Subscribe to Gizbot

உலகின் அதிபயங்கர இரசாயன ஆயுதங்கள்.!!

Written By:

கால மாற்றம், தொழில்நுட்ப வளர்ச்சி இன்னும் பல்வேறு காரணங்கள், ஏதேதோ விளக்கங்கள் சாதாரண மக்களுக்குக் கடுகளவும் தெரியாமல், பணம் படைத்த அரசாங்கங்கள் மனித இனத்தையே அழிக்கும் தன்மை கொண்ட ஆயுதங்களைக் கண்டுபிடிப்பது, சோதனை செய்வது போன்ற பணிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டுக் கொண்டே தான் இருக்கின்றன.

உயிரியல், இயற்பியல், வேதியியல் பயன்படுத்தி உலகெங்கிலும் இருக்கும் பல்வேறு ஆய்வாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் தங்களது கற்பனையில் உருவாக்கி வெற்றி கண்ட சில அபாயகரமான இரசாயன ஆயுதங்களின் பட்டியலை தான் ஸ்லைடர்களில் வழங்கியுள்ளோம்.!!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
குளோரின்

குளோரின்

குளோரின் அணு நம் உடலில் செல்லும் போது, நுரையீரலில் இருக்கும் நீரில் கலந்து ஐதரசன் குளோரைடினை உருவாக்கும். இந்த ஐதரசன் குளோரைடு மனித குடலில் காணப்படுகின்றது. இதன் மூலம் பல்வேறு ராணுவ வீரர்கள் தங்களது உயிர் இழந்திருக்கின்றனர். ஐதரசன் குளோரைடு தொழிலகங்களில் பல்வேறு பயன்பாடுகளையும் வழங்குகின்றது குறிப்பிடத்தக்கது.

CS வாயு

CS வாயு

இந்த வாயு உயிரைப் பறிக்காது, ஆனால் அதிகளவு ஆபத்தானதாகும். டியர் வாயு என அழைக்கப்படும் இது போராட்டங்களில் ஈடுபடும் மக்களைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படுகின்றது. இந்த வாயு சளிச்சவ்வு மற்றும் கண்களில் எரிச்சலை உண்டாக்கும் தன்மை கொண்டதாகும். இந்த வாயுவை உட்கொள்ள நேரிடும் போது மூச்சுத் திணறல், தொண்டைப் பகுதிகளில் எரிச்சல், வாந்தி மற்றும் சில மணி நேரத்திற்குக் கண் பார்வையையும் பறிக்கும்.

கடுகு வாயு

கடுகு வாயு

மற்ற இரசாயன ஆயுதங்களைப் போன்று இல்லாமல் பரவும் இடங்களில் சுமார் 5 சதவீத மக்களின் உயிரைப் பறிக்கும். இது மனித தோளில் படும் போது கொப்புளங்களை ஏற்படுத்தி மூச்சுத் திணறல், தொண்டைப் பகுதிகளில் எரிச்சல் போன்றவற்றை உண்டாக்கும். இதில் தாக்கப்பட்டோர் உயிரைக் காப்பாற்ற முடியும் என்றாலும் நிரந்தர கண் பார்வையிழப்பு மற்றும் புற்று நோய் போன்றவற்றை ஏற்படுத்தும்.

ஆந்த்ராக்ஸ்

ஆந்த்ராக்ஸ்

இது இரசாயன ஆயுதம் இல்லை ஆனால் இது உயிரியல் சார்ந்த ஆயுதம் ஆகும். போர்க்களங்களில் அதிகப் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியதாகும். இவை சுற்றுச்சூழலில் சில நேரம் அப்படியே இருந்து பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 2001, ட்வின் டவர் விபத்து ஏற்பட்டவுடன் ஆந்த்ராக்ஸ் அனுப்பப்பட்டது. இதில் ஐந்து பேர் மரணித்ததோடு, இதன் தொற்று சுமார் 17 பேருக்குப் பாதிப்பை ஏற்படுத்தியது.

சரின்

சரின்

ஒரு துளி சரின் பயன்படுத்தி முழுவதும் வளர்ந்த மனித உயிரைப் பறிக்க முடியும். இது மனித உடலின் நரம்புகளுக்குள் புகுந்து உடல் இயக்கத்தை நிறுத்தும். இது வாசனை மற்றும் நிறமற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. மனித சரின் உடலில் செலுத்தப்பட்டதும் உடல் பாகங்கள் செயல் இழந்து போகும்.

விஎக்ஸ் (VX)

விஎக்ஸ் (VX)

விஎக்ஸ் மிகவும் ஆபத்தான பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடியதாகும். இது சுற்றுச்சூழலில் சில நாட்களில் துவங்கி, பல மாதங்கள் வரை இருக்கும். இது காற்றை விடக் கனமானதாக இருப்பதோடு உடலைச் செயல் இழக்கச்செய்து பல்வேறு உடல் உபாதைகளை ஏற்படுத்தும் தன்மை கொண்டதாகும்.

ஃபோஸ்ஜீன்

ஃபோஸ்ஜீன்

அல்ட்ராவைலட் வெளிச்சம் மற்றும் குளோரோஃபாம் மூலம் தயாரிக்கக் கூடியதாகும். இதன் வாசனை இருமல், மாரடைப்பு, நுரையீரல் கோளாறு போன்றவற்றை ஏற்படுத்தக்கூடியதாகும். இது மனித இரத்தத்தில் காற்றை நுழைய விடாமல் தடுத்து பாதிப்புகளைத் தாமதமாக உண்டாக்கும்.

ஏஜென்ட் ஆரஞ்சு

ஏஜென்ட் ஆரஞ்சு

வியட்னாம் போரில் காடழிப்புச் செய்ய ஏஜென்ட் ஆரஞ்சு பயன்படுத்தப்பட்டது. இதன் பாதிப்புகள் இன்றளவும் உணரப்படுகின்றது குறிப்பிடத்தக்கது. தெற்கு வியட்னாம் காட்டுப் பகுதிகளில் வீசப்பட்ட ஏஜென்ட் ஆரஞ்சு சுமார் 10 மில்லியன் ஹெக்டேர் பயிர் பாசன நிலங்களை அழித்ததோடு, சுமார் 400,000 மக்களைப் பாதித்தது.

நபாம்

நபாம்

தாக்குதலில் எல்லாப் பொருளிலும் ஒட்டு கொல்லும் நபாம், 1200 செல்ஷியஸ் வெப்பத்தில் எரியும் தன்மை கொண்டதாகும். மேலும் மணிக்கு சுமார் 70 மீட்டர் வேகத்தில் சுய நீடிப்பு தீ புயலை உருவாக்கும் திறன் கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கண்டுபிடிப்பு

கண்டுபிடிப்பு

பல்வேறு காரணங்களுக்காகக் கண்டறியப்பட்ட இரசாயனங்கள், அதன் சோதனைக்குப் பிறகு, வெவ்வேறு விதங்களில் கால மாற்றத்திற்கு ஏற்ப பயன்படுத்தப்படுகின்றன என்பதே இங்குத் தொகுக்கப்பட்ட இரசாயனங்கள் எடுத்துக்காட்டுகின்றன. எனினும் மனித இனத்திற்கு மனித கண்டுபிடிப்புகள் தான் முக்கியக் காரணமாகவும் அமைகின்றன.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Most dreadful Chemical Weapons Tamil

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot