341 ஆண்டுகளுக்கு முன் சாத்தானின் பிடியிலிருந்த ஒரு கன்னியாஸ்தீரி எழுதிய மர்மமான கடிதம்.!

|

முதலில் டீகோடிங் என்றால் என்னவென்பதை அறிந்துகொள்வோம். நமக்கு முற்றிலும் பழக்கமில்லாத எழுத்துக்களை கூட (அவைகள் குறியீடுகளாகவும் இருக்கலாம்) ஒலிக்கும் அல்லது படிக்கும் அல்லது அர்த்தம் காணும் செயல்முறைதான் - டீகோடிங் என்று அழைக்கப்படுகிறது. இன்னும் சுருக்கமாக கூறினால், ஒரு குறியீட்டு செய்தியை பகுப்பாய்வு செய்து, அதை தெளிவான மொழியாக மாற்றி, விளக்கம் காண்பது.

பிரமிடுகள் வெறும் சமாதிகளல்ல; கட்டப்பட்டதற்கான உண்மையான காரணமே வேறு.!

341 ஆண்டுகளுக்கு முன் கன்னியாஸ்தீரி ஒருவர் எழுதிய மர்மமான கடிதம்.!

அப்படியான டீகோடிங் வழிமுறையின் கீழ், சுமார் 341 ஆண்டுகளுக்கு முன்னர் "சாத்தானின் பிடியின் கீழிருந்த கன்னியாஸ்தீரிர்" ஒருவரால் எழுதப்பட்ட மிகவும் மர்மமான கடிதத்தின் அர்த்தம் தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

உலகின் மூத்த மொழியே தமிழ் எனக் கூறி அதிரவிட்ட ஏலியன்கள்.!

341 ஆண்டுகளுக்கு முன் கன்னியாஸ்தீரி ஒருவர் எழுதிய மர்மமான கடிதம்.!

அதென்ன கடிதம்.? அதை உண்மையில் எழுதியது யார்.? அக்கடிதம் கூறும் விளக்கம் தான் என்ன.?

புரிந்துகொள்ள முடியாத கலவை.!

புரிந்துகொள்ள முடியாத கலவை.!

சரியாக 1676-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11 அன்று, சாத்தானின் பிடியில் இருந்ததாக கூறப்படும் கன்னியாஸ்தீரி மரியா குரோசிஃபிசா டெல்லா கொன்செசியன் ஒரு கடித்ததை எழுதியுள்ளார். அந்த கடிதம் கிரேக்கம், சிரிலிக், அரபு மற்றும் ரூயூனி ஆகிய மொழிகளின் புரிந்துகொள்ள முடியாத கலவையில் எழுதப்பட்டுள்ளது.

சாத்தானின்  மூலம் அனுப்பட்ட செய்தி.?

சாத்தானின் மூலம் அனுப்பட்ட செய்தி.?

சிசிலிவில் உள்ள பால்மா டி மான்டிச்சிரோ (Palma di Montechiaro) தேவாலயத்தின் கன்னியாஸ்தீரியான மரியாவும், இதர சகோதிரிகளும் இந்த கடிதம் - சாத்தானின் மூலம் அனுப்பட்ட ஒரு செய்தி என்று நம்பியுள்ளனர். ஆனால் அவர்களால், அந்த கடிதத்திலுள்ள வார்த்தைகளை அர்த்தம் கண்டுகொள்ள முடியவில்லை.

அர்த்தத்தை புரிந்துகொள்ள முயற்சி.!

அர்த்தத்தை புரிந்துகொள்ள முயற்சி.!

அதை தொடர்ந்து பல நூற்றாண்டுகளாக, உலகம் முழுவதிலுமிருந்தும் அறிஞர்கள், டீகோடிங் வல்லுநர்கள் மற்றும் அறிவாளிகள் அந்த சாத்தானின் கடிதத்தில் உள்ள அர்த்தத்தை புரிந்துகொள்ள முயற்சி செய்துள்ளனர், அனைவருக்கும் தோல்விதான் மிச்சம்.

