நாசா விண்வெளி வீரர்கள் நிலவில் 14 நாட்கள் தங்குவதற்கு புதிய திட்டமா?

|

நான்கு நாசா விண்வெளி வீரர்கள் சந்திரனில் இரண்டு வாரங்கள் தங்கியிருப்பார்கள் என்று அண்மையில் நடந்த வருடாந்திர கலந்தாய்வுக் கூட்டத்தில் இரண்டு நாசா விஞ்ஞானிகள், திட்டமிடப்பட்டுள்ள தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

சந்திரனின் மேற்பரப்பில் விண்வெளி வீரர்கள்

சந்திரனின் மேற்பரப்பில் விண்வெளி வீரர்கள்

லூனார் எக்ஸ்ப்ளோரேஷன் அனாலிசிஸ் குரூப்பின் இரண்டு விஞ்ஞானிகளான, ஜான் கொனொல்லி மற்றும் நிகி வெர்கீசர் ஆகியோர் வருடாந்திர கலந்தாய்வு கூட்டத்தில் நிலவு பயணம் பற்றிய தகவலை வெளியிட்டனர். இதன்படி நாசாவின் இரண்டு விண்வெளி வீரர்கள் சந்திரனின் மேற்பரப்பில் 6.5 நாட்கள் தங்கி நிலவு பற்றிய ஆராய்ச்சியை மேற்கொள்வார்கள் என்று தெரிவித்துள்ளனர்.

இரண்டு மடங்கு அதிக காலம் தங்குவார்கள்

இரண்டு மடங்கு அதிக காலம் தங்குவார்கள்

நியூ ஆர்ஸ் டெக்னிகா ஸ்டோரி தகவலைன் படி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக இதற்கு முன்பு நிலவிற்குச் சென்ற நாசா விண்வெளி வீரர்கள் நிலவில் தங்கி ஆராய்ச்சி செய்ததை விட, இரண்டு மடங்கு அதிக காலம் அடுத்து நடக்கவிருக்கும் ஆராய்ச்சி நடத்தப்படும் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பல அறிவியல் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும்

பல அறிவியல் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும்

விண்வெளி வீரர்கள் சந்திரனின் மேற்பரப்பில் இருக்கும்போது நான்கு விண்வெளிப் நடைபாதைகளை நடத்துவார்கள் என்று கோனோலி மற்றும் நிகி வெர்கீசர் கூறியுள்ளனர். இந்த நிலவின் நடையின் போது, விண்வெளி வீரர்கள் நிலையில் உள்ள நீர் பனி மாதிரி மற்றும் பிற அறிவியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

14 நாட்கள் நிலவில் தங்குவதற்கு திட்டம்

14 நாட்கள் நிலவில் தங்குவதற்கு திட்டம்

2030 க்கு முன்னர் நான்கு விண்வெளி வீரர்களைக் கொண்ட ஒரு குழுவைச் சந்திர மேற்பரப்பிற்கு அனுப்பத் திட்டமிட்டுள்ள நிலையில், அவர்களை 14 நாட்கள் நிலவில் தங்கவைப்பதற்கும் நாசா மும்முரமாக திட்டமிட்டுவருவதாகத் கோனோலி மற்றும் நிகி வெர்கீசர் தெரிவித்துள்ளனர்.

நாசாவிற்கு காங்கிரஸ் ஒப்புதல் வழங்குமா?

நாசாவிற்கு காங்கிரஸ் ஒப்புதல் வழங்குமா?

எவ்வாறாயினும், 2024 பணிக்கான நாசாவின் தேவைகளுக்குக் காங்கிரஸ் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நாசா திட்டமிட்டுள்ள இந்த இலக்குகளைச் சந்திக்கக் காங்கிரஸ் ஒப்புதல் வழங்குமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

Best Mobiles in India

English summary
NASA Astronauts Plan To Stay On The Moon For 14 Days : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X