நாசா, சீனா ஐக்கிய அரபு எமிரேட்ஸின் செயற்கைகோள்கள் சத்தமில்லாமல் செவ்வாயை அடைகிறது: என்னென்ன தகவல் கிடைக்கும்?

|

மனிதன் இனம் சந்திரனில் காலடி வைத்ததிலிருந்து, அடுத்த பெரிய விண்வெளி எல்லையைத் தேடி ஆராய்ச்சி செய்து வருகிறது. விண்வெளி ஆராய்ச்சியில் பல புதிய சாதனைகள் மற்றும் கண்டுபிடிப்புகளை ஒவ்வொரு நாடும் போட்டிப் போட்டுச் செய்து வருகிறது. அப்படி, அனைத்து நாடுகளின் கவனம் சில ஆண்டுகளுக்கு முன்னர் நமக்கு மிக நெருக்கமான செவ்வாய் கிரகத்தின் மேல் விழுந்தது.

இந்த பிப்ரவரி செவ்வாய் கிரகத்திற்கு ஒரு விசேஷமான மாதம்

இந்த பிப்ரவரி செவ்வாய் கிரகத்திற்கு ஒரு விசேஷமான மாதம்

சில ஆண்டுகளாகவே, உலகெங்கிலும் உள்ள விண்வெளி ஏஜென்சிகள் சிவப்பு கிரகமான செவ்வாய்க் கிரகத்தைச் சிறப்பாக ஆய்வு செய்ய அதன் சுற்றுப்பாதையில் சில செயற்கைக்கோள்களைச் விண்ணில் செலுத்தியது. இன்னும் சில நாடுகள் ஒரு படி மேல சென்று செவ்வாய் கிரகத்திற்கு ரோவர்களையும் அனுப்பியுள்ளது. இது வரை எப்படியோ, ஆனால் இந்த ஆண்டின் பிப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்திற்கு ஒரு விசேஷமான மாதமாக அமைந்துள்ளது.

காரணம் இது தான்..

காரணம் இது தான்..

காரணம், அதன் சுற்றுப்பாதையில் முதல் முறையாக ஒரே மாதத்தில் மூன்று பார்வையாளர்கள் உள்நுழையப்போகிறார்கள். கடந்த ஆண்டு மூன்று விண்வெளி ஏஜென்சிகள் தங்களது மூன்று வெவ்வேறு விண்கலங்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பும் பணியை துவங்கி, அந்த செயற்கைகோள்களை விண்ணில் ஏவியது. இந்த மூன்று செயற்கைகோள்களை இந்த மாதத்தில் ஒன்றின் பின் ஒன்றாகக் கிரகத்தை அணுகுகிறது.

ஏலியன்ஸ் பூமிக்கு வந்து ரொம்ப நாளாச்சு: இந்த பொருள்தான் அதுக்கு ஆதாரம்- வானியலாளரின் அதிர்ச்சி தகவல்!ஏலியன்ஸ் பூமிக்கு வந்து ரொம்ப நாளாச்சு: இந்த பொருள்தான் அதுக்கு ஆதாரம்- வானியலாளரின் அதிர்ச்சி தகவல்!

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஹோப் ஆர்பிட்டர்

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஹோப் ஆர்பிட்டர்

இந்த மராத்தானில் முதலில் செவ்வாயை அடையும் செயற்கைக்கோளாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஹோப் ஆர்பிட்டர் இருக்கிறது. இந்த செயற்கைகோள் செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையில் பிப்ரவரி 9 ஆம் தேதி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செயற்கைகோள் ஜப்பானிய H-IIA ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செயற்கைகோள் செவ்வாயில் என்ன செய்யும்?

இந்த செயற்கைகோள் செவ்வாயில் என்ன செய்யும்?

இந்த செயற்கைகோள் செவ்வாய் கிரக வானிலை பற்றி நன்கு புரிந்துகொள்ள அனைத்து வகையான வளிமண்டல தரவுகளையும் சேகரிக்கும். இந்த செயற்கைகோள் செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையை சுமார் இரண்டு ஆண்டுகள் சுற்றி வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முகமது பின் ரஷீத் விண்வெளி மையத்திலிருந்து 200 மில்லியன் டாலர் பட்ஜெட்டுடன் இந்த வளர்ச்சி சுமார் ஆறு ஆண்டு காலமாக உருவாக்கப்பட்டது.

கூகிள் போட்டோஸ் இல் வெளியான புதிய சேவை.. இனி வீடியோவை கூட ஜூம் செய்யலாம்..கூகிள் போட்டோஸ் இல் வெளியான புதிய சேவை.. இனி வீடியோவை கூட ஜூம் செய்யலாம்..

