உலக அரசியல் : ரஷ்யாவின் மாஸ்டர் பிளான்; கேட்டதும் திணறிப்போன நாசா.!

|

யார் முதலில் நிலவில் காலடி பதிக்கிறார்கள் என்று, சோவியத் ஒன்றியத்திற்கும், அமெரிக்காவிற்கும் இடையே நடந்த டோட்டி ஞாபகம் இருக்கிறதா.? அதுதான் ஸ்பேஸ் வார் (Space War) - விண்வெளி ஆராய்ச்சிகளில் உலக நாடுகளுக்குள் நடக்கும் முன்னிலை சார்ந்த போட்டி.!

உலக அரசியல் : ரஷ்யாவின் மாஸ்டர் பிளான்; கேட்டதும் திணறிப்போன நாசா.!

மூன் லேண்டிங் போட்டியில் அமெரிக்கா வெற்றி பெற்றதில் இருந்து, இன்று வரையிலாக ரஷ்யாவின் முக்கால்வாசி விண்வெளி ஆராய்ச்சிகள் அமெரிக்காவை தோற்கடிக்க வேண்டுமென்ற எண்ணத்திலேயே தான் உருவாகின்றன.

திகிலூட்டும் மற்றும் மிகவும் விபரீதமான..

திகிலூட்டும் மற்றும் மிகவும் விபரீதமான..

அப்படியாக ரஷ்யாவால் உருவாக்கப்பட்டுள்ள ஒரு திகிலூட்டும் மற்றும் மிகவும் விபரீதமான "ந்யூக் என்ஜீன்" என்ற விண்வெளி ஆய்வானது விரைவில் அரங்கேறவுள்ளது. அதென்ன விபரீதம்.? அதன் பின்னணியில் உள்ள உலக அரசியல் என்ன.? இதனால் நம் தலைக்கு மேல் ஆபத்துகள் உண்டா.?

நரகத்தை நோக்கியா பயணம்.!

நரகத்தை நோக்கியா பயணம்.!

தற்போதைக்கு நம்மிடம் உள்ள அதிநவீன என்ஜின்களை கொண்டு, பூமி கிரகத்தில் இருந்து செவ்வாய்க்கு செல்ல 18 மாதங்கள் வரை ஆகும். அதுவும் 'ஓன் வே ட்ரிப்' அதாவது, பூமியில் இருந்து செவ்வாய்க்கு செல்வதற்கு மட்டுமே 18 மாதங்கள். சரி திரும்பி வர ஒரு 18 மாதங்கள் ஆகும், அவ்வளவுதானே.? என்று ஈஸியாக ஒரு முடிவுக்கு வந்துவிட வேண்டாம்.

அங்கேயே மரணிக்க வேண்டியது தான்.!

அங்கேயே மரணிக்க வேண்டியது தான்.!

இந்த ஒருவழி பயணத்தின் இடைப்பட்டகாலத்தில் அலுப்பு, கதிர்வீச்சு நச்சு, புற்றுநோய் உட்பட மனிதர்கள் மரணிக்கும் சாத்தியமான ஆபத்துகளை சந்திக்க நேரிடலாம். மீறி செவ்வாய் கிரகத்தை அடைந்தால் அங்கேயே மரணிக்க வேண்டியது தான். ஏனெனில் அங்கிருந்து திரும்பி பூமிக்கு வர வழிகள் இல்லை.? அதாவது எரிபொருள் இருக்காது.

திணறிப்போன நாசா.!

திணறிப்போன நாசா.!

திரும்பி பூமிக்கு வரும்படியான எரிபொருள் அறுவடை செய்யும் தளவாடங்கள் (logistics like fuel harvesting) செவ்வாய் கிரகத்தில் இன்றுவரை சாத்தியப்படவில்லை. ஆக, மரணம் என்று தெரிந்தே தான் நாம் செவ்வாய்க்கு செல்ல வேண்டும். நிலைமை இப்படியிருக்க, ரஷ்யாவின் தேசிய அணுசக்தி நிறுவனமான ரோசடோம் (Rosatom) வெளியிட்ட திட்டமொன்று, எதிரி நாடான அமெரிக்கா உட்பட பிற அனைத்து உலக விண்வெளி ஆராய்ச்சி மையங்களையும் அதிர்ச்சியில் திணற வைத்துள்ளது.

வெறும் 45 நாட்களில்..

வெறும் 45 நாட்களில்..

வெளியான ரோசடோம் திட்டத்தின்படி, தற்போது பயன்படுத்தும் விண்வெளி ஆராய்ச்சிகளுக்கான என்ஜின்களை தவிர்த்து, நுக்லியர் என்ஜின்தனை (Nuclear Engine) உருவாக்கி வெறும் 45 நாட்களில் செவ்வாய் கிரகத்தை அடைய முடியும். அதுவும் பூமி கிரகத்திற்கு திரும்பும்படியான எரிபொருள் வசதியுடன்.!

பலவகையான சிக்கல்களுக்கு தீர்வு

பலவகையான சிக்கல்களுக்கு தீர்வு

நுக்லியர் என்ஜின்தனை எபப்டியாவது உருவாக்கி விட வேண்டுமென்ற முனைப்பில் ரஷ்யா இருந்தாலும் கூட, 2025-ஆம் ஆண்டிற்குள் அதன் செவ்வாய் கிரக பயணம் சாத்தியமில்லை. ஏனெனில் ரஷ்யாவின் நிதி நிலைமை அப்படி.!

