நாசா புதிய சாதனை.! தனியாக விண்வெளியில் பெண்கள் நடைபயணம்- காரணம் என்ன?

|

நாசா தொடர்ந்து பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்திக் கொண்டே தான் இருக்கிறது. குறிப்பாக இன்று வரை பல்வேறு சாதனைகளை செய்துள்ளது நாசா அமைப்பு. குறிப்பாக அதிநவீன தொழில்நுட்ப சாதனங்களை பயன்படுத்தி புதிய புதிய சாதனைகளை நிகழ்த்தி வருகிறது இந்த நாசா.

நாசா விஞ்ஞானிகள்

நாசா விஞ்ஞானிகள்

இந்நிலையில் அமெரிக்காவின் வீராங்கனைகள் கிறிஸ்டினா கோச், ஜெசிகா மேர் ஆகியோர் விண்வெளியில் நடைபயணம்
மேற்கொண்டனர். இதன்மூலம் முதல்முறையாக விண்வெளியில் தனியாக பெண்களை நடைபயணம் மேற்கொள்ள வைத்து
சத்தமில்லாமல் நாசா விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.

அமெரிக்கா, ரஷ்யா

அமெரிக்கா, ரஷ்யா

குறிப்பாக அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட சில நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அமைத்துள்ளன. இந்நாடுகளை சேர்ந்த விண்வெளி வீரர்கள் சுழற்சி முறையில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நாசா விஞ்ஞானிகள்

நாசா விஞ்ஞானிகள்

சில சமயங்களில் இவர்கள் விண்வெளியில் மிதந்தபடி நடைபயணம் மேற்கொள்வார்கள், ஆண்களின் துணையுடன், பெண் வீராங்கனைகளும் இந்த நடைபயணத்தை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் முதல் முறையாக பெண்கள் மட்டுமேபங்கேற்கும் விண்வெளி நடைபயணத்தை மேற்கொள் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா விஞ்ஞானிகள்முடிவு செய்தனர்.

48எம்பி ரியர் கேமராவுடன் அசத்தலான ஹூவாய் என்ஜாய் 10 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!48எம்பி ரியர் கேமராவுடன் அசத்தலான ஹூவாய் என்ஜாய் 10 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

கடந்த 17-ம் தேதி

கடந்த 17-ம் தேதி

இதற்காக கடந்த மார்ச்சில் ஏற்பாடு செய்யப்பட்டது, ஆனால் விண்வெளி வீராங்கனைகள் அணியும் உடைகள் பற்றாக்குறை
ஏற்பட்டதால் அந்த நிகழ்வு ஒத்தி வைக்கப்பட்டது. இருந்தபோதிலும் கடந்த 17-ம் தேதி விண்வெளியில்கிறிஸ்டினா கோச் (40 வயது), ஜெசிகா மேர (42 வயது) ஆகியோர் விண்வெளியில் வெற்றிகரமாக நடைபயணம் மேற்கொண்டனர்.

உலகின் முதல் விமானியே ராவணன் தான்-கர்ஜிக்கும் இலங்கை.!உலகின் முதல் விமானியே ராவணன் தான்-கர்ஜிக்கும் இலங்கை.!

 ஏற்பட்டுள்ள கோளாறுகளை சரி

மேலும் விண்வெளி ஆய்வு மையத்தின் வெளிப்பகுதியின் பேட்டரியில் ஏற்பட்டுள்ள கோளாறுகளை சரி செய்வதற்காக இவர்கள் இருவரும் இந்த நடைபயணத்தை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் இதன் மூலம் முதன் முறையான விண்வெளியில் தனியாக பெண்கள் நடைபயணம் மேற்கொண்ட சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
NASA Astronauts Complete the First All-Female Spacewalk: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X