Home
Scitech

மர்மமான 'பிளானட் நைன்' பற்றி வெளியான திகைப்பூட்டும் உண்மைகள்!

இந்த கிரகம் நெப்டியூன் பொருட்களில் ஒன்றை மையமாக கொண்டு தனது சுற்றுப்பாதை கொண்டுள்ளதக சாத்தியக்கூறுகள் தெரிவிக்கின்றன.

என்னது பிளான்ட் நையன் என்று என்று ஒரு கிரகம் உள்ளதா? என்று கேட்டால், அதற்கான நிச்சயமான பதில் நேற்று வரை நம்மிடம் இல்லை.

மர்மமான 'பிளானட் நைன்' பற்றி வெளியான திகைப்பூட்டும் உண்மைகள்!

ஏனெனில் பிளானட் நைன் என்பது சூரிய மண்டலத்தின் வெளிப்புற மண்டலத்தில் "மறைந்து" உள்ள ஒரு கருதுகோள் கிரகம் ஆகும். இந்த கிரகம் நெப்டியூன் பொருட்களில் ஒன்றை மையமாக கொண்டு தனது சுற்றுப்பாதை கொண்டுள்ளதக சாத்தியக்கூறுகள் தெரிவிக்கின்றன. மேலும் அது சூரியன் மற்றும் பூமிக்கு இடையிலே இருக்கும் தூரத்தை காட்டிலும் 250 மடங்கு அதிகமான தொலைவில் சுற்றி வருகிறது என்கிற கருதுகோளும் உள்ளது.

பிளான்ட் நைன்

பிளான்ட் நைன்

நமது சூரிய மண்டலத்தின் தொலைதூர எல்லைகளில் மறைந்து இருக்கலாம் என்று நம்பப்பட்டு வந்த இந்த கிரக்கத்தின் இருப்பு ஆனது தற்ப்போது "கிட்டத்தட்ட" உறுதி செய்யப்பட்டு உள்ளது. வானியலாளர்களும் பிளான்ட் நைன் உண்மையில் இருப்பதைப் போல் தோன்றுவதாக நம்புகின்றனர் உடன் சில புதிய விவரங்களை வெளியிட்டிருக்கிறார்கள்.

பிப்ரவரி

பிப்ரவரி

கடந்த பிப்ரவரி ஒன்பதாம் தேதி அன்று ஆன்லைனில் வெளியான ஒரு இயற்பியல் அறிக்கையின் படி, பிளானட் 9 ஆனது அநேகமாக அது பூமியின் அளவை விட சுமார் ஐந்து முதல் பத்து மடங்கு பெரியதாக இருக்கலாம். மேலும் அது பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலேயே ஆன தூரத்தை விட சுமார் 400 மடங்கு அதிக தூரத்திலிருக்கும் உச்சங்களைக் கொண்டிருக்கும் ஒரு கோளப்பாதையுடன் பயணிக்கலாம். அந்த கோளப்பாதை ஆனது நமது சூரிய மண்டலத்தின் பிரதான சுற்றுப்பாதை சமவெளியில் ஆனது 15 முதல் 25 டிகிரி வரை இருக்கலாம்.

மர்மமான கிரகம்

மர்மமான கிரகம்

இப்படியொரு மர்மமான கிரகம் இருக்கிறது என்கிற கருதுகோள் அல்லது கோட்பாடு ஆனது கடந்த 2014 ஆம் ஆண்டில் தான் ஆரம்பிக்க்கப்பட்டது என்பதும், அந்த நாளில் இருந்து இன்று வரையிலாக இதை பற்றிய ஆய்வை நிகழ்த்தி, உறுதியான ஒரு நிலைப்பாட்டை கொண்டு வர பல வானியலாளர்கள் முயற்சி செய்து வருகிறார்கள்.

குய்பெர் பெல்ட்டில் உள்ள பொருட்களின் வடிவங்கள் ஆகும்

குய்பெர் பெல்ட்டில் உள்ள பொருட்களின் வடிவங்கள் ஆகும்

பிளான்ட் நைனின் இருப்பை உறுதியாக நம்பும் ஆராய்ச்சியாளர்களுக்கு பக்கபலமாக இருப்பது குய்பெர் பெல்ட்டில் உள்ள பொருட்களின் வடிவங்கள் ஆகும். குய்பெர் பெல்ட் என்பது வெளிப்புற சூரிய மண்டலத்தில் உள்ள விண்வெளி குப்பைகளின் ஒரு வளையம் ஆகும். அந்தப் பொருள்கள் ஒன்றுக்கொன்று மிகவும் முரட்டுத்தனமாக இருக்கின்றன, ஆக அதன் பின்னணியில் ஏதோ ஒரு சக்தி வாய்ந்த ஈர்க்கும் பொருள் செயல்படுகிறது என்கிற சந்தேகம் கிளம்பியது, அந்த சந்தேக குழந்தையின் பெயர் தான் - பிளான்ட் நைன்!

