வேற லெவல் பிளான் உடன் மீண்டும் நிலவிற்கு செல்லும் நாசா; பின்னணி என்ன?

இங்கு "மீண்டும்" என்கிற வார்த்தையை கேட்டதுமே, முதன் முறை நடந்த நாசாவின் மூன் லேன்டிங் உண்மை தானா? எனும் கேள்வி எழுகிறது.

|

அமெரிக்காவின் தேசிய ஏரோனாட்டிக்ஸ் மற்றும் ஸ்பேஸ் நிர்வாகத்தின் நிர்வாகி ஆன ஜிம் பிரிட்ஜென்ஸ்டெயின், கடந்த வாரம் ஓஸி வலைத்தளத்தில் ஒரு கட்டுரையை வெளியிட்டார். அதில் அவர் ஒரு துணிச்சலான அறிக்கையை சமர்ப்பித்து இருந்தார். அந்த அறிக்கையின் படி, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா மீண்டும் சந்திரனுக்கு செல்ல உள்ளது, மற்றும் ​​மேலும் அங்கு செல்பவர்கள் நீண்ட நாட்கள் தங்க உள்ளனர்.

வேற லெவல் பிளான் உடன் மீண்டும் நிலவிற்கு செல்லும் நாசா; பின்னணி என்ன?

இந்த இடத்தில இரண்டு கேள்விகள் எழுகின்றன. முதல் கேள்வி - "நிலவிற்கு மீண்டும் செல்ல உள்ளனர்" எனும் வாசகத்தில் உள்ள "மீண்டும்" என்கிற வார்த்தை. இரண்டாவது கேள்வி - இப்பொது ஏன்? இந்த இரண்டு கேள்விகளுக்கான விடைகளையும், விளக்கங்களையும் ஆராய்வோம் வாருங்கள்!

"மீண்டும்" என்பதில் உள்ள சிக்கல்?

இங்கு "மீண்டும்" என்கிற வார்த்தையை கேட்டதுமே, முதன் முறை நடந்த நாசாவின் மூன் லேன்டிங் உண்மை தானா? எனும் கேள்வி எழுகிறது. ஆம், நாசாவின் மூன்லேண்டிங்கை பாதிக்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் கூட நம்பவில்லை என்கிறது ஒரு ஆய்வு. அமெரிக்கர்கள் மட்டுமில்லை, ஸ்பேஸ் ரேஸில் நாசாவுடன் கடுமையாக மோதிய ரஷ்யா, பின் சீனா போன்ற நாடுகளும் கூட அதை நம்புவதாக இல்லை.

ஏன் நம்பவில்லை?

ஏன் நம்பவில்லை?

ஏன் நம்பவில்லை என்றால், நாசா நம்பும்படியான எந்த ஆதாரத்தையும் கொடுக்கவில்லை, இது ஏன் இப்படி இருக்கிறது? அது ஏன் அப்படி இல்லை போன்ற சந்தேகங்களை தீர்க்கவும் இல்லை, எல்லாவற்றிற்கும் மேலாக மீண்டும் நிலவிற்கு செல்லும் பேச்சையே எடுக்கவில்லை. அங்கிதான் நாசாவின் போலி மூன் லேண்டிங் மீதான நம்பிக்கை வலுவடைகிறது. அந்த நம்பிக்கையை சமீபத்திய அறிக்கை உடைத்து எரிந்து உள்ளது.

சரி, திடீரென்று ஏன் இப்போது நிலவு பயணம்?

சரி, திடீரென்று ஏன் இப்போது நிலவு பயணம்?

பிரிட்ஜென்ஸ்டெயின் அறிக்கையானது தற்போது ஏன் நிலவிற்கு செல்ல வேண்டும் என்பதற்கான காரணத்தை வெளிப்படையாக பேசுகிறது. அதாவது சந்திரனை சுற்றும் இரண்டாம் நிலை விண்வெளி நிலையம் அமைக்கப்பட உள்ளதாம், அதாவது ஒரு லுனார் கேட்வே உருவாக உள்ளது.

அதென்ன லூனார் கேட்வே?

அதென்ன லூனார் கேட்வே?

