கேலக்ஸி கோள்கள் முன் செல்பி எடுக்கும் வசதியை அளித்துள்ள நாசா.!
இந்த உலகில் மட்டுமின்றி பூமியை போன்று இருக்கும் மற்ற கோள்களில் இருந்தும் செல்பி எடுத்து கொள்ளும் வசதியும் கிடைக்கும்
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா தற்போது இரண்டு வெர்ட்சுவல் ரியாலிட்டி செயலிகளை அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலி மூலம் பயனாளிகள் காஸ்மெட்டிக் லொகேஷன் முன் செல்பி எடுத்து கொள்ளலாம். அதேபோல் இந்த உலகில் மட்டுமின்றி பூமியை போன்று இருக்கும் மற்ற கோள்களில் இருந்தும் செல்பி எடுத்து கொள்ளும் வசதியும் கிடைக்கும்

நாச நிறுவனம் ஸ்பைசர் ஸ்பேஸ் டெலஸ்கோப் என்ற அரிய வகை டெலஸ்கோப்பை கண்டுபிடித்து 15 வருடங்கள் பூர்த்தி ஆனதை அடுத்து இந்த செல்பி செயலியை அதன் வெர்ட்சுவல் ரியாலிட்டி வசதியுடன் அறிமுகம் செய்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வான்வெளி ஏஜன்ஸி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்த ரியாலிட்டி வெர்ட்சுவல் செயலியில் ஸ்பைட்சன் எடுத்த விதவிதமான ஆச்சரியம் தரத்தக்க இமேஜ்கள் இருக்கும்.
இந்த புதிய செல்பி செயலி மூலம் நீங்கள் புகைப்படம் எடுக்கும்போது வெர்ட்சுவல் வடிவில் விதவிதமான லொகேஷன்கள் அதாவது ஓரியன் நபுலா அல்லது மில்க்கி வே கேலக்ஸியில் இருப்பது போன்று செல்பி எடுத்து கொள்ளலாம்.

அதுமட்டுமின்றி இந்த செல்பி புகைப்படத்தில் உங்களுக்கு பின்னால் உள்ள இமேஜின் முழு விபரங்களும் கிடைக்கும். ஸ்பைட்சர் டெலஸ்கோப் எடுத்த சுமார் 30 விதமான இமேஜ்கள் தற்போது இந்த செயலியில் உள்ளது. எதிர்காலத்தில் இன்னும் அதிகமான இமேஜ்கள் இந்த செயலியில் இணைக்கப்படும் என்றும் நாசா தகவல் அளித்துள்ளது. மேலும் இந்த வசதி மூலம் ரியாலிட்டி செல்பி புகைப்படம் எடுக்க உங்களுக்கு டிராப்பிஸ்ட் 2 என்ற பிளானெட்டரி சிஸ்டம் வழிகாட்டவும் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது
டிராப்பிஸ்ட் 1 என்பது சுமாராக பூமியை போன்று அளவில் உள்ள ஏழு கோள்களில் கூட்டு ஆகும். ஸ்பைட்சர் மூலம் தான் இந்த் ஏழு கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம் தான் விஞ்ஞானிகள் இந்த கோள்கள் குறித்த பல புதிய தகவல்களை கண்டறிந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
அதேபோல் டிராப்பிஸ்ட் 2 என்பது மிகவும் தொலைதூரத்தில் உள்ள கோள்களை ஆராய்ச்சி செய்து கண்டுபிடிக்கப்பட்டது ஆகும். இந்த வெர்ட்சுவல் ரியாலிட்டி மூலம் இந்த அதிசயங்களை நாம் நேரில் காண்பது போல் காணலாம் என்பதுதான் இதன் சிறப்பு
இந்த செயலியின் உதவியால் ஸ்பைட்சன் கண்டுபிடித்த ஏழு கோள்களின் அற்புதமான அதன் பின்னணியில் உள்ள கருமை நிற வான் பகுதிகளை மேலும் தொலைவில் உள்ள நட்சத்திரங்கள் பகுதிகள் அடங்கிய செல்பியை நீங்கள் எடுக்கலாம். இந்த வெர்ட்சுவல் ரியாலிட்டி செயலி ஸ்பைட்சன் மிஷின் இணையதளங்களில் ஒகுலஸ் மற்றும் வைவ் மூலம் நமக்கு கிடைக்கும். அதுமட்டுமின்றி விரைவில் ஓகுலஸ் ஸ்டோர்கள் மூலமும் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஸ்பைட்சர் யூடியூப் சேனலின் முலம் உங்களுக்கு ஒரு 360 டிகிரி வீடியோவும் கிடைக்கும். இதன் மூலம் உங்கள் டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில் மற்றும் ஸ்மார்ட்போனில் டிராப்பிஸ்ட் 1 வெர்ட்சுவலை பார்த்து அனுபவிக்கலாம். அல்லது கூகுள் கார்ட்போர்ட் போன்ற 360 வியூ வசதியுள்ள ஸ்மார்ட்போனிலும் பார்க்கலாம்


Click it and Unblock the Notifications