அண்டார்டிகாவில் தோன்றிய அமானுஷ்ய கட்டிடம்!! காரணம் ஏலியனா.! உண்மை என்ன?

|

நீங்கள் அண்டார்டிகாவைப் பற்றி நினைக்கும் போது, ​​உங்கள் மனதில் நிறையப் பனியைப் பற்றி நினைப்பீர்கள் அல்லது பெங்குவின்களை பற்றி நினைப்பீர்கள். ஆனால், விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் அண்டார்டிகா பனி பகுதியை அதற்காகச் சுற்றி வரவில்லை. நிச்சயமாக, நிறைய மர்மங்கள் அண்டார்டிகாவில் உள்ள பனிக்கட்டிகளின் இடையில் சிக்கியுள்ளதாக அவர்கள் நம்புகின்றனர்.

இராட்சஸ கட்டிடம்

இராட்சஸ கட்டிடம்

அவர்களின் நம்பிக்கை பொய் இல்லை என்பதை உணர்த்துவது போல் அண்டார்டிக்காவின் பனிப்பாறைகளுக்கு நடுவே இராட்சஸ உயரமான கட்டிடம் ஒன்றை கூகிள் எர்த் காட்சிப்படுத்திக் காட்டியுள்ளது. இந்த கட்டிடத்தைப் பனிக்கட்டிகளுக்குள் கண்டுபிடித்த கூகுள் எர்த் பயன்பாட்டிற்கு விஞ்ஞானிகள் நன்றி தெரிவித்துள்ளனர். இந்த அறியக் கண்டுபிடிப்பு பற்றிய ஆதார வீடியோ பதிவு 'MrMB333' என்ற யூடியூப் சேனலில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

அண்டார்டிகா பற்றி மறைக்கப்படும் உண்மைகள்

அண்டார்டிகா பற்றி மறைக்கப்படும் உண்மைகள்

MrMB333 யூடியூப் சேனலில் உள்ள இந்த வீடியோவை இதுவரை சுமார் 78k நபர்கள் பார்வையிட்டுள்ளனர். மேலும், இந்த வீடியோவில் பார்வையாளர்கள் கமெண்ட் செய்திருப்பதாவது "அனைத்து நாடுகளும் நிலத்தைக் கையகப்படுத்த விரும்புவது விந்தையானது, ஆனால் எந்த நாடும் அண்டார்டிகாவைக் கோரவில்லை. ஏனென்றால் நாங்கள் அறியாத ஒன்று அவர்களுக்குத் தெரியும் என்று நான் நினைக்கிறேன், "என்று ஒரு நபர் கூறியுள்ளார்.

48 வருட இடைவெளியில் எடுக்கப்பட்ட இந்தியாவின் அட்டகாச புகைப்படம்.! பலே நாசா.!48 வருட இடைவெளியில் எடுக்கப்பட்ட இந்தியாவின் அட்டகாச புகைப்படம்.! பலே நாசா.!

'வோர்ம் ஹோல்' இரகசிய திட்டம்

'வோர்ம் ஹோல்' இரகசிய திட்டம்

அண்டார்டிகாவில் 'வோர்ம் ஹோல்' என்ற பெயரில் இரகசிய திட்ட அமெரிக்க இராணுவத்தின் இரகசிய திட்டம் ஒன்று செயல்பட்டு வருவதாகவும் கமெண்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பனியின் கீழ் சுரங்கப்பாதை அடிப்படையிலான மற்றும் மொபைல் அணு ஏவுகணை ஏவுதளங்களின் வலையமைப்பை உருவாக்கும் முயற்சி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்டார்டிகாவில் தொடரும் அமானுஷ்யங்கள்

அண்டார்டிகாவில் தொடரும் அமானுஷ்யங்கள்

கடந்த மாதத்தில், மற்றொரு கூகிள் எர்த் பயனர் ஒரு தனித்துவமான வட்ட தட்டு போன்ற பொருள் பனிக்கட்டியை விட்டு வெளியேறுவதாகக் கண்டறிந்தார். இச்சம்பவத்திற்கும் ஏலியன்களுக்கும் ஏதேனும் தொடர்பு இருப்பதாகப் பலரும் நம்புகிறார்கள். கடந்த ஆண்டின் பிற்பகுதியில், பெரிய துளை இருப்பதை நாசா கவனித்தது, இது சுமார் 20,000 சதுர மைல்கள் என்பதும், 1976 முதல் காணப்படாத ஒன்று என்றும் நாசா தெரிவித்தது.

உலகப் போரே நடக்கும்: கொரோனா வைரஸ் குறித்து ஒரு ஆண்டு முன்பே கணித்த பில் கேட்ஸ்!உலகப் போரே நடக்கும்: கொரோனா வைரஸ் குறித்து ஒரு ஆண்டு முன்பே கணித்த பில் கேட்ஸ்!

இராட்சஸ துளை

இராட்சஸ துளை

அந்த இராட்சஸ துளை இறுதியில் தானாகவே மறைந்துவிட்டது, இந்த துளைக்கு அனமோலி வெடெல் பாலின்யா என்று பெயரிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்பொழுது இந்த இராட்சஸ உயரமான கட்டிடம் கூகிள் எர்த் காட்சி மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த இராட்சஸ உயரமான கட்டிடம் சுமார் 2000 அடி உயரத்தில் தென்படுவதாகவும், இதன் அளவு சுமார் 6 புட்பால் கிரௌண்ட் நிலத்திற்கு இருக்கிறதென்று கூறப்பட்டுள்ளது.

உண்மையில் இது என்ன?

உண்மையில் இது என்ன?

இது உலையில் ஒரு கட்டிடம் தானா? அல்லது ஏதேனும் ஏலியன் சம்பந்தமான அமானுஷ்யமா என்று விஞ்ஞானிகளும் ஆராய்ச்சியாளர்களும் தங்களின் ஆராய்ச்சியை மேற்கொள்ளவுள்ளார். அண்டார்டிகா பகுதியில் இது போன்ற அமானுஷ்ய நிகழ்வுகள் இப்பொழுது தொடர்ந்து அடிக்கடி நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆராய்ச்சியாளர்களின் சோதனைக்குப் பின் உண்மையில் இது என்ன என்பது வெளிச்சத்திற்குக் கொண்டு வரப்படும் என்று நம்பப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Mysterious Structure Found In Antarctica Think Massive Researches Doubt It As Alien Building : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X