15 வரிகள்.!

15 வரிகள்.!

தற்போது சுமார் ​​341 ஆண்டுகளுக்குப் பின்னர், சிசிலியில் உள்ள லூடும் சயின்ஸ் நிறுவனத்தின் குழுவொன்று இந்த மர்மமான கடிதத்தின் முதல் 15 வரிகளை மொழிபெயர்த்துள்ளதாக கூறுகிறது. இதில் மிகவும் சுவாரசியமான விடயம் என்னவென்றால், அவர்கள் டார்க் வெப்'பில் கிடைக்கப்பெற்ற டீகோடிங் மென்பொருளை பயன்படுத்தியே இதை நிகழ்த்தியுள்ளனர்.

அநாமதேயராகவோ அல்லது மறைமுகமாகவோ.!

அநாமதேயராகவோ அல்லது மறைமுகமாகவோ.!

டார்க் வெப் என்பது உலகளாவிய வலைபின்னலின் (WWW) ஒரு பகுதியாகும். இதை அநாமதேயராகவோ அல்லது மறைமுகமாகவோ செயல்படும் குறிப்பிட்ட பயனர்கள் மற்றும் இணைய தள இயக்கிகளால் மட்டுமே அணுக முடியும் மற்றும் டார்க் வெப்தனை ஒரு தனிச்சிறப்பான மென்பொருள் கொண்டு மட்டுமே அணுகமுடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

டீகோடிங் மென்பொருள்கள் வரை.!

டீகோடிங் மென்பொருள்கள் வரை.!

"அப்படியான டார்க் வெப்தனில் எல்லாமே இருக்கிறது: போதை மருந்துகள், விபச்சாரம், பெடோபிலியா தொடங்கி உளவுத்துறையினரால் பயன்படுத்தப்படும் டீகோடிங் மென்பொருள்கள் வரை எல்லாமே இருக்கிறது, அதாவது நாங்கள் பயன்படுத்தியதைப் போலவே" என்று கூறுகிறார் லூடும் சயின்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் டேனியேல் ஆபேட்.

இறைவன், மனிதகுலம், சாத்தான்.!

இறைவன், மனிதகுலம், சாத்தான்.!

மொழிபெயர்க்கப்பட்டகடித்த வரிகளின் படி, அது இறைவனுக்கும், மனிதகுலத்துக்கும் மற்றும் சாத்தானுக்கும் உள்ள உறவைப் பற்றி விவரித்திருக்கின்றன என்பது தெரிய வந்துள்ளது.

கிரேக்க புராணங்களில்.!

கிரேக்க புராணங்களில்.!

இதுவரை மொழிபெயர்கப்பட்ட வரிகளானது - "கடவுள் மனிதர்களை விடுவிப்பார் என நினைக்கிறார். இந்த முறையில் யாரும் வேலை செய்யவில்லை ... ஒருவேளை இப்போதில்லை (என்றாலும்) ​​ஸ்டைக்ஸ் (என்பது) நிச்சயம்" - என்ற அர்த்தத்தை அந்த வரிகள் வழங்குகியுள்ளது. கிரேக்க புராணங்களின்படி, ஸ்டைக்ஸ் என்பது ஒரு தெய்வம் மற்றும் பூமிக்கும் - பாதாள உலகிற்கு இடையேயான எல்லைகளை உருவாக்கும் ஒரு நதியாகும்.

இருமுனை சீர்குலைவு.!

இருமுனை சீர்குலைவு.!

இதெல்லாம் ஒருபக்கமிருக்க, நவீன வரலாற்றாசிரியர்கள், சகோதரி மரியா இருமுனை சீர்குலைவு நோயால் (bipolar disorder) பாதிக்கப்பட்டிருத்திருக்கலாம் என்று கருதுகின்றனர். அவ்வழியாக அவர் ஒரு திறமையான மொழியியலாளராக, பல்வேறு எழுத்துக்களில் பல்வேறு மொழிகளில் எழுதக்கூடிய ஒரு மேன்மையை வெளிப்படுத்தியிருக்கலாம் என்றும் நம்புகின்றனர்.

