242 மில்லியன் ஆண்டுகள் பழமையான 20 அடி நீட்ட 'டானிஸ்ட்ரோபியஸ்' மர்மம் அவிழ்க்கப்பட்டது!

|

டானிஸ்ட்ரோபியஸ் (Tanystropheus) எனப்படும் 242 மில்லியன் ஆண்டுகள் பழமையான ஊர்வன வகையைச் சேர்ந்த உயிரினத்தின் கண்டுபிடிக்கப்படாத மர்மம் பல ஆண்டுகளுக்குப் பின்னர் தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த உயிரினத்தின் கழுத்து அதன் உடலை விட மூன்று மடங்கு நீளமுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றை பற்றிய உண்மைகள் இத்தனை ஆண்டுகளாக மர்மாகவே இருந்து வந்தது, தற்பொழுது இந்த மர்மம் அவிழ்க்கப்பட்டுள்ளது.

1852 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட டானிஸ்ட்ரோபியஸ்

1852 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட டானிஸ்ட்ரோபியஸ்

டானிஸ்ட்ரோபியஸ் (Tanystropheus) இனத்தைச் சேர்ந்த உயிரினத்தின் புதைபடிவங்கள் 1852 ஆம் ஆண்டில் ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு பகிதிகளில் கண்டுபிடிக்கப்பட்டன, அன்றிலிருந்து விஞ்ஞானிகளைக் டானிஸ்ட்ரோபியஸ் உருவம் குழப்பி வருகிறது. நடுத்தர ட்ரயாசிக் (Triassic) காலத்தில் இந்த உயிரினம் நிலத்தில் சுற்றித் திரிந்திருந்தால், நீண்ட கழுத்துடன் கூடிய உடலை எவ்வாறு நிலத்தில் ஆதரித்திருக்கும் என்பதை நிபுணர்களால் கணிக்க முடியவில்லை.

வியக்கத்தக்க 20 அடி நீளமுள்ள உயிரினம்

வியக்கத்தக்க 20 அடி நீளமுள்ள உயிரினம்

ஆனால் சுவிட்சர்லாந்தில் உள்ள சூரிச் பல்கலைக்கழகம் தலைமையிலான ஒரு புதிய ஆய்வில், கிட்டத்தட்ட 20 அடி நீளமுள்ள இந்த உயிரினம் தண்ணீரில் வாழ்ந்து, 'வியக்கத்தக்க வகையில் தழுவிக்கொள்ளக்கூடியது' என்பதை தற்பொழுது விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மூக்கின் மேற்புறத்தில் அமைந்துள்ள நாசி மற்றும் வளைந்த பற்கள் மீன் மற்றும் ஸ்க்விட் போன்ற வழுக்கும் இரையைப் பிடிப்பதற்கு ஏற்றதாக இருந்துள்ளது என்று கூறியுள்ளனர்.

அண்டார்டிகாவில் திடீரென தோன்றிய ராட்சஸ ஏலியன் உருவத்தின் ஆதாரம்! நாசா சொன்ன பதில் இதுதான்!

டானிஸ்ட்ரோபியஸ் உண்மை ஒருவழியாக வெளிவந்தது

டானிஸ்ட்ரோபியஸ் உண்மை ஒருவழியாக வெளிவந்தது

டானிஸ்ட்ரோபியஸ் இனமும் இரண்டு வெவ்வேறு இனங்களாகப் பரிணமித்தது, ஒன்று மற்றொன்றை விட பெரியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ''நான் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக டானிஸ்ட்ரோபியஸைப் பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறேன், ஒருவழியாக இந்த உயிரினத்தின் உண்மைகளை கண்டுபிடித்துள்ளது மிகவும் திருப்தி அளிக்கிறது' என்று சிகாகோவில் உள்ள புல்ட் மியூசியத்தின் பழங்கால ஆராய்ச்சியாளர் ஆலிவர் ரிப்பல் கூறியுள்ளார்.

டைனோசர்களுக்கு முன்பு ஊர்வனவற்றால் ஆளப்பட்ட பூமி

டைனோசர்களுக்கு முன்பு ஊர்வனவற்றால் ஆளப்பட்ட பூமி

டானிஸ்ட்ரோபியஸ் மிக நீண்ட கழுத்துடன், முரட்டுத்தனமான முதலை போல் வாழ்ந்துள்ளது. அந்த கழுத்துடன் டானிஸ்ட்ரோபியஸ் ஒரு நிலப்பரப்பு சூழலில் வாழ்ந்திருப்பது என்பது அர்த்தமற்றது. 242 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, டைனோசர்கள் நிலத்தில் வெளிவரத் தொடங்கியபோது, ​​பூமி மாபெரும் ஊர்வனவற்றால் ஆளப்பட்டது என்பதே உண்மை. அதிலும் கடலில் வாழ்ந்த ஊர்வன உயிரினங்கள் ராட்சஸ உருவத்துடன் கடல் பகுதியைத் தனது வேட்டையாடும் களமாக வைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பெரிய டானிஸ்ட்ரோபியஸ் இனங்கள்

