இந்த ஆகஸ்ட் மாதம் உலகம் அழியுமென்பதை ஒரு முட்டாள் கூட நம்ப மாட்டான், ஏன்.?

By Muthuraj

  உலகம் அழியுமென்ற பல நூறு கதைகளை கேட்ட நமக்கு இது சலிப்பையும், சிரிப்பையும் ஒருசேர ஏற்படுத்துகிறது.

  'பிளானட் எக்ஸ் - தி 2017 அரைவல்' ஆசிரியரான டேவிட் மெடே, 2017 செப்டம்பர் 23 அன்று பிளான்ட் நிப்ரூ என்று (பிளானட் எக்ஸ் என்றும்) அழைக்கப்படும் கோள் ஆனது நமது பூமி கிரகத்தோடு மோதுவதின் விளைவாக பூமியின் அழிவு நிகழுமென்று வலியுறுத்த்தியுள்ளார்.

  இந்த மாதம் உலகம் அழியுமென்பதை ஒரு முட்டாள் கூட நம்ப மாட்டான், ஏன்.?

  ஒருபக்கம் சூரிய மண்டலத்தின் ஆழமான விண்வெளியில் பிளானட் எக்ஸ் இருப்பதை நாசா உறுதிப்படுத்துகிறது. நெப்டியூன் அளவிலான அந்த மர்ம கிரகமானது சூரியனை மிகுந்த நீளமான சுற்றுப்பாதையில் பிளூட்டோவுக்கு அப்பாற்பட்ட தூரத்தில் உள்ளதென்று நம்பப்படுகிறது. மறுபக்கம் நிப்ரூ என்ற கிரகத்தின் இருப்பை விஞ்ஞானிகள் மறுக்கிறார்கள். அதனால் தான் அதற்கு பிளான்ட் எக்ஸ் என்றவொரு பெயரும் உண்டு. என்றாலும் கூட டேவிட் மேடே தன்னுடைய கூற்றுக்களை ஆதரிக்கும் பைபிள் வசனங்களை சுட்டிக்காட்டியுள்ளதால் உலகம் அழியுமென்ற பீதி பெருமளவில் கிளம்பியுள்ளது.

  இந்த மாதம் உலகம் அழியுமென்பதை ஒரு முட்டாள் கூட நம்ப மாட்டான், ஏன்.?

  உண்மையில் இது சாத்தியமா.? உலகம் அழியும் என்பது நடக்க கூடிய சம்பவமா.? அப்படியானால் நாம் வாழும் இந்த பூமி கிரகத்தின் நிஜமான கடைசி நாட்கள் ? .நமது முடிவு எதனால் சாத்தியமாகும்.?

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  பொழுதுபோகாதவன் கிளப்பிவிட்ட புரளிகள்

  'எர்த் எண்ட் பிலிவர்ஸ்' என்ற ஒரு கூட்டமே இருக்கிறது, அதாவது உலகம் மற்றும் அதன் உயிர் இனங்கள் எல்லாம் ஒட்டுமொத்தமாக அல்லது முழுமையாக அழியும் என்று நம்புபவர்கள். இதெல்லாம் சயின்ஸ் ஃபிக்ஷன் (அறிவியல் புனைகதை) திரைப்படத்தில் தான் நடக்கும் என்றும், உலகம் அழியும் கதைகள் எல்லாம் பொழுதுபோகாதவன் கிளப்பிவிட்ட புரளிகள் என்றும் நம்பப்படும் அதே வேளையில், உலகத்தையும் அதன் உயிரினங்களையும் அழிக்க வல்லமை பெற்ற சில 'உண்மையான' சக்திகள் அறிவியல் கோட்பாடுகளின் கீழ் இருக்கின்றன என்பதும் நிதர்சனமே.

  மாபெரும் 7 அச்சுறுத்தல்கள்

  அக்கோட்பாடுகள் எல்லாம் வெறும் பைபிள் வசனங்களில் இருந்தோ அல்லது எண் கணிதங்களில் இருந்தோ உருவான கணிப்புகள் அல்ல, ஒருவகையான எச்சரிக்கைகளாகும். அப்படியாக, உலகின் இறுதிநாட்களை நிர்ணயிக்கும் நிஜமான மற்றும் மாபெரும் 7 அச்சுறுத்தல்கள் உள்ளன.

  07. க்ளோபல் பேன்டிமிக்

  பேன்டிமிக் (pandemic) எனப்படுவது கிட்டத்தட்ட பூமி கிரகம் முழுக்க தொற்றி பரவக்கூடிய கொள்ளை நோயாகும். முக்கியமாக, தான் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருக்கிறோம் என்பதைக்கூட அறியாத வண்ணம் தாக்கி கொல்லும் தொற்று நோய்கள் தான் மனித இனத்தை அழிக்கும் வல்லமை பெற்றவைகள் என்று நம்பப்படுகின்றது.

