நிலவில் கால்பதித்த வீடியோ போலி இல்லை! காரணங்கள் மற்றும் ஆதாரமான வீடியோ இதோ.!

|

அப்பல்லோ 11 விண்கலம் நிலவில் தரையிறங்கிய அற்புதமான நிகழ்வு நடைபெற்று அரை நூற்றாண்டு ஆனாலும், இன்னும் பல மக்கள் அது உண்மையில் நடந்தது என்று நம்பவில்லை.

நிலவில் கால்பதித்த வீடியோ போலி இல்லை! காரணங்கள் இதோ.!

1970 களில் இந்த நிகழ்வு பற்றிய சதி கோட்பாடுகள் எப்போதும் மிகவும் பிரபலமாக உள்ளன. ஒரு பொதுவான கோட்பாடு என்னவெனில் திரைப்பட இயக்குனர் ஸ்டான்லி குப்ரிக் நாசாவின் ஆறு வெற்றிகரமான நிலவு தரையிறங்கல் நிகழ்வுகளின் வரலாற்று சிறப்புமிக்க காட்சிகளை போலியாக தயாரிக்க உதவினார் என்பது தான்.

போலியாக தயாரிக்க முடியாது

போலியாக தயாரிக்க முடியாது

ஆனால் அந்த காலக்கட்டத்தில் இருந்த தொழில்நுட்பத்தை வைத்து இதைச் சாத்தியமா?நான் ஒரு விண்வெளி பயண நிபுணரோ, பொறியாளரோ அல்லது விஞ்ஞானியோ அல்ல. நான் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் திரைப்பட தயாரிப்பு விரிவுரையாளராகவும் இருக்கிறேன் . எனவே 1969 இல் எப்படி சந்திரனில் நாம் தரையிறங்கினோம் என்பதை சொல்ல முடியாது. ஆனால் அந்த காட்சிகளை போலியாக தயாரிக்க முடியாது என்பதை நான் உறுதியாக கூறமுடியும்.

விளக்கங்களையும் இங்கே காணலாம்

விளக்கங்களையும் இங்கே காணலாம்

அதுதொடர்பான மிகவும் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் கேள்விகள் சிலவும், அவை ஏன் உண்மையாக இருக்க முடியாது என்பதற்கான விளக்கங்களையும் இங்கே காணலாம்.

அடேங்கப்பா என சொல்லவைக்கும் விலையில் சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!அடேங்கப்பா என சொல்லவைக்கும் விலையில் சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

"நிலவு திரையிறங்கல் நிகழ்வு டிவி ஸ்டூடியோவில் படமாக்கப்பட்டது"

நிலவு தரையிறங்கும் நிகழ்வை டிவி ஸ்டுடியோவில் தான் படம்பிடித்தனர் என வாதத்திற்கு வைத்துக்கொண்டாலும் கூட, அப்போதிருந்த தொலைக்காட்சி தரநிலைகளின் படி நொடிக்கு 30 ப்ரேம்கள் வீடியோவில் இருக்க வேண்டும். ஆனால் முதல் நிலவு தரையிறங்கல் நிகழ்வானது எஸ்எஸ்டிவி எனும் சிறப்பு கேமரா மூலம் நொடிக்கு 10 ப்ரேம்கள் என பதிவுசெய்யப்பட்டுள்ளது.

143 நிமிட ஸ்லோமோசன் வீடியோ

"அப்போலோ சிறப்பு கேமராவை வைத்து ஸ்டூடியோவில் படம் பிடித்து, குறைந்த ஈர்ப்புவிசை உள்ளதை போல காண்பிக்க வீடியோ வேகத்தை குறைத்துள்ளனர்"


காட்சியில் மனிதர்கள் ஸ்லோமோசனில் செல்வதால், குறைந்த ஈர்ப்புவிசையுள்ள பகுதியில் இருப்பது போன்ற தோற்றம் ஏற்படும் என சிலர் நினைக்கின்றனர். ஆனால் காட்சிகளின் வேகத்தை குறைக்கும்போது, ப்ரேம்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அப்போதைய மேக்னெடிக் டிஸ்க் ரெக்கார்டர்கள் 30 நொடி வீடியோவை மட்டுமே சேமிக்கும் திறன் கொண்டவை. அது ஸ்லோமோசன் வீடியோவாக 90 நொடிகள் ஓடும். எனவே 143 நிமிட ஸ்லோமோசன் வீடியோவிற்கு 47 நிமிடம் பதிவு செய்யவேண்டும். இது சாத்தியமில்லா ஒன்று.