நன்கு சிந்திக்கப்பட்டு கட்டமைக்கப்பட்டிருக்கிறது.!

நன்கு சிந்திக்கப்பட்டு கட்டமைக்கப்பட்டிருக்கிறது.!

லூடும் சயின்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் டேனியேல் ஆபேட், "இந்த கடிதம் துல்லியமான எழுத்துக்களை பிரதிபலிக்கிறது, சகோதிரி மரியாவிற்கு நன்கு தெரிந்த சின்னங்களை கொண்டு மிகவும் கவனத்துடன் இது உருவாக்கம் பெற்றுள்ளது. ஒவ்வொரு குறியீடும் நன்கு சிந்திக்கப்பட்டு கட்டமைக்கப்பட்டிருக்கிறது. ஒருவேளை இது வேண்டுமென்றே எழுதப்பட்டிருக்கலாம் அல்லது ஒருவேளை தன்னை அறியாமலே கூட எழுதப்பற்றிருக்கலாம்" என்று கூறுகிறார்.

மேலும் இரண்டு கடிதங்கள்.!

மேலும் இரண்டு கடிதங்கள்.!

எல்லாவற்றை விடவும் மிகவும் சுவாரசியமான தகவல் என்னவென்றால், சாத்தானிடம் இருந்து தான் மேலும் இரண்டு கடிதங்களை பெற்றதாக சகோதரி மரியா தன் சக கன்னியாஸ்தீரிகளிடம் சொன்னதாக கூறப்படுகிறது. அந்த கடிதங்கள் இந்நாள் வரையிலாக கண்டுபிடிக்கப்படவில்லை.!

உலகின் மூத்த மொழியே தமிழ் எனக்  கூறி அதிரவிட்ட ஏலியன்கள்.!

உலகின் மூத்த மொழியே தமிழ் எனக் கூறி அதிரவிட்ட ஏலியன்கள்.!

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தக் குடி தமிழ் குடி என்று நம் முன்னோர்களும், தமிழ் அறிஞர் பெரு மக்களும் கூறி வந்தனர்.

இது உண்மை தான் என்று தற்போது நிருபணம் ஆகியுள்ளது. உலகின் முதலில் தோன்றியது தமிழ் தான் என்று பிளேடியன்கள் எனப்படும் வேற்று கிரவாசிகள் கூறியுள்ளனர்.

இதை அமெரிக்க மொழி ஆய்வாளர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர். உலகில் பல்வேறு மொழிகள் இன்று பரவக் காரணம் பிளேடியன்கள் தான் அவர்களுடன் தொடர்பில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கூறி வருகின்றனர்.

தமிழ்:

தமிழ்:

தமிழ், இந்தியாவில் பேசப்படும் மொழிகளில் மிக நீண்ட இலக்கிய, இலக்கண மரபுகளைக் கொண்டது. தமிழ் இலக்கியங்களில் சில 2500 ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை. கண்டெடுக்கப்பட்டுள்ள தமிழ் ஆக்கங்கள் கிறித்துவுக்கு முன் 400-ம் ஆண்டைச் சேர்ந்த பிராமி எழுத்துகளில் எழுதப்பெற்றவைகளாகும்.

95 சதவீதம் கல்வெட்டு:

95 சதவீதம் கல்வெட்டு:

இந்தியாவில் கிடைத்துள்ள ஏறத்தாழ 100,000 கல்வெட்டு, தொல்லெழுத்துப் பதிவுகளில் 60,000இற்கும் அதிகமானவை தமிழகத்தில் கிடைத்துள்ளன. இதில் ஏறத்தாழ 95 விழுக்காடு தமிழில் உள்ளன. மற்ற மொழிகள் அனைத்தும் ஐந்து விழுக்காட்டுக்கும் குறைவான கல்வெட்டுகளையே கொண்டுள்ளன.

