அப்போலோ 11 மிஷனில் ஏலியன்கள்! ஆதாரத்தை அழித்த நாசா..!

|

ஜூலை 20, 1969 அன்று முதன்முதலில் நிலவில் மனிதன் காலடி எடுத்துவைத்து தற்போது பொன்விழா ஆண்டை நாசா நெருங்கிவருகிறது நிலையில், இன்னும் சிலர் மனிதர்களின் கண்களுக்கு காண்பிக்கப்படாத பல்வேறு இரகசியங்கள் இருப்பதாக கூறுவருகின்றனர்.

நிலவில் ஏலியன்கள்

நிலவில் ஏலியன்கள்

நிலவில் ஏலியன்கள் இருப்பது பற்றி நாசா அறிந்திருக்கிறது என்றும், அதுதொடர்பான அப்போலோ 11 மிஷனின் 40 ஃபிலிம் ரோல்களை அந்நிறுவனம் அழித்துவிட்டதாகவும் சதிகோட்பாட்டாளர்கள் முதலில் கூறத்துவங்கினர். நேட்டோ-வின் ஐரோப்பிய கூட்டு அதிகார உச்ச தலைமையகத்தில் ( Supreme Headquarters Allied Powers Europe (SHAPE) of NATO) பணியாற்றியவரும், அமெரிக்க இராணுவ காமாண்ட் சார்ஜென்ட் மேஜருமான பாப் டீன் இக்கருத்தை வெளியிட்டதால் பேசுபெருளாக மாறியுள்ளது.

 40 ரோல் ப்லிம்களை அழித்தது

40 ரோல் ப்லிம்களை அழித்தது

இதுதொடர்பாக டீன் கூறியதாவது "பெரியோர்களே தாய்மார்களே, என் அரசாங்கம், நாசா ஆகியவை பற்றி அமெரிக்காவில் உள்ள பலர் கூறுவது இது பற்றி எப்போதும் நேரடியான பதில் இல்லை என்பதுதான். நிலவில் விண்கலம் இருப்பது, சந்திரன் சுற்றி வருவது, நிலவில் தரையிறங்குவது, விண்வெளி வீரர்கள் அங்கேயும் இங்கேயும் நடப்பது என அப்போலோ மிஷனின் 40 ரோல் ப்லிம்களை அழித்தது ஏன் என இன்னும் விளக்கமளிக்கவில்லை.


கிறிஸ்துவின் பொருட்டு, அந்த நிகழ்வுகளின் 40 ரோல் பிலிம்களை அவர்கள் அழித்துள்ளனர்" என்கிறார்.

ஏலியன் கோட்பாடு

ஏலியன் கோட்பாடு

இருப்பினும் வெளிப்படுத்தும் திட்டம் மற்றும் வேற்று கிரக நுண்ணறிவு ஆய்வு மையத்தின் (சி.எஸ்.இ.டி.ஐ.) நிறுவனர் டாக்டர் ஸ்டீவன் கிரீர், ஏற்கனவே எரிந்துவரும் ஏலியன் கோட்பாடு எனும் நெருப்பில் மேலும் எண்ணெய் ஊற்றியுள்ளார். இதுதொடர்பாக அவர் நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் பஷ் அல்ட்ரின் உடன் நெருங்கிய நண்பர்களும் சேர்ந்து இரகசிய விவாதங்களில் பங்கேற்றதாக தெரிவித்துள்ளார்.

வர வர உங்க சேட்டை எல்லாம் அளவே இல்லாம போயிட்டு இருக்கு! சிலைகளுடன் குறும்பு!வர வர உங்க சேட்டை எல்லாம் அளவே இல்லாம போயிட்டு இருக்கு! சிலைகளுடன் குறும்பு!

நிலவில் முதல்முதலில் கால்பதித்தவர்களின் நெருக்கமான நண்பர்கள்

நிலவில் முதல்முதலில் கால்பதித்தவர்களின் நெருக்கமான நண்பர்கள்

நிலவில் முதல்முதலில் கால்பதித்தவர்களின் நெருக்கமான நண்பர்கள், நிலவில் ஏலியன்கள் இருப்பதற்கான ஆதாரங்களை அவர்கள் இருவரும் பார்த்ததை ஒப்புக்கொண்டதாக டாக்டர் ஸ்டீவன் கூறுகிறார்.