சுருக்கமாக கூறினால், விண்வெளியில் உள்ள இதர கிரங்கங்களுக்கு செல்ல உதவும் ஒரு பாலம். விரிவாக கூற வேண்டும் என்றால், நாம் பேசும் இந்த லூனார் கெடவே சாத்தியமாகும் பட்சத்தில், ​அது ஒரு முதல் ரீயூசபிள் லூனார் லேண்டர் சிஸ்டம் ஆக (reusable lunar lander system) அமையும். அந்த வழியாக நாசாவினால் ஒரு அவுட்போஸ்ட்டை (அதாவது ஒரு தொலைதூர பகுதியை) உருவாக்க முடியும், அவ்வண்ணமே சந்திரனின் வளங்களைக் காப்பாற்ற முடியும், மேலும் முக்கியமாக, பூமியில் இருந்து தொலைதூர கிரகங்களுக்கு செல்லும் விண்கலங்கள் ஆனது சந்திரனில் மீண்டும் எரிபொருள்களை நிரப்பி கொண்டு, நமது சூரிய மண்டலத்தில் நீண்ட பயணங்களை தொடங்கும்.

ஒன்பது தனியார் நிறுவனங்களுடன் நாசா கூட்டு!

ஒன்பது தனியார் நிறுவனங்களுடன் நாசா கூட்டு!

இந்த திட்டத்தில் தனியார் விண்வெளி நிறுவனங்களின் பங்குகளும், முயற்சிகளும் மிகவும் வெற்றிகரமாக இருக்கும் என்று பிரிட்ஜென்ஸ்டெயின் உடன் சேர்ந்து நாசாவும் நம்புகிறது. அதனால் தான், நாசா தற்போது ஒன்பது வெவ்வேறு அமெரிக்க விண்வெளி நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்துள்ளது.இந்த தகவலையும் பிரிட்ஜென்ஸ்டெயினே தெரிவித்து உள்ளார். மேற்குறிப்பிட்டுள்ள அந்த ஒன்பது தனியார் நிறுவனங்களும் சர்வதேச விண்வெளி நிலையமான ஐ.எஸ்.எஸ் (இறுதியில் சந்திரனுக்கும்) அல்லது கேட்வே வழியாகவே சரக்குகளை விநியோகிப்பது சார்ந்த வேலைகளில் ஈடுபடுகின்றனவாம்.

வரலாற்று சிறப்பு மிக்க திட்டம்!

வரலாற்று சிறப்பு மிக்க திட்டம்!

"போதுமான திறன்களை கட்டமைப்பதன் வாயிலாக, அடுத்த பத்தாண்டுகளில் நமது விண்வெளி வீரர்களை சந்திரனில் தரை இறக்குவது எங்களது இலக்கு ஆகும்" என்று பிரிட்ஜென்ஸ்டெயின் அவர் அறிக்கையில் எழுதி உள்ளார். மேலும் "உலகெங்கிலும் உள்ள பில்லியன் கணக்கான மக்கள் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வை பார்க்க உள்ளனர். அதாவது முன் எப்போதும் இருந்திராத அளவில், நமது விண்வெளி வீரர்கள் மிக நீண்ட காலம் சந்திர கிரகத்தில் தங்க உள்ளனர். மேலும் செவ்வாய் மற்றும் பிற தொலை தோட இடங்களுக்கான பயணங்களை எளிமையாக்க உள்ளனர்" என்றும் கூறி உள்ளார்.

ஒருவேளை!

ஒருவேளை!

ஒருவேளை இந்த வரலாற்று சிறப்பு மிக்க திட்டமானது நமது தலைமுறையிலேயே கூட நிறைவடையலாம். மேலும் ஒருவேளை, நாம் முதல் முறையாக நமது விண்வெளி வீரர்கள் செவ்வாய் கிரகத்திற்கும் மற்றும் அதற்கு அப்பாலும் தாண்டிய விண்வெளி பயணத்தை மேற்கொள்வதை காணலாம்.

Best Mobiles in India

English summary
NASA Chief We Are Sending Astronauts To Moon AgainAnd This Time They Will Stay Back Longer: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X