முதன்மை  மொழி:

முதன்மை மொழி:

தமிழ், தென் இந்திய மாநிலமான தமிழ் நாட்டின் பெரும்பான்மையினரதும், இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் வாழும் மக்களதும் முதன் மொழியாகும். தமிழ் மேற்படி நாடுகளின் பிற பகுதிகளிலும், குறிப்பாக, இந்திய மாநிலங்களான கர்நாடகம், கேரளம் மற்றும் மகாராட்டிரத்திலும், இலங்கையில் கொழும்பு மற்றும் மத்திய மலை நாட்டுப் பகுதிகளிலும் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளிலும் வழங்கி வருகின்றது.

ஆட்சி அங்கீகாரம்:

ஆட்சி அங்கீகாரம்:

தமிழ் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் ஆட்சி மொழியாகும். அத்துடன் இந்திய அரசியலமைப்பின் எட்டாவது பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள 22 மொழிகளுள் ஒன்றாகவும் உள்ளது. இலங்கையில் மூன்று ஆட்சி மொழிகளுள் தமிழும் ஒன்று. இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்திலும் புதுச்சேரி ஒன்றியப் பகுதியிலும் தமிழ் அரச அலுவல் மொழியாக இருக்கிறது.

சிங்கப்பூர் நாட்டிலும் நாடளாவிய மொழிகளுள் ஒன்றாகத் தமிழ் இடம் பெற்றுள்ளது. தென்னாப்பிரிக்காவிலும் தமிழுக்கு அரசியலமைப்பு அங்கீகாரம் உள்ளது. மலேசியாவிலும் முதல் நான்கு ஆட்சி மொழிகளில் தமிழும் இடம்பெற்றுள்ளது. மலேசியாவில் தொடக்க இடைநிலைப்பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்படுகிறது. நாடு முழுவதும் 523 தமிழ்த் தொடக்கப்பள்ளிகள் அரசுப் பள்ளிகளாக இயங்குகின்றன.

பிராமியிலிருந்து தோன்றியது  தற்போது தமிழ்:

பிராமியிலிருந்து தோன்றியது தற்போது தமிழ்:

தமிழ் எழுத்து முறைமை ஒலிப்பியல் அடிப்படையிலானது குறுக்கம், அளபெடை, மற்றும் புணர்ச்சி நெறிகளுக்கு உட்பட்டே எழுத்துகள் ஒலிக்கப்படுகின்றன. தற்போதைய தமிழ் எழுத்துமுறை தமிழ் பிராமியிலிருந்து தோன்றியது ஆகும். தமிழ் பிராமி காலப்போக்கில் வட்டெழுத்தாக உருமாறியது. ஆறாம் நூற்றாண்டிலிருந்து பத்தாம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் "வட்டெழுத்து" முறை உருவானது. ஓலைச்சுவடிகளிலும், கல்லிலும் செதுக்குவதற்கேற்ப இருந்தது.

 கிரந்த எழுத்துமுறை:

கிரந்த எழுத்துமுறை:

வட்டெழுத்தில் சமஸ்கிருத ஒலிகள் குறிக்கப்பட முடியாது என்பதால் சமஸ்கிருத ஒலிகளை எழுதும் பொருட்டு சில கிரந்த எழுத்துமுறை கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்தினர். இவ்வெழுத்துக்களைப் பயன்படுத்துவதற்கு மாறாகத் தொல்காப்பியம் கூறியபடி அச்சொற்களைத் தமிழ்படுத்த வேண்டும் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.

 ஏலியன்கள்:

ஏலியன்கள்:

ஏலியன்கள் உலகில் தமிழை தவிர்த்து பல்வேறு மொழிகள் தோன்றக் காரணமாக இருந்துள்ளனர். இவர்கள் உலகில் நிகழும் மாற்றங்களுக்கும், அறிவியல் வளர்ச்சிகளுக்கும் தொழில் நுட்பத்திற்கும் காரணமாகவும் இருக்கின்றனர் என்று கூறப்படுகின்றது.