100க்கு 99 சதவிகிதம்

100க்கு 99 சதவிகிதம்

அதற்கான சான்றுகளும் வலுவாக கிடைத்து இருக்கின்றன. அஸ்ட்ரானோமிக்கல் ஜர்னலில் கடந்த ஜனவரி 22 ஆம் தேதி பிரசுரிக்கப்பட்ட ஒரு தனித்துவமான தாளில் - பிசிக்ஸ் ரிப்போர்ட்டின் அதே ஆசிரியர்களில் சிலர் - பிளானட் நைன் இல்லாமல் போவதற்கான நிகழ்தகவு ஆனது 500 இல் 1 தான் இருக்கிறது என்று கணக்கிட்டு உள்ளனர். அதாவது 100க்கு 99 சதவிகிதம் பிளான்ட் நைன் இருக்க வாய்ப்பு உள்ளது என்று அர்த்தம்.

இரண்டு நம்பிக்கைகள்

இரண்டு நம்பிக்கைகள்

பிளான்ட் நைன் பற்றி இரண்டு நம்பிக்கைகள் இருந்தன. ஒன்று அது ஒரு "மாயமான மற்றும் மர்மமான ஒரு இருண்ட கிரகம்" மற்றொன்று அது மிக மிக தொலைவாக இருக்கிறது. சமீபத்திய ஆய்வின் படி, முதல் நம்பிக்கையின் மீது எந்த ,மாற்று கருத்தும் ஏற்படவில்லை. ஆனால் இரண்டாம் நம்பிக்கையில் ஏற்பட்டு உள்ளது. அதாவது இந்த புதிய ஆராய்ச்சி ஆனது முன்னர் நாம் நினைத்ததை விட பிளானட் நைன் ஆனது கணிசமான அருகாமை எல்லையில் தான் உள்ளது. இருந்தாலும் கூட, வானியலாளர்கள் அளந்து பார்க்க மற்றும் கடந்து போகும் இன்னமும் நிறைய தூரம் இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிசிக்ஸ் ரிப்போர்ட்

பிசிக்ஸ் ரிப்போர்ட்

பிசிக்ஸ் ரிப்போர்ட் ஆசிரியர்கள் என்று குறிப்பிட்டு இருந்தோம் அல்லவா, அவர்கள் இந்த மர்மமான கிரகம் இல்லாமலும் போகலாம் என்று கூறியவர்கள் ஆவார்கள். அதாவது நாம் இருக்கும் என்று நம்பும் இடத்தில் எதுவுமே இல்லாமல் போவதற்கான சாத்தியங்கள் உள்ளதாக அவர்கள் கூறி இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய சில சான்றுகள் கிடைத்த பின்னர் இது "தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்" என்று கூறியுள்ளனர்.

சுய-ஈர்ப்பு

சுய-ஈர்ப்பு

குய்பர் பெல்ட்டின் படம் முழுமையடையாத பட்சத்தில், பிளான்ட் நைனின் இருப்பை நம்மால் உறுதி செய்ய முடியாது. ஆம் குய்பர் பெல்ட் ஆனது ஒரு விண்வெளி கொத்தாகவே (க்ளஸ்டர்) உள்ளது. ஒருவேளை குய்பர் பெல்ட்டின் முழுமையான படம் கிடைக்கும் பட்சத்தில், அது "சுய-ஈர்ப்பு" மூலம் தான் செயல்படுகிறது அங்கு எந்த விதமான மாபெரும் ஈர்ப்பு சக்திகளும் இல்லை என்கிற உண்மையில் கண்டுபிடிக்கப்படலாம் அல்லது கடந்த சில ஆண்டுக;ளாக மறைந்தே வாழ்ந்து வைத்த பிளான்ட் நைனின் இருப்பு உண்மை தான் என்று நிரூபிக்கவும் படலாம்.

கணிசமான முன்னேற்றம்

கணிசமான முன்னேற்றம்

சமீபத்திய ஆண்டுகளில் பிளானட் நைனின் சில சான்றுகளால் வானியல் வல்லுனர்கள் மிகவும் நம்பிக்கைக்குள்ளாகிவிட்டனர் என்பதும் இப்போது அவர்கள் விண்வெளியில் அதை கண்டுபிடிப்பதில் கணிசமான முன்னேற்றம் அடைந்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Mysterious 'Planet Nine' Is Probably 5 to 10 Times the Size of Earth: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X