1967-ஆம் ஆண்டிலேயே சோவியத் விஞ்ஞானிகள், அணுப்பிளவு மூலம் இயங்கும் செயற்கைக்கோள்களில் (fission-powered satellites) இருக்கும் பலவகையான சிக்கல்களுக்கு தீர்வுகளை கண்டறிந்து விட்டன. ஆக 2018-ஆம் ஆண்டில் நுக்லியர் என்ஜின் சோதனையை ரஷ்யா நிகழ்த்த அதிக வாய்ப்புள்ளது.

அமெரிக்காவும் கூட.? யாருக்கு தெரியும்.?

அமெரிக்காவும் கூட.? யாருக்கு தெரியும்.?

மறுகையில், சோவியத் ஒன்றியத்திற்கு முன்பே அதாவது 1965-ஆம் ஆண்டிலேயே (பனிப்போர் காலம்) அமெரிக்கா தனது அணு வெப்ப உந்துவிசை திட்டமான ஸ்னாப்-10ஏ (SNAP-10A) ப்ராஜெக்டை அறிமுகம் செய்திருந்தது இங்கே குறிப்பிடத்தக்கது. ஆக, அமெரிக்காவும் இதேபோன்றதொரு ஒரு மறைதிரை திட்டத்தில் செயல்படலாம், யாருக்கு தெரியும்.?

கிரகங்கள் தாண்டி பயணிக்கும் சக்தி.?

கிரகங்கள் தாண்டி பயணிக்கும் சக்தி.?

அதெல்லாம் ஒருபக்கம் அப்படியே இருக்கட்டும். பணபலமும், தொழில்நுட்ப பலமும் இருந்தால் மட்டும் போதுமா.? அறிவியலின் அடிப்படை ஆதரவு வேண்டாமா.? அதவாது அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய இரண்டு நாடுகளின் அணு வெப்ப உந்துவிசை திட்டங்களுமே இலகுரக சுற்றுப்பாதை அளவிலான செயற்கைக்கோள்களுக்கு மட்டுமே உதவும். அவைகள் உயர் உந்து சக்தியோ அல்லது கிரகங்கள் தாண்டி பயணிக்கும் சக்தியோ கொண்டவைகள் அல்ல.

ரஷ்யா விட்டுக்கொடுப்பதாய் இல்லை.!

ரஷ்யா விட்டுக்கொடுப்பதாய் இல்லை.!

2018-ஆம் ஆண்டு வாக்கில் நிலம் சார்ந்த சோதனை உலையை உருவாக்கிட வேண்டுமென தேசிய அணுசக்தி நிறுவனமான ரோசடோம் மிகவும் மும்மரமாக இந்த திட்டத்தில் களமிறங்கியுள்ளது. வழக்கமான உந்துவிசை என்ஜின்களான கெமிக்கல் ப்ரொபல்ஷன் (Chemical Propulsion) என்ஜீன்களுக்கும், நுக்லியர் என்ஜீன்களுக்கும் வேகத்தையும், விபரீதத்தையும் தவிர பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை.

மறைமுக அரசியல்.!

மறைமுக அரசியல்.!

நிச்சயமாக இந்த நுக்லியர் என்ஜின் உருவாக்கத்தில் ஒரு மறைமுகமான உலக அரசியலும் இருக்கிறது. அதாவது ரஷ்யா இந்த நுக்லியர் என்ஜின் உருவாக்கத்தில் வெற்றி பெற்று விட்டால் சர்வதேச ஒப்பந்தங்களில் அணு ஆயுத உருவாக்கங்களுக்காக, விண்ணபிக்க வேண்டிய அவசியம் இருக்காது. ஆக ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் என்பது போல நாசாவை முந்தி செவ்வாய் கிரகத்திற்கு நுழையவும்; அணு ஆயுத பலத்தை மென்மேலும் அதிகரித்து வைத்துக்கொள்ளும் ரஷ்யா திட்டமிட்டுள்ளது.

எல்லாவற்றிக்கும் மேலாக!

எல்லாவற்றிக்கும் மேலாக!

உருவாக்கம் பெறும் நுக்லியர் என்ஜின் ஆனது, தற்போது பயன்படுத்தப்படும் கெமிக்கல் ப்ரொபல்ஷன் என்ஜீன்கள் போல மிகவும் பாதுகாப்பானது இல்லை. எல்லாவற்றிக்கும் மேலாக நியூக் என்ஜீன் பொருத்தப்பட்டு ஏவப்பட்ட எல்லா ராக்கெட்களும் விண்வெளிக்குள் நிச்சயமாக நுழையும் என்ற உத்திரவாதமும் இல்லை, பூமியிலும் விழுந்து நொறுங்கலாம்.

எடுத்துக்காட்டாக..

எடுத்துக்காட்டாக..

கடந்த 1978-ஆம் ஆண்டு, விண்வெளிக்குள் செலுத்தப்பட்ட அணு சக்தியில் இயங்கும் சோவியத் செயற்கைக்கோள் ஒன்று, சுமார் 50,000 சதுர மைல்களுக்கு கதிரியக்கக் கழிவுகளை வெளியிட்டுக் கொண்டே வடக்கு கனடாவில் விழுந்து நொறுங்கியது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஆம், நீங்கள் நினைப்பது சரிதான் - நமது தலைக்கு மேல் கத்தியை தொங்கவிடப்போகிறது ரஷ்யா.!

Most Read Articles
Best Mobiles in India

English summary
Move over Nasa: Russia reveals plans for 2018 test of nuclear engine that could get cosmonauts to Mars in SIX WEEKS. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more
X