பூமியை நெருங்கும் நிபிரூ! மனித குலத்திற்கு அழிவா?
முடிவில் இந்த ஆற்றல் அலைகள் பூமியை இயக்கத்தை பாதித்து, பூமியின் சுற்றுசூழலில் பேரழிவிற்கான மாற்றங்களை ஏற்படுத்தும்.
ப்ளேனெட் எக்ஸ் அல்லது ப்ளேனெட் 7எக்ஸ் என அழைக்கப்படும் நிபிரூ கிரகம் என்ன? இந்த கிரகத்தால் பூமிக்கு என்ன? இதற்கும் பைபிள்க்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா? பூமியின் அழிவில் இந்த கிரகத்திற்கு பங்கு உள்ளதா என பல கேள்விகள் தற்போது எழுகின்றன.

பூமியை நெருங்கிவரும் இந்த முரட்டு கிரகத்தை பற்றி நாசா, பென்டகன் மற்றும் சிஐஏ அமைப்புகள் நன்கு அறிந்து வைத்துள்ளன.

புளூட்டோ
புளூட்டோவிற்கு அப்பால் மறைந்திருக்கும் ஒரு மர்மமான பெயரிடப்படாத கிரகங்கள் தொடர்பாக ஆதாரங்களை 2014ஆம் ஆண்டு புதிய அறிவியல் ஆய்வுகட்டுரைகள் வெளியான பின்னர், பிளேனெட் எக்ஸ் அல்லது நிபிரூ கிரகம் தொடர்பான பிரளய சதிகோட்பாடுகள் எழுச்சி பெற்றுள்ளன.

யூடியூப் வீடியோ
1000 ஆண்டுகளுக்கும் மேலாக சுற்றுவட்டப்பாதை காலத்தை கொண்டுள்ள மர்ம கிரகமான பிளேனெட் எக்ஸ்/ நிபிரூ பற்றிய தகவல்கள் தொடர்பாக 1988ஆம் ஆண்டு வெளியான நாசா ஆய்வு முடிவுகள் தற்போது யூடியூப் வீடியோக்கள் மற்றும் குறுஞ்செய்திகள் வாயிலாக சதிகோட்பாடுகளாக வைரலாக பரவி வருகின்றன.
சதிகோட்பாட்டாளர்களின் கூற்றுபடி, மனித குலத்திற்கு பேரழிவை விளைவிக்கக்கூடிய நிபிரூ கிரகம் பூமியை நோக்கி வருவதை இந்த ஆய்வுக்கு பின்னர் பல தசாப்தங்களாக அமெரிக்காவும் நாசாவும் அறிந்து வைத்திருந்தன என்கின்றனர்.

இரகசிய கோப்புகள்
மேலும் அவர்கள் கூறுகையில், சமீபத்தில் நிபிரூ கிரகம் தொடர்பான இரகசிய கோப்புகள் வெளியானதன் மூலம், நிபிரூவின் ஈர்ப்புவிசை காரணமாக நூறு ஆண்டுகளுக்கு முன்பாக சூரிய குடும்பத்தில் நுழைந்து மற்ற கிரகங்களின் சுற்றுவட்டப்பாதையை பாதித்ததையும், அது உடனடியாக மீண்டும் சூரியகுடும்பத்தில் நுழைய உள்ளதையும் நாசா அறிந்து வைத்துள்ளது என கூறுகின்றனர்.

நிபிரூ
இந்த மர்ம கிரகமான நிபிரூ தற்போது பிளாஸ்மாடிக் ஆற்றல் துகள்களால் ஆன அலைகளை சூரிய குடும்பம் வாயிலாக அனுப்பி வருகிறது. முடிவில் இந்த ஆற்றல் அலைகள் பூமியை இயக்கத்தை பாதித்து, பூமியின் சுற்றுசூழலில் பேரழிவிற்கான மாற்றங்களை ஏற்படுத்தும்.
4 முக்கிய பைபிள் தீர்க்கதரிசிகளின் கூற்றுபடி, பூமியை நோக்கி உண்மையில் பயங்கரமான ஒன்று வந்து கொண்டுள்ளது. அது 1 ஜனவரி 2017க்கு முன்னதாக பூமியை தாக்கும்.

நாசா
1996லிருந்து நிபிரூ கோளின் காரணமாக, நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு, மாறுபட்ட காலநிலை மாற்றம், இயற்கை பேரழிவுகள் என நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.
நாசா, பென்டகன், சிஐஏ போன்றவை இந்த நிபிரூ கிரகம் பூமியை நெருங்வதை அறிந்து வைத்துள்ளன. வாடிகனும் இது தொடர்பாக விவரித்துள்ளது. ஆனால் பொதுமக்களிடம் இது தொடர்பாக எதுவும் தெரிவிக்கப்படாமல் மறைத்து வைக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications