வேற ஏதோ நடக்குது- விண்வெளியில் நடந்த அதீத மிகப்பெரிய வெடிப்பு: காரணம் என்ன., குழப்பத்தில் ஆய்வாளர்கள்!
வானியலாளர்கள் ஆழமான அண்டத்தின் ஒரு பகுதியில் சக்தி வாய்ந்த வெடிப்பு ஒன்றை கண்டறிந்துள்ளனர். ஆனால் இந்த வெடிப்புக்கான காரணம் மர்மமாக இருக்கிறது.

மாபெரும் வெடிப்பை கண்டறிந்த வானியலாளர்கள்
விஞ்ஞானிகள் சமீபத்தில் பூமியில் இருந்து சுமார் 130 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் ஒரு மாபெரும் வெடிப்பை கண்டறிந்தனர். பிரபஞ்சத்தின் அடர்த்தியான பொருட்களில் பிரதான ஒன்று சரிந்த நட்சத்திரங்கள். பிரதான மற்றும் சக்தி வாய்ந்த ஆற்றலை உருவாக்கிய அந்த வியத்தக பொருள் சமீபத்தில் மங்கத் தொடங்கியுள்ளது. இது நிகழ்ந்து ஏறக்குறைய மூன்றரை ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது புதிதான மற்றும் வினோதமான வெடிப்பு ஏற்பட்டு இருக்கிறது.

வேறு ஏதோ நடக்கிறது: வானியல் பேராசிரியர்
தற்போது வேறு ஏதோ நடக்கிறது என ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் வானியல் பேராசிரியரும் இந்த புதிய விண்வெளி நிகழ்வை கண்டறிந்த விஞ்ஞானிகளில் ஒருவருமான எடோ பெர்கர் மாஷெபல் தளத்திடம் தெரிவித்துள்ளார். பிரபஞ்சத்தின் மிகவும் வெப்பமான இடங்களில் இருந்து உமிழ்வை கண்டறியும் நாசாவின் சந்திரா எக்ஸ்ரே ஆய்வகத்தால் இந்த வெடிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்ட புதிய ஆராய்ச்சி முடிவு
அதேபோல் தி ஆஸ்ட்ரோபிசிகல் ஜர்னல் லெட்டர்ஸில் வெளியிடப்பட்ட புதிய ஆராய்ச்சியில், வானியலாளர்கள் கண்டறிந்த நிகழ்வ விளக்கும்படியான இரண்டு சாத்தியமான கூறுகை முன்மொழிந்தனர். இந்த நிகழ்வு குறித்து முன்னதாக எதுவும் கவனிக்கப்படவில்லை என ஆராய்ச்சி்கு தலைமை தாங்கிய வானியலாளர் அப்ராஜிதா ஹலெஜா விளக்கினார். அப்ராஜிதா வடமேற்கு பல்கலைக்கழகத்தில் இயற்பியல் மற்றும் வானியல்துறையில் முனைவர் பட்டம் பெற்றவர் ஆவார்.

கிலோனோவா க்ளோ ஆக இது இருக்கலாம்
கிலோனோவா க்ளோ ஆக இது இருக்கலாம் என கூறப்படுகிறது. கிலோனோவா க்ளோ என்பது இரண்டு நியூட்ரான் நட்சத்திரங்கள் அதாவது சுமார் 1 பில்லியன் டன் எடையுடன் நம்ப முடியாத அளவிற்கு பெரிதான அடர்த்தியான உடல் அமைப்புகள் உடன் நியூட்ரான்கள் கொண்ட நட்சத்திரங்கள் மோதும் நிகழ்வு கிலோனோவா எனப்படும். பிரபஞ்சத்திற்கும் நமது வாழ்க்கைக்கும் கிலோனோவாக்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

மகத்தான கிலோனோவா வெடிப்பு
அதேபோல் இதில் கவனிக்கத்தக்க ஒன்று, இந்த மகத்தான கிலோனோவா வெடிப்புக்கு பிறகு விண்வெளி குப்பைகள் அதிகரித்துள்ளது என கூறப்படுகிறது. மற்றொரு சாத்தியம் குறித்து பார்க்கையில், அவை வியத்தகு நியூட்ரான் நட்சத்திர இணைப்பு கருந்துளை உருவாக்கி இருக்கலாம் என கூறப்படுகிறது. கருந்துறை புவியீர்ப்பு விசையில் வெளிச்சமும் கூட தப்பிக்க முடியாது என நாசா விளக்குகிறது. இரண்டு நியூட்ரான் நட்சத்திரங்கள் விண்வெளியில் மோதிக் கொண்டதில் ஆச்சரியமில்லை. ஒரு சூரிய குடும்பத்தில் ஒரு நட்சத்திரங்களுக்கு அருகில் மற்றொரு நட்சத்திரங்கள் சுற்றுவது பொதுவானதாகும். பல நடசத்திரங்களும் சூரியனை போன்ற தனிமையில் இருப்பதில்லை என்பது கவனிக்கத்தக்க ஒன்று. பல நட்சத்திரங்களும் சூரியனை போல் தனிமையில் இருப்பதில்லை என்பது கவனிக்கத்தக்க ஒன்று. பெரும்பாலான நட்சத்திரங்கள் ஒன்று அல்லது அதற்கு மேம்பட்ட தோழமை நட்சத்திரங்கள் உடன் காணப்படுகின்றன என ஹஜெலா விளக்கினார்.

காரணம் இதுவாக இருக்கலாம்
நட்சத்திரங்கள் வேகத்தை இழந்து பயணிக்கும் போது மோதலாம், இதன் விளைவாக பெரும் இணைப்புகள் மற்றும் ஆற்றல் வெடிப்புகள் ஏற்படும். வானியலாளர்கள் ஒரு கிலோனோவாவை கண்டறிந்துள்ளனர். இது நியூட்ரான் நட்சத்திர வெடிப்பினால் ஏற்பட்டதாக அல்லது கருந்துளை காரணமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கருந்துளைகளின் ஈர்ப்பு விசை
கருந்துளைகளின் ஈர்ப்பு விசை என்பது நாம் கணிக்க முடியாத அளவு இருக்கும். கருந்துளை அவற்றின் நீள்வட்ட சுற்றுப்பாதையில் சிக்கிக் கொண்ட விண்வெளி பொருள்கள் அனைத்தையும் விழுங்கும். கருந்துளை நோக்கி உறிஞ்சப்படும் பொருட்கள் தீவிர வெப்பத்தால் சூடாகும். அப்போது அந்த காட்சிகள் பிரகாசமாக இருப்பதால் அவை பூமியில் இருந்து கண்டறியமுடியும். அதேபோல் ஒரு நட்சத்திரம் கருந்துளைக்கு மிக அருகில் இருக்கும்போது அது கருந்துளையின் தனித்துவமான ஈர்ப்பு விசை காரணமாக உறிஞ்சி இழுக்கப்படுகிறது. சூரியனை விட ஐந்து மடங்கு பெரிதாக இருக்கும் நட்சத்திரங்களும் நட்சத்திர கருந்துளையாக மாறக்கூடும் வாய்ப்புள்ளது.
File Images
Source: mashable.com


Click it and Unblock the Notifications