18,800 மைல் வேகத்தில் பூமி நோக்கி வரும் ராட்சச சிறுகோள் ஆபத்தா? நாசாவின் பதில் இதுதான்.!

பூமியின் திசையில் பூமியை நோக்கி ராட்சச சிறுகோள் ஒன்று சுமார் 18,800 மைல் வேகத்தில் வந்து கொண்டு இருக்கிறது என்று நாசா தெரிவித்துள்ளது.

|

பூமியின் திசையில் பூமியை நோக்கி ராட்சச சிறுகோள் ஒன்று சுமார் 18,800 மைல் வேகத்தில் வந்து கொண்டு இருக்கிறது என்று நாசா தெரிவித்துள்ளது. இந்த ராட்சச சிறுகோலினால் பூமிக்கு ஆபத்து இருக்கிறதா என்ற கேள்விக்கு நாசாவின் பதில் என்ன என்பதை பார்க்கலாம்.

18,800 மைல் வேகத்தில் பூமியை நோக்கி வரும் சிறுகோள்

18,800 மைல் வேகத்தில் பூமியை நோக்கி வரும் சிறுகோள்

பூமியை நோக்கி சுமார் 18,800 மைல் வேகத்தில் வந்து கொண்டு இருக்கும் இந்த சிறுகோள் கிசாவின் கிரேட் பிரமிடு போல இரண்டு மடங்கு பெரியதென்றும், கோல்டன் கேட் பிரிட்ஜ் மற்றும் ஸ்பைஸ் நீடில் கட்டிடத்தின் உயரத்துடன் இருக்கும் என்றும் நாசா குறிப்பிட்டுள்ளது. நாசாவின் ஜேபிஎல், இந்த சிறுகோள் விட்டதின் அளவை கணக்கிட்டுள்ளது. இந்த சிறுகோள் சுமார் 328அடி முதல் 754.6 அடி வரை இருக்குமென்றும் நாசா தெரிவித்துள்ளது.

மே 30, காலை 11.48 மணிக்கு பூமியை கடக்கும்

மே 30, காலை 11.48 மணிக்கு பூமியை கடக்கும்

நாசாவின் அஸ்டிராய்டு டிராக்கர் மூலம் ஏப்ரல் 13, 2011 ஆம் ஆண்டு இந்த சிறுகோள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாசா கணக்கிட்டுள்ளபடி வருகின்ற மே 30 ஆம் தேதி, காலை 11.48 மணி அளவில் இந்த ராட்சச சிறுகோள் பூமிக்கு அருகில் கடக்கவுள்ளது என்று நாசா தெரிவித்துள்ளது. பூமியின் சுற்றுப்பாதைக்குள் வந்து செல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது.

2.92 மில்லியன் மைல் தொலைவில் கடக்கும்

2.92 மில்லியன் மைல் தொலைவில் கடக்கும்

இந்த சிறுகோள், 1932 இல் பூமிக்கு அருகாமையில் வந்து சென்ற அப்பல்லோ 1862 சிறுகோள் போன்றதே என்றும் நாசா தெரிவித்துள்ளது. அதேபோல் 2011 HP என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சிறுகோள் பூமிக்கு மிக அருகில் சுமார் 2.92 மில்லியன் மைல் தொலைவில் பூமிக்கு ஆபத்து எதுவும் ஏற்படுத்தாமல் அதன் சுற்றுப்பாதையில் கடந்து செல்லும் என்று நாசா தெரிவித்துள்ளது.

"பூமிக்கு மிக அருகில்"

நாசா எப்பொழுதும் கூறும் "பூமிக்கு மிக அருகில்" என்ற வார்த்தைக்குப் பின் உள்ள உண்மையான அர்த்தம் சில பல "மில்லியன்" கிலோ மீட்டர் தூரம் உள்ளது என்பதை அறிந்துகொள்ளுங்கள். அடுத்த வாரம் இந்த சிறுகோள் பூமியைக் கடந்தபின் மே 17, 2027 ஆம் ஆண்டில் மறுபடியும் "பூமிக்கு மிக அருகில்" வந்து செல்லும் என்று நாசா குறிப்பிட்டுள்ளது.

சுவாரசியமான தகவல்: 2184 ஆண்டு

சுவாரசியமான தகவல்: 2184 ஆண்டு

இந்த ராட்சச சிறுகோள் பற்றிய சுவாரசியமான தகவல் என்னவென்றால், இந்த சிறுகோள் 2184 ஆண்டு வரை பல முறை பூமிக்கு அருகில் வந்து செல்லும் என்பது தான். இன்னும் 165 ஆண்டுகளுக்குப் பல முறை இது போன்ற நிகழ்வு நிகழும் என்றும் நாசா துல்லியமாகக் கணக்கிட்டுத் தெரிவித்துள்ளது. இந்த சிறுகோலினால் அடுத்த 150ஆண்டுகளுக்கு ஆபத்து இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
NASA asteroid tracker Asteroid HP Earth approach NASA warning : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X