NASA பதிவு செய்த ஸ்பேஸ் ஸ்டேஷன் லைவ் வீடியோவில் UFO! உண்மையில் இது ஏலியன் விமானமா?

|

விண்வெளி சார்ந்த செய்திகள் மற்றும் விஷயங்களை அறிந்துகொள்வதில் உங்களுக்கு அதிக ஆர்வம் உள்ளதா? அப்படியானால் நாசாவின் இந்த யூடியூப் சேனல் உங்களுக்குத் தேவையான அனைத்து தகவல்களையும் வழங்கும் என்பதில் சந்தேகமில்லை. நாசாவின் இந்த வீடியோ சேனலில் உள்ள ஒரு சமீபத்திய வீடியோவில் அடையாளம் தெரியாத ஒரு மர்ம பொருள் படம்பிடிக்கப்பட்டுள்ளது.

லைவ் வீடியோவில் சிக்கிய மர்ம பொருள்

லைவ் வீடியோவில் சிக்கிய மர்ம பொருள்

சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து எடுக்கப்பட்ட இந்த லைவ் வீடியோவில், ஐ.எஸ்.எஸ்ஸில் உள்ள விண்வெளி வீரர்கள் நிலையத்தின் சில வழக்கமான பராமரிப்புகளை மேற்கொண்டிருந்துள்ளனர். அந்த சமயத்தில் தான், அங்கிருந்த கேமரா வேகமாக நகர்ந்து செல்லும் கோன் வடிவ உலோக பொருளைக் கண்டு ஜூம் செய்துள்ளது. விண்வெளியில் திடீரென்று தோன்றிய இந்த பொருள் எங்கிருந்து வந்தது என்று யாருக்கும் தெரியவில்லை.

அதிநவீன விமானமா?

அதிநவீன விமானமா?

ஆனால், இந்த அடையாளம் தெரியாத வினோத பொருள் வேகமாக விண்வெளி நிலையத்தைக் கடந்து, மேல்நோக்கி பறந்து சென்று விண்வெளிக்குள் மறைந்துவிட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொருள் என்ன என்பது தெளிவாக யாருக்கும் தெரியவில்லை. இருப்பினும் இதன் உருவம் அதிநவீன விமானத்தின் தோற்றத்திலிருந்தது என்று விண்வெளி வீரர்கள் கூறியுள்ளனர்.

விண்வெளியில் யுஎஃப்ஒ பொருள்

விண்வெளியில் யுஎஃப்ஒ பொருள்

நாசாவின் இந்த லைவ் வீடியோவில் அடையாளம் தெரியாத பறக்கும் பொருளை முதன்முதலில் கண்டறிந்தவர் யுஎஃப்ஒ சைட்டிங்ஸ் டெய்லியின் நிறுவனர் ஸ்காட் சி. வேரிங் தான். அவர் தான் இந்த வீடியோவில் உள்ள பறக்கும் பொருளை அடையாளம் கண்டு அது எங்கிருக்கிறது, எப்படி இருக்கிறது என்று சுட்டிக்காட்டும் வீடியோ பதிவைத் தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார்.

நிச்சயம் இது காப்ஸ்யூல் இல்லை

நிச்சயம் இது காப்ஸ்யூல் இல்லை

முதலில் இந்த அடையாளம் தெரியாத பொருளை ஒரு காப்ஸ்யூல் அல்லது செயற்கைக்கோள் என்று நினைத்தேன், ஆனால் அதன் வேகம் அதிகரித்து, சிறிது நேரத்தில் அதிக தூரம் சென்றுவிட்டது. இது ஒரு காப்ஸ்யூல் என்றால் நிச்சயம் இந்த வேகத்தில் செல்வதற்கு வாய்ப்பில்லை என்று எண்ணிக்கொண்டிருக்கும் அடுத்த நொடியில், இந்த மர்மப் பொருள் விண்வெளியில் மேல்நோக்கி பறந்ததும், அது காப்ஸ்யூல் இல்லை என்று உறுதியானது.

உண்மையில் இந்த பொருள் என்னவாக இருக்கக் கூடும்?

உண்மையில் இந்த பொருள் என்னவாக இருக்கக் கூடும்?

ஒருவேளை இது யுஎஸ்ஏஎஃப்(USAF) இன் உயர்-ரகசிய ஏலியன் தொழில்நுட்ப பறக்கும் பொருளாக இருக்கலாம் என்று அவர் சந்தேகிப்பதாகக் கூறியுள்ளார். ஆனால், அதற்கான சாத்தியமும் இல்லை என்றே அவரின் உள்ள மனது செல்கிறதாம். அப்படியானால் உண்மையில் இந்த பொருள் என்னவாக இருக்கக் கூடும்? அதிநவீன ஏலியன் பறக்கும் விமானமாக இருக்கலாம் என்று அவர் கூறியுள்ளார். இதற்கான காரணம் விண்வெளியில் சில நொடிகளில் இந்த பொருள் காணாமல் போய்விட்டது.

கருத்துத் தெரிவிக்காத விண்வெளி வீரர்கள்

கருத்துத் தெரிவிக்காத விண்வெளி வீரர்கள்

ஸ்காட் சுட்டிக்காட்டியபடி, சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து யார் கேமராவைக் கட்டுப்படுத்துகிறார்களோ அவர்கள் அந்தப் பொருளையும் கவனித்து ஜூம் செய்துள்ளார். உண்மையில் இது என்னவாக இருக்கும் என்று விண்வெளி நிறுவனத்தைச் சேர்ந்த எவரும் இதுவரை கருத்துத் தெரிவிக்கவில்லை, ஆனால், இதுபோன்ற நிகழ்வு நடந்தது இது முதல் தடவை அல்ல.

மறைக்கப்பட்ட உண்மை

இதேபோல், 2016 ஆம் ஆண்டில், நாசாவின் நேரடி வீடியோ பதிவில் பூமிக்கு அருகில் ஒரு விசித்திரமான ஒளி காணப்பட்டது. இதை கேமரா லைவ் வீடியோவில் காட்டிய சிறிது நேரத்தில் நேரலை உடனடியாக துண்டிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. நாசா பின்னர் அந்த பொருள் விண்வெளி குப்பை என்றும், பூமியிலிருந்து பிரதிபலிக்கும் வெளிச்சத்தின் ஒளி என்றும் சமாளித்துவிட்டது என்பதை மறக்கவேண்டாம்.

Best Mobiles in India

English summary
NASA Captures Footage Of UFO On Space Station Live Feed Video : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X