சீனாவின் தியான்வென் -1

சீனாவின் தியான்வென் -1

சீனாவின் தியான்வென் -1 விண்கலம் பிப்ரவரி 10 ஆம் தேதி செவ்வாய் கிரகத்தை அடைகிறது. தியான்வென் என்பது 'சொர்க்கத்திற்கான கேள்விகள்' என்பதைக் குறிக்கிறது. மேலும், இது செவ்வாய் கிரகத்தின் உட்டோபியா மற்றும் பிளானிட்டியா பகுதியை ஆய்வு செய்யும் எனவும், இத்துடன் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்புக்கு அடியில் இருக்கும் பனியின் பெரிய படிவுகளை நன்கு ஆய்வு செய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாயில் ரோவர் தரையிறக்கும் சீனா

செவ்வாயில் ரோவர் தரையிறக்கும் சீனா

இதுமட்டுமில்லை, இந்த செயற்கைகோள் அதன் சுற்றுப்பாதையில் மூன்று மாதங்கள் சுற்றிய பிறகு, இது செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் ஒரு ரோவரை நிலைநிறுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வெற்றிகரமாகத் தரையிறக்கப்பட்டால், அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக செவ்வாய் கிரகத்தில் ரோவரை வெற்றிகரமாகத் தரையிறக்கிய இரண்டாவது நாடாகச் சீனா மாறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெபிட் கார்டு பயனர்களே உஷார்.. நடைமுறையில் உள்ள 'இந்த' புதிய விதி பற்றி உங்களுக்கு தெரியுமா?டெபிட் கார்டு பயனர்களே உஷார்.. நடைமுறையில் உள்ள 'இந்த' புதிய விதி பற்றி உங்களுக்கு தெரியுமா?

கிரகத்தின் நுண்ணுயிர் வாழ்க்கை குறித்து ஆய்வு

கிரகத்தின் நுண்ணுயிர் வாழ்க்கை குறித்து ஆய்வு

இந்த ரோவர் சாதனம் சில முக்கிய கருவிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக ஒரு சாதனத்துடன் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இதில் உள்ள முக்கிய சாதனம் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பு நீர் பனியின் வைப்புகளைக் கண்டறிய உதவும், இது விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, கிரகத்தின் நுண்ணுயிர் வாழ்க்கை குறித்து நமக்கு சில யோசனைகளைத் தரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாசாவின் பெர்சவேரன்ஸ் ரோவர்

நாசாவின் பெர்சவேரன்ஸ் ரோவர்

சீனாவின் தியான்வென் -1 செயற்கைக்கோளுக்குப் பிறகு, நாசாவின் பெர்சவேரன்ஸ் ரோவர் பிப்ரவரி 18 ஆம் தேதி செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை அடைகிறது. நாசா ரோவர் ஜெசரோ பள்ளத்தில் டச் டவுன் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது செவ்வாயின் பண்டைய நதி டெல்டாவின் தளம் என்று நம்பப்படுகிறது. இங்குக் கடந்தகால உயிரினங்களின் தடயங்களைக் கொண்டிருக்கக்கூடும் என்பதனால் நாசா இங்கே தரையிறக்கத் திட்டமிட்டுள்ளது.

'ஏழு நிமிட டெரர்' லேண்டிங்

'ஏழு நிமிட டெரர்' லேண்டிங்

குறிப்பாகச் சொல்லப்போனால், இது செவ்வாய் கிரகத்திற்கான நாசாவின் ஒன்பதாவது பணியாகும். இது முந்தைய ரோவர் போலவே 'ஏழு நிமிட டெரர்' லேண்டிங் நிமிடங்களை அனுபவிக்கும். இது நான்கு உந்துசக்தி என்ஜின்களுடன் பாராசூட்டுகளை கொண்டுள்ளது. நாசாவின் கணிப்புப்படி இந்த ரோவர் ஒரு மணி நேரத்திற்கு 12,100 மைல் வேகத்தில் தரையிறங்கும் ரோவரை இந்த என்ஜின்களும் பாராசூட்களும் மெதுவாக்குகிறது.

ஜியோவை ஓரங்கட்டிய ஏர்டெல்: ஏர்டெல் பயனர்களை அசைக்கமுடியாமல் திணறும் ஜியோ!ஜியோவை ஓரங்கட்டிய ஏர்டெல்: ஏர்டெல் பயனர்களை அசைக்கமுடியாமல் திணறும் ஜியோ!

செவ்வாயில் ஹெலிகாப்டருடன் பேலோட்

செவ்வாயில் ஹெலிகாப்டருடன் பேலோட்

இதில் கற்பனை செய்துபார்க்க முடியாத பயங்கரமான விஷயம் என்னவென்றால், ஜெசெரோ பள்ளம் என்பது பாறைகள், மணல் திட்டுகள் மற்றும் பெரிய பாறைகளைக் கொண்ட செவ்வாயின் ஒரு கணிக்க முடியாத பகுதியாகும். இந்த கடினமான இடத்தில் நாசா தனது ரோவரை தரையிறக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த பேலோடில் செவ்வாய் முழுவதும் பறப்பதற்கான புத்திக் கூர்மை கொண்ட ஹெலிகாப்டரும் இதில் பொருத்தப்பட்டுள்ளது என்பது கூடுதல் சிறப்பு.

Best Mobiles in India

English summary
NASA, China And UAE Space Agencies Three Different Spacecrafts Are Reaching Mars In February : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X