  06. காமா கதிர் வெடிப்பு

  காமா கதிர் வெடிப்புகள்தான் அண்டத்தில் நடக்கும் பிரகாசமான விண்வெளி நிகழ்வாகும். மாபெரும் நட்சத்திர வெடிப்புகளால் நிகழும் இந்த காமா கதிர் வெடிப்புகள் ஆனது பூமியம் ஓசோன் படலத்தை அழிக்கும் சக்தி கொண்டவைகள் ஆகும். அப்படியாக, பலமான காமா கதிர் வெடிப்பு ஓசோன் படலத்தை இல்லாமல் ஆக்கி விட்டால் கொடிய புற ஊதா கதிர்வீச்சு ஆனது பூமியை மெல்ல மெல்ல கொல்லும்.

  05. சூரிய மரணம்

  கிட்டத்தட்ட அனைத்து வகையான உயிர்களுக்கும் தேவையான ஆற்றலை வழங்கி கொண்டிருப்பது சூரியன் தான் என்பது எந்த அளவிற்கு உண்மையோ அந்த அளவிற்கு சூரியன் ஒரு நட்சத்திரம் என்பதும் உண்மையே.

  சூரிய பலன்களுக்கு ஒரு முடிவு காலம்

  அதாவது விண்வெளியில் உள்ள இதர நட்சத்திரங்களுக்கு மரணம் என்பது எப்படி சாத்தியமோ, அதேபோல சூரியனுக்கும் ஒரு மரணம் உண்டு, அன்று சூரிய பலன்களுக்கு ஒரு முடிவு காலம் வரும் என்பது தான் நிதர்சனம். இன்று தொடங்கி இன்னும் 5 பில்லியன் ஆண்டுகளில் சூரிய மரணம் நிகழும் என்கின்றனர் வல்லுநர்கள்.

  04. பைங்குடில் விளைவு நிகழாமை

  பைங்குடில் விளைவு (Green house Effect) அல்லது பசுமை இல்ல விளைவு எனப்படும் இயற்கை விளைவுதான் உயிர்களின் ஆதாரம் ஆகும். பைங்குடில் விளைவு குறைபாடானாது, பூமியை சுற்றி ஒரு தடித்த போர்வையை உருவாக்கும் அதிகப்படியான வெப்பத்தையும், உலக வெப்பநிலையையும் கவலைக்கிடமான விகிதத்தில் உயர்த்தும்.

  03. சிறுகோள் தாக்குதல்கள்

  இதர விண்வெளி பொருட்கள் பூமியை தாக்க வாய்ப்புகள் உள்ளது என்பதும், அப்படியாக பூமியை நெருங்கும் விண்வெளி பொருட்கள் மீது விண்வெளி ஆய்வாளர்கள் அனுதினமும் கண்காணிப்பில் உள்ளனர் என்பதும உண்மைதான்.

  300 கிலோ மீட்டர் சுற்றளவில் பாதிப்பு

  ஆனால், இருக்கிறதா இல்லையா என்ற தெளிவே இல்லாத ஒரு கிரகம் பூமி மீது திடீரென்று மோதும் என்பது உண்மையாகும் வாய்ப்பு மிக மிக குறைவே. 10 ஹிரோஷிமா அணுகுண்டுகள் சக்திக்கு இணையான குறுங்கோள் மோதல் பூமி கிரகத்தோடு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. அப்படியானதொரு மோதல் நிகழ்ந்தால் சுமார் 300 கிலோ மீட்டர் சுற்றளவில் பாதிப்புகள் நிகழும்.

  02. நுக்லியர் வெடிகுண்டுகள்

  உலகின் மாபெரும் விபரீதமான ஆயுதங்களில் முதல் இடத்தில் இருப்பது அணு ஆயுதங்கள் தான், நொடியில் பல நகரங்களை அழிக்க கூடிய சக்தி கொண்டவைகள். வெடிப்பு சேதம், அணு தாக்கம், நீண்ட கால கதிர்வீச்சு விளைவு, தாவர மரணம், கருப்பு மழை, சாம்பல் மூட்டம், ஓசோன் படலம் குறைவு என பெரும் பாதிப்புகளை அணுகுண்டுகள் ஏற்படுத்தும்

  01. சூப்பர் வல்கனோ வெடிப்புகள்

  ஒரு சூப்பர் எரிமலை (Super valcano) வெடிப்பானது தட்பவெப்ப நிலையில் தீவிர உறுதியற்ற நிலையை உருவாக்க வல்லது. அதாவது சாம்பல் மூட்டம், அதிகப் படியான மேகம் உருவாகுதால், அமில மழைப்பொழிவு, ஓசோன் படலம் குறைவு, தாவர அழிவு, கடல் சார்ந்த சுற்றோட்ட குழப்பம், கடல்வாழ் உயிரின அழிவு போன்றவைகளை சூப்பர் வல்கனோ வெடிப்புகள் ஏற்படுத்தும்.

  27 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு

  முன்பு, சுமார் 27 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நியூசிலாந்தில் சூப்பர் வல்கனோ வெடிப்பு ஏற்பட்டது என்பதும், அடுத்து எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  English summary
  NASA confirms Planet X EXISTS but could mythical Nibiru really DESTROY earth next month? Read more about this in Tamil GizBot.
  X

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more