சர்வதேச விண்வெளி மையத்தில் பேஸ்பால் விளையாடிய நாசா விண்வெளி வீரர்கள்!
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் நாசா விண்வெளி வீரர்கள் விண்வெளியில் பேஸ்பால் விளையாட்டை விளையாடி பூமியின் உலகத் தொடரை கொண்டாடினர்.

பேஸ்பால் உண்மையானது
ட்விட்டரில் பகிரப்பட்டுள்ள வீடியோவில், ஜெசிகா மீர் பந்து வீசுவதும், கிறிஸ்டினா கோச் பந்தை பிடிப்பவராகவும், ட்ரூ மோர்கன் மட்டையுடன் பந்தை அடிப்பவராகவும் விளையாட்டில் ஈடுபடுகின்றனர். ட்ரூ முதல் பந்துக்கு பிறகு அவுட் ஆனார்.
இந்த விளையாட்டில் வீசப்பட்ட பேஸ்பால் உண்மையானது. ஆனால் மோர்கன் பேட்-க்காக ஒரு பெரிய ஒளிரும் விளக்கை பயன்படுத்துவதை போல காணொளியில் தெரிகிறது.மீர் பந்தை வீசியதும் மோர்கன் அதை அடித்துவிடுகிறார். ஆனால் அப்பந்து நேராக அவரது எதிராளியிடம் பறந்து சென்று பிடிபட்டுவிடுவதால், முதல் பந்துக்கு பிறகு ஆட்டமிழந்து வெளியேறுகிறார்.

பேஸ்பால் மிதப்பது காண்பிக்கப்பட்டுள்ளது
ஃபாக்ஸ் தொலைக்காட்சி நிலையம் இக்குழுவினருடன் இணைந்து, விளையாட்டு வீரர் ஜோ பக்-ன் ஒலி துணுக்கையும் சேர்த்ததுள்ளதால், அதை பின்னணியில் கேட்கமுடிகிறது.
தன் தொடர்ச்சியாக உலகத் தொடரை கவுரவப்படுத்தும் விதமாக மீர் ட்வீட் செய்துள்ள ஒரு புகைப்படத்தில் , பின்னணியில் பூமியுடன் விண்வெளி நிலையத்தின் ஜன்னல்களுக்கு முன்னால் பேஸ்பால் மிதப்பது காண்பிக்கப்பட்டுள்ளது.
மணிக்கு 17,500 மைல் பயணிக்கும்
அந்த டிவீட்-ல் " மணிக்கு 17,500 மைல் பயணிக்கும் இந்த வேகப்பந்து விண்வெளி நிலையமான குபோலாவுக்கு வந்துள்ளது. பூமியில் மீண்டும் உலகத் தொடரை பார்த்து அனைவரும் ரசிக்கிறார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்!' என குறிப்பிட்டுள்ளார்.
ட்வீட்டில் மணிக்கு 17,500 மைல் வேகத்தில் என குறிப்பிடப்பட்டுள்ளது, சுற்றுப்பாதையில் இருக்க ஒரு விண்கலம் எவ்வளவு வேகத்தில் பயணிக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது.

வரலாறு படைத்தனர்
மீர் மற்றும் அவரது சக விண்வெளி வீராங்கனையும், நண்பரும் இரண்டு வாரங்களுக்கு முன்பு, பெண்கள் மட்டுமே பங்குபெற்ற விண்வெளி நடைபயணத்தை முதன்முறையாக முடித்து வரலாறு படைத்தனர்.
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வெளியே ஏழு மணி நேரத்திற்கும் மேலான இந்த மிஷனில், இப்பெண்கள் சோலார் நெட்வொர்க்-ன் உடைந்த மின் கட்டுப்படுத்தியை (பவர் கண்ட்ரோலர்) சரிசெய்யும் இலக்கை வெற்றிகரமாக முடித்தனர்.

தொழில்நுட்ப கோளாறு
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அதிகரித்த சக்தியை வழங்கத் தவறிய பி.சி.டி.யு எனப்படும் பேட்டரி அலகுகளை கோச் மற்றும் மீர் இருவரும் மாற்றினர்.
இந்த தொழில்நுட்ப கோளாறு விண்வெளி குழுவினரையோ அல்லது அவர்களது பணியையோ கணிசமாக பாதிக்கவில்லை என்றாலும், இது சரிசெய்யப்பட வேண்டும்.

நாசா
நாசாவின் கூற்றுப்படி, விண்வெளி நிலையம் இரவுநேரத்தில் பயணிக்கும் போது ஆற்றல் அளிக்கும், விண்வெளி நிலையத்தின் சோலார் கலெக்டர்களிடமிருந்து ஆற்றலை பெறும் பேட்டரிகளுக்கான சார்ஜை பி.சி.டி.யுக்கள் கட்டுப்படுத்துகின்றன.

நீண்ட விண்வெளிப் பயணத்தை முடிக்கவுள்ள ஒரு பெண்
பிப்ரவரி 2020ல், சுற்றுப்பாதையில் மிக நீண்ட விண்வெளிப் பயணத்தை முடிக்கவுள்ள ஒரு பெண் என்ற அங்கீகாரத்தை பெறவுள்ள கோச், விண்வெளி நடைபயணம் போன்ற பாலின மைல்கற்கள் குறிப்பாக குறிப்பிடத்தக்கவை என்கிறார்.
"தங்களை போன்றவர்களிடமிருந்து கிடைக்கும் ஊக்கமளிக்கும் கதைகளிலிருந்து உந்துதலை பெறும் பலர் உள்ளனர். மேலும் இதுதான் கதை கூறுவதின் ஒரு முக்கிய அம்சம் என்று நான் நினைக்கிறேன்" என்று அவர் இந்த மாதம் ஹூஸ்டனில் நடந்த நாசா மாநாட்டில் கூறினார்.
"இன்று நாங்கள் இருக்கும் இந்த இடத்திற்கு எங்களை அழைத்துச் செல்ல பல தசாப்தங்களாக அனைத்து பெண்களும் செய்த எல்லா வேலைகளையும், இன்று நாங்கள் என்ன செய்கிறோம் என்பதன் மூலம் காண்பிக்கிறோம், 'என மீர் தெரிவித்தார்.
source:dailymail.co.uk


Click it and Unblock the Notifications