடி வருகிறது.

Best Mobiles in India

English summary
NASA DART Mission Success: Dimorphos Asteroid Changed the Motion From its Orbit

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X