ஏலியன் பறக்கும் தட்டு

ஏலியன் பறக்கும் தட்டு

இதுகுறித்து அவரது வலைதளத்தில் எழுதியதாவது," நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் பஷ் அல்ட்ரின் ஆகிய இருவரின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் நெருக்கமான குடும்ப உறுப்பினர்கள் தன்னிடம் தனித்தனியாக பேசியபோது, சந்திரனில் அவர்களது லூனார் மாடியூல் தரையிறங்கிய போது, அந்த பள்ளத்தாக்கை சுற்றிலும் ஏராளமான மிகப்பெரிய ஏலியன் பறக்கும் தட்டுகளை இருவரும் பார்த்ததாக தெரிவித்துள்ளனர். மேலும் இந்த நிகழ்வின் வீடியோ காட்சிகளைப் பார்த்துள்ள இராணுவ அதிகாரிகளுடனும் நான் பேசினேன். ஆனால் அது ஒருபோதும் பொதுமக்களுக்கு வெளியிடப்படவில்லை " என எழுதியுள்ளார்.

இந்தியா: கூகுள் மேப்ஸ் செயலியில் வந்தது புத்தம் புதிய அம்சங்கள்.!இந்தியா: கூகுள் மேப்ஸ் செயலியில் வந்தது புத்தம் புதிய அம்சங்கள்.!

ஏலியன்களிடம் இருந்து வந்ததாக தெரியவில்லை

ஏலியன்களிடம் இருந்து வந்ததாக தெரியவில்லை

இருப்பினும், தான் ஏலியன் விண்கலங்களை பார்த்ததாக உலவிவரும் தகவலை பற்றி பஷ் அல்ட்ரின் நேரடியாக விளக்கமளிக்கையில், ஒளியை பார்த்ததாகவும், அவை ஏலியன்களிடம் இருந்து வந்ததாக தெரியவில்லை எனவும் விளக்கமளித்துள்ளார்.

ஜன்னல் வழியாக பார்த்தேன்

ஜன்னல் வழியாக பார்த்தேன்

2014ல் நடைபெற்ற ஒரு கேள்வி பதில் நிகழ்வில் டாக்டர். அல்ட்ரின் கூறுகையில், " அப்போலோ 11ல் நிலவிற்கு செல்லும் வழியில்,எங்களுடனேயே பயணிக்கும் ஒளியை ஜன்னல் வழியாக பார்த்தேன்" என கூறியுள்ளார்.

 ஏற்கனவே பல விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன

ஏற்கனவே பல விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன

ஆனால் அதுதொடர்பாக ஏற்கனவே பல விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன. அது மற்றொரு நாட்டிலிருந்து அல்லது மற்றொரு உலகத்திலிருந்து வந்த மற்றொரு விண்கலமாக இருந்திருக்கலாம் அல்லது நாங்கள் பிரிந்துவந்த ராக்கெட்-ஆக இருக்கலாம், அல்லது ராக்கெட்டிலிருந்து இருந்து லேண்டரை பிரித்தெடுக்கையில் விலகிய 4 பேனல்களாக அல்லது இரண்டு விண்கலங்களும் மிக நெருக்கமாக இருந்திருக்கலாம் என்கின்றனர்.

சூரியனின் பிரதிபலிப்பை நாங்கள் பார்த்திருப்போம்

சூரியனின் பிரதிபலிப்பை நாங்கள் பார்த்திருப்போம்

"எனவே மிகவும் நெருக்கமான அருகே நகரும் வகையில் நான்கு பேனல்கள் இருந்தன. அவற்றில் ஏதாவது ஒன்றில் சூரியனின் பிரதிபலிப்பை நாங்கள் பார்த்திருப்போம் என்று நான் திடமாக நம்புகிறேன். " என்று அவர் கூறுகிறார்.

Best Mobiles in India

English summary
moon-landing-apollo-11-mission-aliens-ufo-buzz-aldrin-neil-armstrong-nasa : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X