இந்தியாவில் பெய்த பருவமழையை வீடியோவாக வெளியிட்ட நாசா.!
இந்த மழை வெள்ளத்தால் வீடுகள், சாலைகள், ரயில் தடங்கள், கேரள மாநிலத்தின் உயிராதாரமான சுற்றுலா கட்டமைப்புகள் ஆகியவை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் பருவமழை மிகவும் அதிகமானதால் பகுதிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளன. கேரள மாநிலத்தின் குறைந்தபட்சம் 350 பேர் இறந்துள்ளனர், மேலும் 800,000 பேர் தீவிர வெள்ளம் மற்றும் சதுப்பு நிலங்களின் விளைவாக இடம்பெயர்ந்துள்ளனர்.
ஆகஸ்ட் 1 முதல் 20 வரை மாநிலம் முழுவதும் பதிவான மழையின் அளவு 771 மிமீ ஆக உள்ளது. கடந்த 87 ஆண்டுகளுக்குப் பிறகு அங்கு இவ்வளவு மழை பொழிவு பதிவாகியுள்ளது. மேலும் நாசா அமைப்பு சார்பில் மழைப்பதிவு வீடியோ ஒன்று வெளியிட்ப்பட்டுள்ளது.

பருவமழை
மொத்த கேரளமும் மீட்புப் பணியில் இணைந்து நிற்கிறது. அதே நேரம், அரசுத் தரப்பு செய்யத் தவறியவையும் இருக்கிறது. பேரழிவை ஏற்படுத்திய வெள்ளத்துக்கு பருவமழை மட்டும் காரணமல்ல. திட்டமிடாமல் அணைகளைத் திறந்ததும் காரணம். தவறான நேரத்தில், முன்னேற்பாடுகள் இல்லாமல் அணைகள் திறக்கப்பட்டன.

மிகப்பெரிய சவால்
இந்த மழை வெள்ளத்தால் வீடுகள், சாலைகள், ரயில் தடங்கள், கேரள மாநிலத்தின் உயிராதாரமான சுற்றுலா கட்டமைப்புகள் ஆகியவை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டைப் போல ஆழ்துளைக் கிணறுகளை அல்லாமல் கேரளம் குடிநீருக்கு பெருமளவில் கிணறுகளை நம்பியிருந்த மாநிலம் என்றும் இந்தக் கிணறுகள் எல்லாம் தற்போது வெள்ளத்தில் மூழ்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த சேதாரங்களை ஈடுகட்டுவதும், மறுகட்டுமானம் செய்வதும் மிகப்பெரிய சவால்.

இடுக்கி
இடுக்கியில் மட்டும் கடந்த இருபது நாட்களில் 1,419மிமீ மழை பதிவாகியுள்ளது. முன்தாக 1907-ம் வருடம் 1,387மிமீ மழை பொழிந்துள்ளது, இதுவே இடுக்கியின் அதிகபட்ச மழைப் பொழிவாக இருக்கிறது.

ரூ.20,000 கோடி
ரூ.20,000 கோடி அளவுக்கு சேதம் நிகழ்ந்திருப்பதாக முதல்வர் பினராயி விஜயன் கூறியிருக்கிறார். மத்திய அரசு ஒதுக்கிய நிதி போதாது என்று எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலாவும் கூறுகிறார். இருந்தபோதிலும் பல்வேறு மக்கள் தொடர்ந்து உதவிகளை செய்த வண்ணம் உள்ளனர்.


Click it and Unblock the Notifications