Home
Scitech

சந்திராயன்-2க்காக சென்னை போட்டோகிராப்பருக்கு நாசா வழங்கிய விருது.!

இந்நிலையில், சந்தியராயன்-2 விண்வெளியில் ஏவுதும் போது, புகைப்படம் எடுத்துள்ளார். ஆனால் அந்த புகைப்படம் மற்றவர்களை விடவும் விண்ணை கிழித்துக் கொண்டு சென்றுள்ளது. அப்போது, அதைப்படம் எடுத்துள்ளார் சென்னையை

சந்தியராயன்-2 விண்கலன் வெற்றிகரமாக விண்ணுக்கு ஏவப்பட்டது. சந்திராயன்-2 விண்கலன் பல்வேறு தடைகளுக்கு பிறகு வெற்றிரமாக விண்வெளிக்கு அனுப்பட்டது.

சந்திராயன்-2க்காக சென்னை போட்டோகிராப்பருக்கு நாசா வழங்கிய விருது.!

சந்திராயன்-2ஐ பல்வேறு நாடுகளும் நோக்கின. தனது விண்வெளி பயணத்தில் வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கின்றது. சந்திராயன்-2 உலக விஞ்ஞானிகளும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சந்தியராயன்-2 விண்வெளியில் ஏவுதும் போது, புகைப்படம் எடுத்துள்ளார். ஆனால் அந்த புகைப்படம் மற்றவர்களை விடவும் விண்ணை கிழித்துக் கொண்டு சென்றுள்ளது. அப்போது, அதைப்படம் எடுத்துள்ளார் சென்னையை சேர்ந்த புகைப்பட கலைஞர். இதற்கு நாசா விருது வழங்கியுள்ளது.

சந்திராயன்-2 :

சந்திராயன்-2 :

சந்திராயன்-1 விண்கலன் நிலவில் தண்ணீர் இருப்பதை கண்டறிந்து உலகிற்கு முதன் முதலில் கூறியது. இதையடுத்து, சந்திராயன்-1 குறுகிய காலத்தில் செயல் இழந்துவிட்டது. சந்திராயன்-2 விண்ணில் ஏவுவதற்கு அனைத்து முயற்சிகளையும் இஸ்ரோ எடுத்தது.

பல்வேறு தடைகள்:

பல்வேறு தடைகள்:

இஸ்ரோ எடுத்த முயற்சிகளில் ஆரம்பம் முதலே பல்வேறு தடைகள் ஏற்பட்டது. இதையடுத்து ஒரு வழியாக சந்திராயன்-2 திட்டம் செயல்படுத்த இஸ்ரோ முனைப்பு காட்டியது. பிறகு இஸ்ரோவுக்கு நிதியும் ஒதுக்கப்பட்டது. இதன் பிறகு சந்திராயன்-2வும் தயாரானது.

பல்வேறு முறை ஒத்திவைப்பு:

பல்வேறு முறை ஒத்திவைப்பு:

இந்நிலையில் சந்தியராயன்-2 விண்கலன் ஏவும் பொழுது பல்வேறு தடைகள் ஏற்பட்டது. இந்நிலையில், பல்வேறு தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டது. அதையும் இஸ்ரோ சரிசெய்தது. பிறகு உடனடியாக தொழில்நுட்ப கோளாறுகளை சரிசெய்யப்பட்டது.

இறுதியாக ஏவும் போது கவுன்டன் துவங்கியது. அப்போதும் இஸ்ரோ எரிபொருள் டேங்கில் ஓட்டை இருப்பதால், அதை கண்டுபிடித்து சரி செய்யப்பட்டது.

உலக நாடுகளின் பார்வை:

உலக நாடுகளின் பார்வை:

ஜூலை 22ம் தேதி மதியம் சந்திராயன் 2 விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டதை உலக நாடுகள் உன்னிபாக கவனித்து கொண்டிருந்தன.
இந்நிலையில், ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் விண்ணை நோக்கி புயலென புறப்பட்ட சந்திராயன் 2 விண்கலம், மேகக்கூட்டத்தை கிழித்துக்கொண்டு வான்பரப்பை விட்டு வளிமண்டலத்திற்குள் நுழைந்தது.

நாசா விருது வழங்கியது:

நாசா விருது வழங்கியது:

இந்த கடைசி நிமிட நிகழ்வை, பலர் போட்டோ எடுத்திருந்தாலும், நீரஜ் லாடியாவின் போட்டோவிற்கு அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசா, இன்றைய நாளின் வானியல் போட்டோ என்ற பெயரில் விருது வழங்கி அதற்கு அங்கீகாரம் அளித்துள்ளது.

விருது வழங்கி கௌரவம்:

ஸ்பேஸ் சென்னை என்ற நிறுவனத்தின் தலைவராக உள்ள லாடியா, சந்திராயன் 2 ஏவப்படும் நிகழ்வை படம்பிடிக்க, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புலிகாட் ஏரியில் தனது குழுவினருடன் இருந்தார். ஒவ்வொரு வானியல் புகைப்பட கலைஞருக்கும், நாசாவின் இன்றைய நாளின் வானியல் போட்டோ விருது பெறுவது என்பது வாழ்நாள் கனவாகவே இருக்கும். தான் இந்த வானியல் புகைப்படத்துறையில் 8 ஆண்டுகளாக உள்ளேன்.

புகைப்படம் எடுத்த அதிரவிட்டார்:

புகைப்படம் எடுத்த அதிரவிட்டார்:

சந்திராயன் 2 வளிமண்டலத்தில் நுழையும் நிகழ்விற்காக காத்திருந்தேன். அதற்கு ஒளியும் எனக்கு கைகொடுக்கவே, எனது கேனான் 700 டி கேமராவின் மூலம் பல போட்டோக்களை எடுத்தேன். அதனை, நாசாவின் பார்வைக்கு அனுப்பியிருந்தேன். எனது படத்திற்கு நாசாவின் விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. எனது இந்த நாளை/ நிகழ்வை என்றைக்கும் மறக்க மாட்டேன் என்று நீரஜ் லாடியா கூறினார்.

Best Mobiles in India

English summary
NASA Award for Chennai Photographer Neeraj Ladia for Chandrayaan-2 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X