மீண்டும் 'கவர்-அப்' சர்ச்சையில் சிக்கிய நாசா, எதை மறைக்கிறது.?!
நம்மிடம் ஆயிரக்கணக்கான எஸ்ட்ரா-டெர்ரஸ்ட்ரியல் சதியாலோசனை கோட்டபாடுகள் உள்ளது, ஆனால் அவைகளெல்லாம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின்பு நீடிக்காது. ஆனால், எப்போதுமே எந்தவொரு பொழுதிலுமே எஸ்ட்ரா-டெர்ரஸ்ட்ரியல் சதியாலோசனை கோட்பாடுகளுக்கும் சிக்கும் ஒரு நிறுவனம் தான் - நாசா..!
மிகவும் ஆழமான விண்வெளி ஆராய்ச்சிகளில் ஈடுபடும் நாசா தான் கண்டறிந்த சில குறிப்பிட்ட சர்ச்சைக்குரிய விடயங்களை பொது பார்வையில் இருந்து எப்போதுமே மறைத்து வைக்கும் பழக்கம் கொண்டது என்று எப்போதுமே குற்றம் சாட்டப்படுகிறது, அப்படியாக, சமீபத்தில் நாசா மீது மேலுமொரு 'கவர்-அப்' குற்றச்சாட்டு சுமற்றப்பட்டுள்ளது..!

#1
சமீபத்திய அறிக்கை ஒன்றிலிருந்து நாசா செவ்வாய் கிரகத்தில் காணப்பட ஒரு அன்னிய நகரத்தை மூடிமறைப்பதாக ஆதாரப்பூர்வமான சர்ச்சை கிளம்பியுள்ளது.

#2
மார்ஸ் ரோவரின் புகைப்படங்களோடு, இந்த குற்றச்சாட்டை யுஎஃப்ஒ ஹன்டர் மற்றும் பிளாக்கர் ஆன ஸ்காட் வார்னிங் என்பது குறிப்பிடத்தக்கது.

#3
பொதுமக்கள் பார்வையில் இருந்து மறைக்கப்படும் இந்த புகைப்படத்தில் ஒரு வெளிப்படையான அடுக்குமாடி கட்டிடங்கள் தெரிவதால் நிச்சயமாக இதுவொரு செவ்வாய் நகரம் என்கிறார் ஸ்காட் வார்னிங்.

#4
சர்ச்சைக்குரிய இந்த புகைப்படத்தை நாசாவின் ஜெட் ப்ரபல்ஷன் ஆய்வகம் (JPL) மூலம், தம்ப்நெயில் (Thumbnail) எனப்படும் மிக குறைத்த அளவிலான பிக்சலில் (Pixels) வெளியிடப்பட்டது.

#5
ஏலியன் தேடலாலர்களுக்கு இதுவொரு வரலாற்றுத் திருப்புமுனையான விடயம் என்றும், செவ்வாய் கிரகத்தில் அன்னிய வாழ்க்கை மற்றும் நாகரீகத்தின் சமீபத்திய 'கண்டுபிடிப்பு என்றும் ஸ்காட் வார்னிங் கூறியுள்ளார்.

#6
செவ்வாய் கிரக மலைப்பகுதிகளால் தாங்கப்படும் அந்த கட்டிடத்தில் ஜன்னல்கள், கதவுகள் காணப்படுகிறது என்றும், ஒரு பெரிய அன்னிய நகரமாக அல்லது தொழில்துறை கட்டிடங்களாக, தொழிற்சாலைகளாக அல்லது கிடங்குகளாக இருக்க முடியும் என்றும் ஸ்காட் வார்னிங் கூறுகிறார்.

#7
இந்த புகைப்படத்தை ஹை-ரெஸல்யூஷனில் வெளியிடாமல் மிககுறைந்த தரத்தில் 'தம்ப்நெயில்' ஆக நாசா வெளியிட்டுருப்பதின் மூலம் எதையோ மறைக்கிறது என்ற சந்தேகம் மேலன்மேலும் கிளம்புகிறது.

#8
வேற்றுகிரக நம்பிக்கையாளர்களையும் தேடலாளர்களையும் பொறுத்தவரை பல ஆண்டு காலமாக ஏலியன்கள் பற்றி மறைக்கும் நாசாவின் செயல்பாடுகளில் இதுவும் ஒன்று..!

#9
மறுபக்கம் அவைகள் கட்டிடங்கள் அல்ல வெறும் பாறைகள் தான் என்ற எதிர்வாதமும் கிளம்பியுள்ளது, அதை நிரூபிக்க நாசா அந்த குறிப்பிட்ட இடத்தின் உயர்தரமான புகைப்படத்தை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையும் கிளம்பியுள்ளது.

#10
அப்படியாக நாசா குறிப்பிட்ட இடங்களின் உயர்தரமான புகைப்படங்களை வெளியிட வேண்டுமென்றால் நூற்றுக்கணக்கான புகைப்படங்களை வெளியிட நேரிடும் என்பது தான் நிதர்சனம்.

#11
இதேபோன்று கடந்த 2015-ஆம் ஆண்டு செவ்வாய் கிரகத்தில் உள்ள ஏலியன் நிலத்தடி தளங்கள் மறைக்கப் படுகிறது என்ற குற்றசாட்டு கிளம்பியது.

#12
மறுபக்கம் தனக்கு எதிராக கிளம்பும் அன்னிய கோட்பாடுகளை மிகவும் கவனமாக நாசா கையாளும் அனுபவம் கொண்டது, உண்மைகள் மற்றும் தரவுகள் பற்றி நாசா எப்போதுமே வாய் திறந்தது கிடையாது.

#13
கரீபியன் கடலில் இருந்து வெளிப்பட்ட 'விசித்திரமான' ஒலி..! என்ன அது ?
சர்ச்சை : கிஸா பிரமிட் சரியாக கட்டப்படவில்லை..!?

#14
மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!


Click it and Unblock the Notifications