சூப்பர் சீக்ரெட் எக்ஸ்ட்ரா ஸ்டோரேஜ்

சூப்பர் சீக்ரெட் எக்ஸ்ட்ரா ஸ்டோரேஜ்

"ஒருவேளை நாசா ஸ்லோமோசன் வீடியோவை உருவாக்க மேம்பட்ட ஸ்டோரேஜ் ரெக்கார்டரை பயன்படுத்தியிருக்கலாம். பொதுமக்களுக்கு கிடைக்கும் முன்பு தொழில்நுட்பங்கள் முதலில் நாசாவிற்கு கிடைக்கும் என அனைவரும் அறிவர்"

சூப்பர் சீக்ரெட் எக்ஸ்ட்ரா ஸ்டோரேஜ் ரெக்கார்டரை பயன்படுத்தியிருக்கலாம்.ஆனால் 3000 மடங்கு மேம்பட்டது சாத்தியமா?


"ப்லீம்-ல் படம்பிடித்து காட்சிகளின் வேகம் குறைக்கப்பட்டு, பின்னர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் வகையில் மாற்றப்பட்டுள்ளது"

சென்னை: ஏடிஎம் இயந்திரத்தில் ஸ்கிம்மர், கேமரா: உஷார் மக்களே.!சென்னை: ஏடிஎம் இயந்திரத்தில் ஸ்கிம்மர், கேமரா: உஷார் மக்களே.!

 அப்போலோ 11

அப்போலோ 11

கடைசியில் இந்த சந்தேகத்தில் உண்மை உள்ளது. ஆனால் அதை படம்பிடிக்க ஆயிரக்கணக்கான அடி நீளமுள்ள ப்லீம்கள் தேவை. 35மிமீ ப்லீம் ரீலானது ஒரு நொடிக்கு 24 ப்ரேம்கள் வீதம் என வைத்துக்கொண்டால் 11நிமிட காட்சிகள் பதிவு செய்யமுடியும் மற்றும் அதன் நீளம் 1000 அடி இருக்கும். நொடிக்கு 12 ப்ரேம்கள் என வைத்துக்கொண்டாலும், 143நிமிடங்கள் கொண்ட அப்போலோ 11 காட்சிகளை பதிவுசெய்ய 6.5 ரீல்கள் தேவை. இவையெல்லாம் வைத்து பார்க்கும்போது இவ்வாறு செய்வது சாத்தியமில்லை என தெரிகிறது.

 ஒளி ஸ்பாட்லைட்டில் இருந்து வருவது தெளிவாகிறது

ஒளி ஸ்பாட்லைட்டில் இருந்து வருவது தெளிவாகிறது

"நிலவில் காற்றே இல்லாத போது, கொடி பறக்கிறது. எனவே அந்த காற்று ஸ்டூடியோவில் உள்ள ஃபேனில் இருந்து வரும் காற்று அல்லது இதை பாலைவனத்தில் படம்பிடித்திருக்க வேண்டும்"

கொடியை நாட்டும் போது அது பறந்ததே தவிர, அதன் பிறகு அது சமநிலைக்கு திரும்பி பின்னர் வீடியோ முடியும் வரை அசையவே இல்லை.


" வீடியோவில் உள்ள ஒளி ஸ்பாட்லைட்டில் இருந்து வருவது தெளிவாகிறது. நிழல்களும் விசித்திரமாக உள்ளன"

நிழல் நடுப்புள்ளியில் இருந்து வந்திருக்கும்

நிழல் நடுப்புள்ளியில் இருந்து வந்திருக்கும்

ஆம். அந்த ஒளி ஸ்பாட்லைட்லிருந்து வரும் ஒளிதான். 93மில்லியன் மைல் தொலைவிலுள்ள அதன் பெயர் சூரியன். ஒளி மூலம் அருகிலிருந்தால், நிழல் நடுப்புள்ளியில் இருந்து வந்திருக்கும். ஆனால் அது மிகத்தொலைவில் இருப்பதால், நிழல்கள் ஒரு புள்ளியில் இருந்து மாறுபடாமல் இணையாகவே உள்ளன.

Best Mobiles in India

English summary
Moon Landing Footage Would Have Been Impossible to Fake Heres Why : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X