பெரிய டானிஸ்ட்ரோபியஸ் இனங்கள்

பெரிய டானிஸ்ட்ரோபியஸ் இனங்கள் மொத்தம் 20 அடிக்கு மேல் நீளமாக வளரக்கூடியது. அதன் கழுத்து பகுதி மட்டும் சுமார் 7.5 அடி நிலம் கொண்டதாக இருந்துள்ளது. அதன் உடல் 2.2 அடி மற்றும் வால் 6.5 அடி நீட்டம் கொண்டது. சுவிட்சர்லாந்தில் பல டானிஸ்ட்ரோபியஸ் புதைபடிமங்கள் கண்டுபிடிக்கப்பட்ட அதே இடத்தில், 4 அடி நீளமுள்ள டானிஸ்ட்ரோபியஸ் போல் உள்ள புதைபடிமங்களும் கிடைத்துள்ளது.

ரேஷன் கார்டு அட்டை உங்களிடம் இல்லையா? அப்படினா இதை உடனே செய்யுங்கள்!

மனிதர்களைப் போலவே டானிஸ்ட்ரோபியஸ் எலும்பு

மனிதர்களைப் போலவே டானிஸ்ட்ரோபியஸ் எலும்பு

இவை நிலவாசிகளா அல்லது கடல் விலங்குகளா, சிறிய மாதிரிகள் இளம் வயதினரா, அல்லது அவை ஒரு தனி இனமா என்பது விஞ்ஞானிகளுக்கு புதிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற நீண்ட கழுத்துகளைக் கொண்ட விலங்குகளுக்கு விந்தையானது, அவற்றில் 13 மிக நீளமான கழுத்து முதுகெலும்புகள் காணப்படும். ஆனால், டானிஸ்ட்ரோபியஸ், ஒட்டகச்சிவிங்கிகள் போன்றது, இது மனிதர்களைப் போலவே ஏழு கழுத்து எலும்புகளை மட்டுமே கொண்டுள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

3டி மண்டை ஓடு

சிடி ஸ்கேன் உதவியுடன் 3டி மண்டை ஓட்டை புனரமைக்க முடிந்தது, இதன் மூலம் டானிஸ்ட்ரோபியஸ் மண்டை ஓடுகளில் முதலையில் காணப்படுவது போன்ற மூக்கின் மேல் நாசி உட்பட முக்கிய அம்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது டானிஸ்ட்ரோபியஸ் தண்ணீரில் வாழ்ந்ததற்கு ஆதாரமாகக் கூறப்படுகிறது. அதன் நீண்ட, வளைந்த பற்களால் மீன் மற்றும் ஸ்க்விட் போன்ற நீர் விலங்குகளை உண்டு வாழ்ந்து வந்துள்ளது என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முட்டையிடுவதற்காக வந்த டானிஸ்ட்ரோபியஸ்

முட்டையிடுவதற்காக வந்த டானிஸ்ட்ரோபியஸ்

டானிஸ்ட்ரோபியஸ் முட்டையிடுவதற்காகத் தரையிறங்கியிருக்கலாம், ஆனால் பெரும்பாலும் கடலில் தான் இவை வாழ்ந்திருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பூமியின் அல்ட்ரா பிளாக் நிற மீன் ஆழ்கடலில் கண்டுபிடிப்பு! ரகசியத்தையும் அவிழ்த்துவிட்ட விஞ்ஞானி!

சிறிய டானிஸ்ட்ரோபியஸ் தனித்தனி இனங்கள்

சிறிய டானிஸ்ட்ரோபியஸ் தனித்தனி இனங்கள்

கண்டுபிடிக்கப்பட்ட சிறிய மாதிரிகள் இளம் வயதினரா அல்லது தனி இனமா என்பதை அறிய, ஆராய்ச்சியாளர்கள் எலும்பு வளர்ச்சி மற்றும் வயதான அறிகுறிகளை ஆராய்ச்சி செய்துள்ளனர். எலும்புகளில் வளர்ச்சி வளையங்கள் பெரிய மற்றும் சிறிய டானிஸ்ட்ரோபியஸ் தனித்தனி இனங்கள் என்பதையும் தற்பொழுது உறுதி செய்துள்ளனர்.

Source: dailymail.co.uk

Most Read Articles
Best Mobiles in India

English summary
Mystery Of 242 Million-Year-Old Reptile Tanystropheus With A Lengthy Neck Problem Is Finally Solved : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X