இவர்களை வேற்றுகிரக வாசிகள் (ஏலியன்) என்றும் கூறுகின்றனர். இவர்கள் தான் உலகிற்கு பல்வேறு இடங்களுக்கு மற்ற மொழிகளையும், அறிவியல் ஆராய்ச்சிகளையும் பரப்பியுள்ளனர்.

 சிக்களுக்கு தீர்வு:

சிக்களுக்கு தீர்வு:

பிளேடியன்கள் தான் மொழி வரலாறு, விஞ்ஞானம் ஆகியவற்றின் வளர்ச்சிக்கு காரணமாக இருப்பதாக கூறப்படுகின்றது. ஏலியன்கள் பல்வேறு நாட்டு மக்களுடன் தொடர்பில் இருப்பதாக அமெரிக்காவில் இது குறித்து ஆராய்ச்சி செய்யும் குழுவினர் கூறி வருகின்றனர்.

உலகத்தில் ஏற்படும் சிக்கல்களுக்கு தீர்வுகளும் பிளேடியன்கள் தான் கூறிவருவதாக அவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

அமெரிக்கா குழு:

அமெரிக்கா குழு:

அமெரிக்காவில் பிளேடியன்களுடன் தொடர்பில் உள்ள குழுவினர் உலகத்தில் நிகழும் பருவகால மாற்றம், பல்வேறு சிக்கல்களுக்கும் தீர்வும் கண்டுள்ளனர்.

இவர்கள் புத்தகங்கள் படிப்புது இல்லை. பிரச்னைகளுக்கு பிளேடியன்கள் தொடர்பு கொண்டு தீர்வும் கண்டு வருவதாக கூறப்படுகின்றது.

தமிழிலே உலகின் மூத்த  மொழி:

தமிழிலே உலகின் மூத்த மொழி:

நீண்ட காலமாக ஏலியன்களுன் தொடர்பில் உள்ள அமெரிக்காவை சேர்ந்த பேராசியர் அலெக்ஸ் காலியர் 1995ம் ஆண்டு தனது குழுவினர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.

அப்போது, பிளேடியன்களால் தான் மற்ற மொழிகள் உலகிற்கு பரப்பட்டது. அவர்களே உலகின் வளர்ச்சிக்கு காரணமாக இருக்கின்றனர். உலகில் முதலில் தோன்றிய மொழி தமிழ் தான் என்று கூறினார். தமிழ் தான் பேச்சப்பட்டது.

 ஏலியன்களுடன் தொடர்பு:

ஏலியன்களுடன் தொடர்பு:

உலகின் மூத்த மொழியே தமிழ் தான் என தனது குழுவினர்களுக்கு கூறினார். தமிழர்கள் ஏலியன் (பிளேடியன்) தொடர்பிலும் இருந்துள்ளனர். என்றும் அலெக்ஸ் காலியர் தெரிவித்துள்ளார்.

நோவாம் சோம்ஸ்கி:

நோவாம் சோம்ஸ்கி:

உலகின் மூத்த மொழி தமிழ் தான் என்று மொழியே ஆராய்ச்சியாளர் நோவாம் சோம்ஸ்கி கூறியுள்ளார். முதலில் பேசப்பட்டதும் தமிழ் தான் என்றும் நோவாம் சோம்ஸ்கீ தெரிவித்துள்ளார்.

உலகின் மூத்த மொழி:

உலகின் மூத்த மொழி:

தமிழ் தான் உலகின் தலைசிறந்த மொழி என்று சிறந்த அந்தஸ்தையும் பெறுகின்றது. மற்ற மொழிகளையும் காட்டிலும் பல்வேறு சிறப்புகளையும் பெற்றுள்ளது.

தற்போது ஏலியன்கள் வரை இந்த மொழி குறித்தும் தெரிவித்துள்ளனர். அவர்கள் தமிழை நன்கு உணர்ந்துள்ளனர்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Mysterious letter written by nun 'possessed by the Devil' finally decoded by software 341 years later. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more